14 Dec 2014

BEHOLD, THE BRIDEGROOM COMES!

இயேசு வருகிறார்...... ஆயத்தமாவோம்....

".... இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர் கொண்டு போக புறப்படுங்கள்....." மத்தேயு 25:6
 
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்! இயேவின் முதல் வருகையை கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், இந்த செய்தியின் மூலமாக உங்களை சந்திக்கின்றேன்.
 
இந்த தலைப்பில் நாம் தியானிக்கப் போகும் வசனங்கள் மத்தேயு 25:1 முதல் 13 வசனங்கள் வரை அடங்கியிருக்கின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு உவமை இது. பத்து கன்னிகைகளை குறித்து சொன்னது.
 
பரலோக ராஜ்ஜியம் இந்த பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாய் இருக்கிறது. இந்த பத்துபேரும் விசுவாசிகள்தான், அவிசுவாசிகள் அல்ல. சுத்தமான கிறிஸ்தவர்கள். இயேசு சீக்கிரமாய் வருகின்றார் என எதிர் பார்த்தவர்கள்தான். யாருமே அவர் எப்படி வருவார்? பஸ்ஸில் வருவாரா? டிரைனில் வருவாரா? மேற்கே இருந்து வருவாரா? தெற்க்கே இருந்து வருவாரா? என இடக்காக கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. எல்லாரும் இயேசு சீக்கிரம் மேகமீதினில் வருவார் என விசுவாசித்தவர்கள் தான். இந்த பத்து பேரும் ஆயத்தமானார்கள் மணவாளனை சந்திக்க.
 
ந்து பேர் புத்திசாலிகளாய் இருந்தனர், ஐந்து பேர் முட்டாள்களாய் இருந்தனர். அவர்கள் தங்கள் தீவட்டிகளோடு எண்ணையையும் கூடவே எடுத்து வந்தனர்.  பகலில் வந்தால் தீவட்டி எதற்கு? இயேசு பகலில் வராமல் இரவில்தான் வருவாரா? இயேசு கூறிய இந்த உவமையில் மணவாளன் இரவில்தான் வருகிறார். இது ஒரு திருமணத்துக்கு ஒப்பிடப் பட்டுள்ளதால், இஸ்ரவேலர்களின் வழக்கப்படி, மணமகன் எப்போழுதுமே இரவில்தான் வருவார். இங்கே இரவா? பகலா? என்பது கேள்வியில்லை. இயேசு எந்த வினாடியிலும் வருவார்.
 
ங்கே தீவட்டி என்பது, உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை. அது எரிந்து கொண்டிருக்க வேண்டும். வேத வசனங்களைப் பிடித்துக் கொண்டு சுடர்களைப் போல பிரகாசிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை வேத வசனத்தின் அடிப்படையில் உள்ளதா? அல்லது உங்களின் விருப்பப்படி வசனத்தை வளைத்து வாழ்கின்றீர்களா? இன்று கிறிஸ்தவர்களில் அநேகருக்கு ஆவிக்குரிய அன்பைப்ப்ற்றியே தெரியவில்லை. இயேசுவை நேசிக்கின்றோம் என்கின்றார்கள், எப்படி நேசிக்கிக வேண்டும் என தெரியவில்லை. யோசித்துப் பாருங்கள்! வேத வசனத்தின்படி வாழ்வது மிக மிக எளிதானது. இயேசுவை நம்மில் வாழ அனுமதிக்கும் பொழுது நாம் போராடிக் கொண்டிருக்க தேவையே இல்லை. 
 
இங்கே எல்லாருடைய தீவட்டிகளும் எரிந்து கொண்டிருந்தன. மணவாளன் வர தாமதித்த பொழுது என்ன நடந்தது? எல்லோருமே தூங்கிவிட்டனர். எல்லாரும் அறியாத நேரத்தில் வருவார் என்பதை வைத்து பூனை போல யாருக்கும் தெரியாதபடி வருவார் என நினைக்கின்றனர். இயேசு வரும் நேரந்தான் மறைத்து வைக்கப் பட்டுள்ளதே தவிர வரும் பொழுது பிரதான தூதனுடைய எக்காள சத்தத்தோடு இந்த உலகத்திற்கே தெரியும்படி மத்திய ஆகாயத்தில் வருவார்.
 
