சிறுவர் வேதாகம பள்ளி
அன்பு நண்பர்கள் யாவருக்கும் வணக்கம்!
சிறுவர் வேதாகம பள்ளி 2/05/2017 செவ்வாய் அன்று ஆரம்பித்து 6/05/2017 சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது. கடைசி நாள் ஊர்வலம் மட்டும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதை கீழே வெளியிட்டுள்ளேன்! சிறுவர்களின் வாயினால் ஏற்பட்ட துதியினால் பெரம்பூர், அருந்ததி நகர் பகுதி நிரம்பி வழிந்தது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக! பெரம்பூரில் எழுப்புதல் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!
தொடர்ந்து ஞாயிறு பள்ளியும் நடைபெற்று வருகின்றது! உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்! சனிக்கிழமை மாலை பிள்ளைகள் 5:15க்கு, கூடிவந்தனர்! அனைவருக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டது. (ஜீவ கிரீடம், நீதியின் கிரீடம்) சிறுவர் வேதாகம பள்ளியில் கற்றுக் கொடுத்த பாடல்களை பாடிக்கொண்டே ஊர்வலம் சகோதரி. லிடியாவின் ஆரம்ப ஜெபத்துடன் ஆரம்பமானது! ஆண்டவரது நாமம் மகிமைப்பட்டது!
லிடியாவின் ஆரம்ப ஜெபம்! |
ஆரம்ப நிலையில் உள்ள பவனியின் சில புகைப்படங்கள்!
இந்த இடத்தில்தான் சிறுவர் வேதாகம பள்ளி நடத்தப்பட்டது! |
தெருக்களில் பாடல்களை பாடி...... |
என்னோடுகூட சகோதரி.லீதியாள், சகோதரி. மோகனவல்லி ஆகியோர் இணைந்து ஒரு குழுவாக இந்த பள்ளி நடத்தபட்டது. நன்றி!