அன்பு நண்பர்கள் யாவரோடும் இந்தச் செய்தியை வருத்தத்தோடு பகிற்ந்து கொள்ளுகின்றோம்!
அன்பான சகோதரர் அப்பாத்துரை அவர்களின் மறைவு குறித்து பெருந் துயருருகின்றோம். எனக்கும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துக்கும் 1983, 4ல், முதல் தொடற்பு ஏற்ப்பட்டது. அன்புச் சகோதரர் மங்களராஜ் என்பவர் நான் கடையிலிருந்து வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, எனக்கு இரண்டு ஒலி நாடாக்களைக் என் கைகளில் கொடுத்து, இதைப் போட்டுக் கேளுங்கள் என்று கூறினார். சரியென வாங்கிவைத்தேன். அதில் அன்புச் சகோதரர் மோகன்.சி. லாசரஸ் அவர்களின் சாட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலாவது அவருடைய சாட்சியைக் கேட்டபொழுது, இவர் ஏதாவது கூட்டம் நடத்துகின்றாறா? என்ற எண்ணம் எனக்கு ஏற்ப்பட்டது. தினந்தோறும் இரவு அந்த ஒலிநாடாவைக் கேட்டு ஜெபிக்க ஆரம்பித்தேன். அடுத்த முறை அந்த ஊழியர் வரும்போது கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென முடிவு செய்தேன். 10 நாள் கழித்து வந்தார். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் வாகைத்தாவு என்ற கிறாமத்தில் ஊழியம் செய்து வந்தார். அவர்தான் திறப்பின் வாசல் ஜெபத்தை அறிமுகப்படுத்தினார். மாசக் கடைசிக்காகக் காத்திருந்தேன். நாள் வந்தது. போனேன். அப்பொழுது ரோட்டு மேல இருக்கின்ற வானத்தின் வாசல் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் இருந்த பந்தலிலே கூட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருந்தது. செய்தியைக் கேட்டேன். மனதிற்கு இதமாக இருந்தது. எனவே தொடற்ந்து ஒவ்வொறு மாதமும் செல்ல ஆரம்பித்தேன்.
வானத்தின் வாசல் திறந்த மாதமா, அல்லது அடுத்த மாதமா என எனக்குச் சரியாக நினைவில் இல்லை. எனக்குப் பால்கனியில் இடம் கிடைத்தது. அந்த ஜெப வேளையில் இயேசு எனக்கு முன்பாக வந்து நின்று சற்று குனிந்து, என் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். உடனே நான் கண்களைத் திறந்து பார்த்தேன். உண்மையிலேயே இயேசுவா? அப்பொழுது எனது இடது பக்கம் ஜெபித்துக் கொண்டிருந்த சகோதரன் பார்த்தால் எப்படித் தெரியுமோ அதைப் போல, என்னை ஆசீர்வதிக்கும் காட்சி எனக்குத் தென்பட்டது. ஊர் திரும்பும் வரை அதையே மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். அந்த நாள் இரவு நான் வழக்கமாக ஜெபிக்கும் இடத்தில், நான் முழங்காலிட்டு ஜெபிக்க ஆரம்பித்தபொழுது ஒரு ஒளிப்புள்ளியை சற்று தூரத்தில் பார்த்தேன். அந்த ஒளிப்புள்ளி முதலாவது, சிறிதாகவும் பின்பு வரவர பெரிதாகவும் மாறியது. நான் என் கைகளைப் பார்த்தேன், அந்த வெளிச்சத்தில், எனது கைகள், எனது சட்டை எல்லாமே பளீரென்ற வெண்மை. எப்பொழுது தூங்கினேன் எப்பொழுது விழித்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. காலையில் எழுந்தவுடன் எனது உள்ளத்தில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அப்படியே பொங்கிப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அதுவரை நான் செய்த குற்றங்களை நினைத்துப் பார்த்தேன். அது கோழியின் இறகுபோல மிகவும் இலேசாக எனது உள்ளத்தில் உணர்ந்தேன். இதற்கு முன் நினைத்துப் பார்த்தேன் என்றால் உள்ளமெல்லாம் கனத்து இருக்கும். உடனே அப்போதிருந்த ஊழியரிடம் சென்று இது என்ன? என்று கேட்டேன். இதுதான் பாவ மன்னிப்பின் நிச்சயம் என்றார். பின்பு சென்னையில்தான் பாவமன்னிப்பு என்பது மூன்று காலத்துக்கும் சேர்ந்தது எனத் தெரிந்து கொண்டேன்.