மணவாளன் வர தாமதித்த பொழுது, எல்லோருமே தூங்கி விட்டனர். பலவேறு சூழ்நிலையிலே வந்தவர்களுக்கு  உடல் சோர்வு தூக்கத்தைக் கொண்டுவந்தது. மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர்கொண்டு போக புறப்படுங்கள் என்ற சத்தம் உண்டான பொழுது பத்து பேரும் எழுந்தனர். அனைவரும் ஆயத்தப் பட்டனர். தீவட்டி மங்கி எரிந்ததால்,  தீண்டி ஏற்றினர். எண்ணெய் ஊற்றினர். ஆனால் ஐந்து பேருடைய தீவட்டிக்கு எண்ணை இல்லாததால் மங்கி எரிந்து அணைந்து போனது. இங்கு எண்ணை என்பது சாட்சியுள்ள வாழ்க்கையைக் குறிக்கின்றது. 
 
தம்முடைய விருப்பத்தின் படி வாழ்ந்தவர்கள்! தமது வாழ்க்கைக்காக வசனத்தை வளைத்தவர்கள். ஆண்டவர் எல்லாவற்றையும் மன்னித்துவிடுவார் என்னெனில் நான் அவருடைய செல்லப் பிள்ளை. நரகம் என்று ஒன்றே கிடையாது. தேவன் அன்புள்ளவராய் இருந்தால் நரகத்தைப் படைப்பாரா? (அது பிசாசுகளுக்காக படைக்கப்பட்டது என அறியாதவர்கள்) படைத்த எல்லாவற்றையும் நல்லது எனக் கண்ட ஆண்டவருடைய பிள்ளைகள் - நாள், நட்சத்திரம் பார்க்கின்றவர்கள். (கடவுளே இல்லை என்பவர்கள் கூட இவர்களது எம கண்டத்தில் திருமணம் முடிக்கின்றார்கள்) ஆண்டவரைப் பிரியப்படுத்தி வாழாமல் தங்களையே பிரியப்படுத்தி வாழ்கின்றவர்கள்; ஊழியர்களுக்காக, ஊழியங்களுக்காக ஜெபிக்காமல் ஊழியர்களைக் குற்றப்படுத்தி வாழ்ந்தவர்கள்; ஆண்டவருடைய அன்பை ருசி பார்த்தவர்கள், ஆனால் பிரச்சனை வந்த பொழுது மறுதலித்தவர்கள். நன் மதிப்பைத் தேடி போய் பேசியவர்கள்; பிறருக்காக வாழாமல் தனக்காகவே வாழ்ந்தவர்கள்; பாவ மன்னிப்பின் நிச்சயத்தை மையமாக்கி வாழாமல் பணத்தையே மையமாக்கி வாழ்ந்தவர்கள்; பணத்துக்காக அரசாங்கத்தை ஏமாற்றி வாழ்பவர்கள்; ஆணால் கிறிஸ்தவர்கள்.

எண்ணெய் வைத்திருந்தவர்கள்:

