அன்பு நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு வாரமும் ஓர் பதிவை இடலாம் என எண்ணி, இப்பொழுது தொடர்ந்து 3 வாரங்களாக பதிவிடுகின்றேன்! உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைத்தளத்தை அறிமுகம் செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!
தேவ வல்லமை
ஜோனி என்ற இளம் பெண்ணுக்கு நீச்சல் என்றால் கொள்ளை பிரியம். நீரில் குதிப்பது என்பது அவளுக்கு மிக மிக விருப்பம். தனது வீட்டருகே இருந்த நீச்சல் குளத்தில் அவள் நீச்சல் மற்றும் டைவ் அடித்தல் என கற்றுக்கொண்டாள். தான் ஒரு நல்ல டைவ் அடிக்கும் வீராங்கனையாக வரவேண்டும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்க வேண்டும் என மிகுந்த விருப்பமுடையவளாக அவள் இருந்தாள்.
ஒரு நாள் சில நண்பர்களோடு வெளியூர் சென்றாள். அந்த ஊரில் இருந்த கடற்கரைக்கு சென்றாள். அங்கே இருந்த சூழ்நிலை கடலில் நீச்சலடிக்க வேண்டும் என்ற வாஞ்சை வந்தது. புதிய இடம். தண்ணீருக்குள் எங்கே என்ன இருக்கிறது எனத் தெரியாது. நண்பர்கள் அனைவரும் கடலுக்குள் இறங்கவே, இவளும் நண்பர்களோடு நீச்சல் அடித்தாள். மிகுந்த உற்சாகமாய் இருந்தது. அருகில் இருந்த ஒரு பாறையில் ஏறி கடலுக்குள் டைவ் அடித்தாள். அவ்வளவுதான், அவள் டைவ் அடித்த இடத்தில் கடல் ஆழம் குறைவாய் இருந்தபடியால், அவளுடைய தலை தரையில் மோதியது. அவளது முதுகு தண்டுவட நரம்பு பழுதாகி, அவளது எஞ்சிய காலம் முழுவதையும் சக்கர நாற்காலியில் கழிக்கச் செய்தது. அவள் மிகுந்த மனசோர்வும், கோபமும் கொண்டாள். அவளுடைய கோபம் முழுக்க தேவன் மீதுதான்.
"கடவுளே ஏன் எனக்கு இதைச் செய்தீர்? எனக்காக நீர் என்ன செய்திருக்கின்ரீர்? என ஜெபித்தாள். ஆண்டவர் அவளை ஆயுள் காலம் முழுவதும் சுகமாக்க வில்லை என்றாலும், வேதவாசிப்பிலும், ஜெபத்திலும் ஈடுபட்டாள். எனவே ஆவிக்குரிய பிரகாரமாக வளர்ந்தாள்.
இவ்வாறு தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள், "எனக்கு வேறு வாய்ப்பு இல்லாததால், நிலைமையை ஏற்றுக் கொள்ளுதல், நம்பிக்கை கொள்ளுதல் மேலும் அர்ப்பணித்தல் இவைகளின் மூலமாக, உணர்வு பூர்வமான விடுதலையை கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து, பெற்றுக் கொள்ளுகிறேன், பெற்றுக்கொண்டாள்.
லூக்கா 1:26-38 வரை உள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள்! இதில் இன்னொரு இளம் பெண்ணைப் பார்க்கின்றோம். இவளும் ஏற்றுக் கொண்டாள், நம்பிக்கை வைத்தாள், தேவனுக்கு ஒப்புக்கொடுத்தாள். இவளுடைய வாழ்க்கையை கர்த்தர் முன்னுக்கு கொண்டுவந்தார்.
1. தேவ செயலுக்கு, மரியாளின் எதிர் விளைவு, ஜொனியின் எதிர்விளைவோடு ஒத்துப்போகிறதா? அல்லது போகவில்லையா?
2. நீங்கள் எந்த குறிப்பிட்ட வழிகளில் தேவ வல்லமை உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என விரும்புகிண்றீர்கள்?
கவனத்தில் கொள்ளுங்கள்:
லூக்கா 1:26-38 பகுதியில் உங்களோடு பேசும் அடிக்கோடிடவும், மனனம் செய்யவும்.
ஆண்டவரின் வரையறையில்லாத வல்லமையை அறிந்து கொள்ளுவதற்கு உதவியைக் கேளுங்கள். அவர் தெரிந்தெடுக்கும் வழி முறைகளை பயன்படுத்தவும், அல்லது பயன்படுத்தாதிருக்கவும் இயேசுவை கேளுங்கள்.
மேலும் படியுங்கள்: சங்கீதம் 31:14-24 (பக்கம் 687); யாக்கோபு 1:1-5 (பக்கம் 313); 2 கொரிந்தியர் 12:7-10 (பக்கம் 225)
ஜெபிப்போம்!
அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம், எந்த
சூழ்நிலையிலும் உமது அன்பு எங்கள் ஒவொருவரையும் வழி நடத்துவதற்காய் நன்றி! தேவ திட்டம் எங்கள் வாழ்நாளில் நிறைவேறுவதற்காய் நன்றி! எங்கள் வாழ்க்கையில் அநேகரை நீதிக்குட்படுத்த வழி நடத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் பிதாவே. ஆமென், ஆமென்.