30 Jun 2016

HE DOES INCREDIBLE MIRACLES

எண்ணி முடியாத அதிசயங்களை அவர் செய்கிறார் 

"ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (யோபு 9:10)

ஜெபித்த, நினைத்த காரியங்கள் எல்லாம் ஒன்றும் நடக்கவில்லையே, தள்ளிக்கொண்டு போகிறதே என்று நினைக்கின்ற உங்களுக்குத்தான் ஆண்டவர் இந்த வாக்கைக் கொடுக்கின்றார்! ரோமர் 11:33ல், 

"ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாய் இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்" 

இதன்படி, ஆண்டவர் எவ்வளவு மேனமையானவர், சர்வவல்லவர் என்பதைப்பார்க்கிறோம்! மேலும் ஆண்டவருடைய வழிகளை நம்மால் நிதானிக்க முடியாது. அவருடைய வழியில் அவர் அதிசயத்தை உங்களுக்கு செய்வார்! யோபு 26:14ல்,
"இதோ, இவைகள் (வானமும், பூமியும்) அவருடைய கிரியையில் கடைக்கோடியானவைகள்; அவரை குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடை வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்" 

அவருடைய வல்லமை மிகப்பெரிது, கர்த்தர் பெரியவர்; அவரால் செய்யமுடியாத அதிசயம் ஒன்று உண்டோ? பிரசங்கி 3:1ன் படி, 
"அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலேயே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;......"

நிச்சயமாகவே மிகச் சரியான நேரத்தில் அவர் செய்வார்! ஏசாயா 40:27,28ல்,

"யாக்கோபே, இஸ்ரவேலே; என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதிமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது" 

ஆண்டவருடைய அன்பைப் பாருங்கள்! எவ்வளவு நேர்த்தியாய் உங்களை உற்சாகப்படுத்துகின்றார். எபேசியர் 3:20ன்படி, 
"நீங்கள் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய்.... உங்களுக்கு செய்ய வல்லமை உள்ளவர்"

ஆண்டவருடைய அன்பைப் போற்றுவோம்:
"கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிரவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?" (யாத்.15:11)
"ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை  என்றுமுள்ளது" (சங்கீதம் 136:4)
"அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்ஜியம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறையாக நிற்கும்" (தானியேல் 4:3)

"இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்" (சங்கீதம் 72:18)

ஜெபிப்போம்!

எங்களை நேசித்து வழிநடத்தி அற்புதங்களைச் செய்கிற எங்கள் கர்த்தாவே, நீண்ட நாள் காத்திருப்பது இருதயத்தை இளைக்கப்பண்ணும், வேண்டியது வரும்போதோ ஜீவ விருட்சம் போலிருக்கும் என்ற வசனத்துக்கேற்ப இந்த நாட்களிலே நீர் செய்யவிருக்கின்ற அற்புதத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம்! நேபுகாத்நேச்சார் உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாகக் கண்டது என எழுதியதைப் போல, நாங்கள், நீர் செய்கிற அதிசயங்களை உலகமெங்கிலும் பிரசித்தப்படுத்த கிருபை செய்யும், பணத் தேவையிலும், சுகவீனத்திலும் நீர் செய்கிற அற்புததிற்க்காய் நன்றி! 

கர்த்தரும் மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே! ஆமென்! ஆமென்!! 

என்தேவன் தமது ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" பிலி.4:19