தேவனுக்கு பயந்து வாழ்ந்தவர்கள்; தாங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் ஆண்டவருக்கு பிரியமாயிருக்குமா? என தேவனை தேடியவர்கள்; இவர்கள் ஆண்டவருடைய சித்தத்தை அறிந்து அதன்படி வாழ்ந்தவர்கள்; தங்கள் நடவடிக்கை யாவற்றிலும் இயேசுவைக் காட்டியவர்கள்; எந்த பிரச்சனை வந்தாலும் வேத வசனத்துக்கு மட்டும் கீழ்படிய ஒப்புக் கொடுத்தவர்கள்; மனிதர்கள் தவறாக நினைத்தாலும் தான் உண்மையாகவே இருப்பேன் எனத் தீர்மானித்தவர்கள்; தங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்து அவர்களுக்காக ஜெபித்தவர்கள்; தங்கள் வாழ்க்கையில் வேதவசனத்துக்கே முதலிடம் கொடுத்தவர்கள்; பிறரை நல்ல வழியில் நடத்தியவர்கள்; தான் இரட்சிக்கப்பட்டதைப் போலவே, பிறரும் இரட்சிக்கப்படவேண்டுமே என்ற ஆதங்கத்தில் பிரயாசப்பட்டவர்கள்; தன்னுடைய தவறு வெளிப்படும் போது, மனத்தாழ்மையாக அதை ஏற்றுக் கொண்டு, சரி செய்ய முயற்சித்தவர்கள்; செயலைக் காட்டிலும் நோக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள்; தரிசனத்தை அடைய தங்கள் வழியை சுத்தம் செய்தவர்கள்; பிறருடைய இடத்தை அபகரிக்க எண்ணாதவர்கள்; தாங்கள் முன்னேறுவதற்கு குறுக்கு வழியைத் தேடாமல், ஆண்டவருடைய வழியைத் தேடியவர்கள்; இப்பிரபஞ்சத்துக்கு ஏற்ற ஒத்த வேஷம் தரியாதவர்கள். இவர்களும் கிறிஸ்தவர்கள்தான். இவர்களிடம் இருப்பதுதான் எண்ணெய். 

எண்ணெய் இல்லாதவர்கள் தாங்கள் மீண்டும் பூமிக்குப் போய் ஒரு நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து எண்ணெய் சம்பாதித்துக் கொண்டு வருகின்றோம் என கடையைத் தேடி போய்விட்டனர்.

அந்த நேரத்தில் மணவாளன் வந்து விட்டார். எண்ணெய் இருந்தவர்கள், வருகையில் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். எண்ணெய் இல்லாதவர்கள் மீண்டும் உலகத்த்குள் போய் ஆண்டவருக்குப் பிரியமாய் வாழ்ந்து எண்ணெய் வாங்கி வருவதற்குப் போன போது கைவிடப்பட்டார்கள்.

வாழ்ந்து எண்ணெய் சந்பாதித்துக் கொண்டு வந்து எங்களையும் உள்ளே அனுமதியுங்கள் என அவர்கள் கதவைத் தட்டிய பொழுது உங்களை அறியேன் எனக் கூறிவிட்டார். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஆண்டவர் கனியுள்ள, கீழ்படிதலுள்ள வாழ்க்கை வாழ உங்களை அழைக்கின்றார்.

ஜெபிப்போமா?

எங்களை நேசிக்கின்ற அன்பின் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு மகிமையை செலுத்துகின்றோம். உமக்கு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து உமக்கு மகிமையை சேர்க்க எங்களுக்கு கிருபை செய்யும். "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்...." நீதி.28:20ன் படி எங்களை ஆசீர்வதியும். இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென். 
     

11 Dec 2014

WE WISH YOU A MERRY CHRISTMAS!

கிருஸ்துமஸ் தேவ செய்தி
 
"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன்; நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்" ஏசாயா 9:6.
 
ந்த இடத்தில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! ஆண்டவருடைய பிறப்பின் நாளைக் கொண்டாட ஆயத்தப்படுகிற உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்! வரும் ஆண்டிலும் தேவன் தம்முடைய பிள்ளைகளை இந்த வாக்கின்படி ஆசீர்வதிப்பார்!
 
ந்த வசனத்தில் நமது இரட்சகருக்கு ஐந்து பெயர்கள் சூட்டப் பட்டுள்ளது. இங்கு நான் வெறுமனே பெயர்களை விவரிக்க விரும்பவில்லை. இந்த ஐந்தும் அவருடைய இயற்கையான, மகிமையான தன்மையாகும்
 
1.அதிசயமானவர்:
யேசு கிறிஸ்துவின் பிறப்பே அதிசயமானது.
 
"இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்......"மத்தேயு 1:23
கிறிஸ்து பிறப்பதற்கு முன் 7௦௦ ஆண்டுகளுக்கு முன்பதாகவே, இயேசுவின்  பிறப்பை  முன் அறிவித்த ஏசாயா என்னும் தீர்க்கதரிசி, 7:14ல், 
 
"ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்,....."
 
கூறிய தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது. கன்னிகையின் வயிற்றிலே பிறந்ததே ஒரு அதிசயந்தானே! அதிசயமானவர் என்றால் அதிசயம் நிறைந்தவர், ஆச்சரியத்தைத் தூண்டுபவர் என்று பொருள் படும். இயேசு பிறந்த பொழுது மந்தையைக் காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு அது அதிசயம்! வான சாஸ்திரிகளால் அந்த நாட்டு மன்னனுக்கு இயேசுவின் பிறப்பு ஒரு அதிசயம்! இப்படி ஏழை மக்களில் இருந்து நாட்டை ஆளும் மன்னன் வரை ஆச்சரியப்பட்டார்கள்! 
 
னோவா என்பவருக்கு பல வருடங்களாக பிள்ளையில்லை. மேலும் இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தியரின் அடிமைகளாக இருந்தனர். இவர்களை விடுவிக்க ஒரு விடுதலை வீரன் தேவைப்பட்டார். தேவனுடைய தூதன் மனோவாவின் மனைவியிடம் அனுப்பப்பட்டார். பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும்? என்ற வழிகாட்டுதலைப் பெற்ற பின், இது நிறைவேறும் பொழுது நாங்கள் உம்மைக் கனப்படுத்தும்படிக்கு உமது பெயர் என்ன? என்றார்கள். கனத்தை நீ கர்த்தருக்குச் செலுத்து எனக் கூறியபின், என் பெயரைக் கேட்பானேன், அது அதிசயம் என்றான்.
 
தை வாசிக்கிற நீங்களும் அதிசயமான கர்த்தரை கனப்படுத்தும் போது / மகிமைப்படுத்தும் போது, மனோவாவுக்கு செய்த அதே அற்புதத்தை உங்களுக்கும் செய்வார்.
 
2. ஆலோசனைக் கர்த்தர்:
 
"எனக்கு வழிகாட்டியாய் இருக்கிற தேவனுக்கு நான் துதிகளைச் செலுத்துவேன்; இரவிலே எனது நினைவுகளில் இருந்து எனக்கு அறிவு வரும்" சங்கீதம் 16:7. (BIBLE IN BASIC ENGLISH)
 
மேலே உள்ள வசனத்தின்படி, நான் ஆண்டவரைப் புகழ்ந்து துதிக்கும் பொழுது, இரவிலே தமது ஆலோசனையைத் தருகின்றார். ஆலோசனை கொடுக்கக் கூடியவரின் தகுதி:
 
"ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாய் இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? ரோமர் 11:33,34
 
"ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும்  எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவ பெலனும் தேவ ஞானமுமாயிருக்கிறார்" 1 கொரிந்தியர் 1:24
 
"அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது" கொலோ. 2:3.
 
ப்படிப்பட்ட ஆண்டவரைத் துதித்து, ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுவதைத் தவிர்த்து நாம் எங்கெல்லாமோ அலைகிறோம். ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்திருந்தோமானால் நாம் ஆண்டவரை விடவே மாட்டோம். இந்த கொண்டாட்டத்தின் நாட்களில் நாம் ஆண்டவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுவோம். கடைசியாக, நீதி.8:23ல்,
 
"ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது"
 
3. வல்லமையுள்ள தேவன்:
ங்கள் சிறுவர் ஊழியத்தில் பிள்ளைகளுக்கு படங்களை வைத்து சத்தியத்தைப் போதிக்கும் பொழுது,
 
"வானத்தில் என்னவெல்லாம் இருக்கிறது?"
 
"மேகம், சூரியன்,சந்திரன், நட்சத்திரங்கள்"
 
"இவைகளைப் படைத்தவர் இவைகளைக் காட்டிலும் சின்னவராக இருந்தால் இவைகளைப் படைக்க முடியுமா?"
 
