ஜெபம்
பிதாவாகிய தேவனே!
ஒருவர் என்னிடத்தில் உதவி கேட்கும் பொழுது சரி என்று உடனே சொல்லக்கூடிய கிருபையையும்,
நான் சோதிக்கப்படும் பொழுது, தவறானதை செய்ய மனம் இணங்கும் பொழுது உறுதியாக இல்லை என்று சொல்லக்கூடிய பெலத்தையும்,
நான் அவசரப்படும்பொழுது, எனக்கு நானே காத்திரு எனக் கூற பொறுமையையும்,
இன்று செய்யக்கூடியதை வேறொரு நாள் செய்யலாம் என தள்ளிவைக்கும் மனப்பான்மை வரும் போது, இப்பொழுதே என சொல்லக்கூடிய மன உறுதியையும்,
இன்று வருகின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும், கர்த்தாவே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? எனக் கேட்கும் கீழ்ப்படிதலையும், கொடுக்கும்படியாய் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென், ஆமென்.
உங்கள் ஜெபத்திற்கு பதில் உண்டு...