வாழ்த்துக்கள்!
வாலிபர்கள் கூட்டம்
20, 21/01/2017 வெள்ளி, சனி மாலை நேரங்களில் அருந்ததி நகரில் உள்ள முக்கிய 4 தெருக்களில் உள்ள 19 வாலிபர்களை சந்தித்து, அழைப்பு விடுத்தோம். வருகின்றேன் எனக் கூறிய வாலிபர்களின் பெயர்களை எழுதிக்கொண்டோம். உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள் என கூறி அழைத்தோம். மீண்டும் ஞாயிறு மாலை அழைத்துவரும்படி தெருக்களைச் சுற்றிவந்தோம். (ஞாயிறு பள்ளி பிள்ளைகளுடன்) ஒருசில வாலிபர்கள் எங்களை பார்த்தவுடன் ஓடி ஒளிந்தார்கள்!
5:00 மணிக்கு, கூட்டம் நடத்தும் இடத்தில், காத்திருந்தோம். 5:15க்கு 6 இளம் வாலிபர்கள் வந்தார்கள்!
அவர்களிடம் ஆரம்ப வார்த்தைகளை பேசிவிட்டு, 48 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் கொடுக்கப்பட்டது. 50 நிமிட நேரம் கொடுக்கப்பட்டது. எல்லாமே ஆம்/இல்லை என பதிலளிக்கும் கேள்விகள். உதாரணத்துக்கு ஒரு சில கேள்விகள்:
1. உன் குடும்ப வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்யவேண்டும் என யோசித்தது உண்டா? ஆம்/இல்லை.
2. நீ நினைப்பதெல்லாவற்றையும் உனது தாய் தகப்பனிடம் கூற முடியுமா? ஆம்/இல்லை.
3. தவறு செய்துவிட்டு வருத்தப்பட்டது உண்டா? ஆம்/இல்லை.
4. தவறை சரி செய்ய விரும்புகின்றாயா? ஆம்/ இல்லை.
5. உன்னை (உன் நண்பர்கள் தவிர) பெரியவர்கள் மதிக்கின்றார்களா? ஆம்/இல்லை.
6. எல்லா இடங்களிலும் உண்மையாய் இருக்க, நீ பிரயாசப்பட்டது உண்டா? ஆம்/இல்லை.
7. தெரிந்தே பிறரை தவறாக நடத்தியது உண்டா? ஆம்/ இல்லை.
8. பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று செயல்பட்டது உண்டா? ஆம்/ இல்லை.
இப்படி மேலும் 40 கேள்விகள்.
பதிலளித்தார்கள். இந்த கேள்விகளுக்கு விளக்கம் வரும் ஞாயிறு அன்று தரப்படும் என கூறி பிஸ்கெட்டுடன் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இதை பார்த்த சில வாலிப பெண்கள் எங்களுக்கெல்லாம் இல்லையா? என ஆர்வமாய் விசாரித்தார்கள். வேறொரு நாளில் நடத்தலாம். ஆனால் குறைந்த பட்சம் 20 பேராவது வருவீர்களா? எனக் கேட்கப்பட்டது. சரி என்று கூறியிருக்கின்றார்கள்.
அந்த கூட்டத்துக்காக ஜெபிக்க கேட்கின்றோம்.