"முடியாது" 
 
புதிதாக ஒன்றைப் படைக்க வேண்டுமானால், அல்லது உருவாக்க வேண்டுமானால் அல்லது உருவாக்க வேண்டுமானால் (உதாரணமாக கணினி) நாம் அதைவிட பெரியவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அதைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவர் வானத்தையும் பூமியையும் படைத்தார், நம்மையும் படைத்திருக்கிறார். நம்மைப் பற்றி சகலத்தையும் அறிவார். நமக்கு என்ன திறமை இருக்கிறது? எப்படி நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதையும் ஆண்டவர் அறிந்திருக்கிறார். எனவே ஆண்டவர்  நாம் நினைப்பதைக் காட்டிலும் பெரியவராகவும், வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார். அவர் வல்லமையுள்ள தேவன், உனக்காக எல்லாவற்றையும் செய்து முடித்தவர். சகலத்தையும் அறிந்த ஆண்டவரிடம் நாம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவோம்.
 
4. நித்தியப் பிதா:
யேசு கிறிஸ்த்துவுக்கு இன்னொரு பெயர் உண்டு அது நித்திய பிதா - அழிவில்லாத தகப்பன். யோவான் 1௦:3௦ல், 
 
"நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்றார்" 
 
மேலும், 14:9ல், 
 
"...... இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;...." 
 
ஏசாயா 8:18ல், 
 
"இதோ நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்"
 
மேலே உள்ள இந்த வசனம் எபிரேயர் 2:13,14ல்
 
"உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும், நான் அவரிடத்தில் நம்பிக்கையாய் இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்"
 
ள்ள இந்த வசனத்தின்படி இது இயேசு கிறிஸ்து கூறுவதாக இருக்கிறது. அவருடைய அன்பு எவ்வளவு மேலானது, அவர் நமக்கு நித்திய பிதாவாய் இருக்கிறார். ஏசாயா 53:10ல், 
 
"கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய் ஆத்துமா தன்னை குற்றநிவாரண பலியாக ஒப்புக் கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்"
 
யேசு சிலுவையில் அடிக்க ஒப்புக் கொடுத்தபோது நம்மையெல்லாம் தமது பிள்ளைகளாக கண்டார் (நித்திய பிதா)
 
5. சமாதான பிரபு: 
நாமெல்லாருக்கும் சமாதானத்தை கொடுக்கும்படியாக, இயேசு நெருக்கப்பட்டார். ஏசாயா 53:5ல்,
 
"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குனமாகின்றோம்"
 
யேசு பிறந்த பொழுது, தேவ தூதர்கள், கேரல் பாடல்களைப் பாடினார்கள். அது:
 
"உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்"
 
மாதான பிரபுவாகிய இயேசு கூறியது:
 
"சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை, உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக"
 
வானத்தையும் பூமியையும் படைத்த கடவுளோடு நாம் சமாதானமாய் இருக்கும்படியாக சுவிஷேசத்தைக் கூறினார்.
 
"எல்லோருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவைக் கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிஷேசமாய்க் கூறி...." அப்.10:36
 
கொலோ.1:20,21ல்,
 
"அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாயும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்" 
 
யேசுவின் இரத்தத்தினாலே நாம் பிதாவாகிய தேவனோடு சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம், இவரே மெய்யான சமாதான பிரபு.
 
 
ஜெபிப்போமா?
 
அன்புள்ள இயேசுவே, உம்மைக் கனப்படுத்தி மகிமைப்படுத்துகிறோம், எங்களுக்கு அதிசயத்தைச் செய்கிறபடியால் நன்றி செலுத்துகிறோம். எங்களுக்கு தேவ பெலனும், தேவ ஞானமுமாய் இருக்கிற ஆலோசனைக் கர்த்தரே உமக்கு மகிமையைச் செலுத்துகின்றோம். வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனே உமக்கு மகிமையை செலுத்துகின்றோம். குற்ற நிவாரண பலியாக உம்மை ஒப்புக் கொடுத்தபோது எங்களையெல்லாம் உமது சந்ததியாக கண்ட நித்திய பிதாவே உமக்கு நன்றியை செலுத்துகின்றோம். உம்முடைய சமாதானத்தையே எங்களுக்குக் கொடுத்திருக்கிற சமாதான பிரபுவே உமக்கு கோடாக் கோடி துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறோம். உமது பிறப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்ற இந்த சூழ்நிலையிலும், வருகின்ற புது வருடத்திலும் உமது இந்த ஐந்து நாமங்களைத் தியானித்த தியானம் எங்கள் ஒவ்வொருவரோடும் இருந்து வழி நடத்தும்படியாய் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே. ஆமென். ஆமென்.
 
 
An appeal to you,
 
Salvation, is the saving of the soul from sin and its consequences. It may also be called "deliverance" or "redemption" from sin and its effects. It is completely free. Salvation can't be obtained by the sacrifice of animals nor by shedding our hair. It can't be obtained by visiting pilgrims or by hurting ourselves with sharp things.
To be saved,we have to confess our sins to Jesus Christ.Then he will clense us from our sins,by his blood and purify us. No man on earth can save you,it can be done only by Christ and the people of God will be able to guide you to be saved. Jesus said in Mark 16:15,16,

     “ And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature. He that believeth and is baptized shall be saved; but he that believeth not shall be damned”.
 
The expense of proclaiming the gospel to the gentiles is more. We can testify in the streets, distribute tracts and give gifts to children. It is also expensive to print and buy tracts. We are unable to do the gospel work without money.
          Let God bless those who donate towards this ministry.
We do these ministries,
1. ZION'S CHILDREN MINISTRY:
a. Training program for volunteers
b. Weekly Sunday Schools in villages also.
c. Children Bible School in summer holidays
d. Cultural programs @ Christmas times.
2. “ESCHATOS”: A monthly magazine (trumpet of zion)It’s subscription Rs.50/- per year. Rs.600/- Life in India
$ 10/- per year and $ 500/- Life.
3. TRACT PRINTING & PUBLISHING.
 We published 10 Tracts.
1. You have appointment with death. (available)
 (ungalaiyum saavu santhikkum)
2. The truth about the lie. (Not available. To be printed)
 (poiyai pattrria oor unmai)
3. Repentance toward God (Not available. To be printed)
  (kadavulidam (manan)thirumpungal)
4. Old fashioned parents and modern age youth (Not available. To be printed)  (hyder kaalaththu perrorum nava yuga izhaignarkalum)
These tracts are translated from “BIBLE HELPS” booklets and tracts
 
5. Christmas vaazhththukkal (Christmas greetings)
These tracts are distributed in Tamilnadu and in few other countries to transform the Tamil community. If you want to pariticipate in the ministry to spread the gospel thro' distribute tracts, please send  in your postal address to +919840836690. Sample tracts will be  sent to you freely.
Some tracts are yet to be printed and published
1. “Vice of sexual immorality” (paaliyal kuttrrangal).“Bible helps”
2. “The search for Happiness”(magizhchchiyai thedi).“Bible helps”
 
If you want be a part of this tract ministry, please donate Rs.20,000 for tracts to be printed and distributed all over the world in your family name.
 
4. VILLAGE MINISTRY:
We do this ministry once in every month in villages nearby Chennai.
Contact:
Bro.K.Selvin durai
Poppy's house
#63-A, 6th Main Rd, 2nd Layout,
Laxmipuram, Teachers Colony,
Kolathur, Chennai - 600 099

www.youtube.com/zion’schildrenbilbeschool
www.facebook.com/selvin.durai.1
Visit as at www.karunyas.blogspot.com & www.zrmindia.blogspot.com
Donation through bank:
Zion Revival Ministries,
Indian Bank ottery branch,
A/c No:441176777.
IFS Code: IDIB000O004
                           
THANK YOU
"Give, and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over, shall men give into your bosom. For with the same measure that ye mete withal it shall be measured to you again" Luke 6:38