1989ல், நானும் எனது மனைவியும் திறப்பில் வாசல் ஜெபத்துக்கு சென்றிருந்தபொழுது, ஜெபத்துக்கு முன்னால் வந்தவர்களுக்கு ஜெபித்துக் கொண்டிருந்த நான்கைந்து பேரில் ஒருவராக இருந்தார். நான் சென்னைக்கு வந்தபின் நான்கைந்து வருடங்களுக்கு ஒரு முறை திறப்பின் வாசல் ஜெபத்துக்குச் சென்றிருக்கின்றேன். ஒரு முறை நாசரேத் வழியாக மெஞ்ஞானபுரம் சென்றபொழுது, வானத்தின் வாசலில் இறங்கி, ஊழியத்தில் விதைக்கவும் ஆண்டவர் வழி நடத்தினார். கடைசியாகத் திறப்பின் வாசல் ஜெபத்திற்கு நான் மட்டும் சென்றபொழுது, தேன் என்ற வீடியோ சிடியை வெளியிட்டார்கள். அந்த நேரத்தில் நான் திரைப்பட ஊழியத்தைச் செய்து வந்தபடியால், ஒரு சிடியை வாங்கி வந்தேன். பல்வேறு இடங்களில் ஊழியத்திலே திரையிட்டிருக்கின்றேன்.
மேலே உள்ள அனைத்தும் எனக்கும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துக்கும் உள்ள தொடற்புகள். இந்த ஊழியத்தின் மூலமாகவே ஆண்டவர் என்னை இரட்சிக்கச் சித்தமாய் இருந்தார் போலும்.
இப்பொழுது சகோ.அப்பாதுரை அவர்களைப் பற்றி:
இங்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் உள்ள ஒருவரோடும் எனக்குத் தனிப்பட்ட பழக்கம் இருந்ததில்லை. அன்பு சகோதரன் சொன்ன தகவலிலிருந்து இருவரும் இணைந்து 35ஆண்டுகாலமாக தேவபணி செய்தார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக் காலத்திலும் இப்படியா..... வாவ்..... 😯😯😯😯
1, 2, 5, 10 வருடங்களாக இனைந்து ஊழியம் செய்தாலே மிகப் பெரிய சாதனை. வேதத்திலே கூடப் பிரிந்து போன ஊழியர்களை வாசிக்கின்றோம். ஒரு மனப்பட்டு இவ்வளவு காலம் நீங்கள் உழைத்தீர்கள் என்றால், எங்களைப் போன்ற ஊழியர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தீர்கள்!ஒரு சவாலாக இருக்கின்றீர்கள். பாத்தியா ஊழியத்தை எப்படி ஒருமனமாச் செய்தோம் என்று என்னிடம் கேட்பதுபோல இருக்கிறது. ஈடு செய்ய முடியாத இழப்புதான். சகோதரரை உடல் நலமிலலாமல் வைத்திய சாலையில் சேர்த்திருப்பதாகவும் அவருக்காக ஜெபிக்கவும் எனக் குறிப்பைப் பார்த்தபொழுது ஜெபித்தேன் விசுவாசித்தேன்! வீடு திரும்பிவிட்டாரெனச் செய்தி வந்தபொழுது மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் இப்படி பொசுக்கென்று போய்விட்டாரேயென நினைத்து, உலகம் ஒரு ஊழியரை இழந்துவிட்டதே என்று நினைத்து வருந்துகின்றேன். இயேசு அழைக்கிறார் ஊழியக் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன். எங்கள் இதயம் உங்களோடு இருக்கின்றது.
எனது அம்மா இந்த உலகத்தை விட்டுச் சென்றபோது, எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. செய்வதரியாது அப்படியே உட்கார்ந்துவிட்டேன். இப்படியொரு பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். திடீரென வீட்டு காலிங் பெல் ஒலித்தது. எனது மனைவியின் தம்பி உள்ளே நுழைந்தார். அடுத்த நொடி எனது சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. ஒரு புத்துணர்வு என் உள்ளத்தை ஆட்கொண்டது. உடனே ஆக வேண்டியதைக் கவனிப்போம் என அடுத்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். பின்பு அந்தச் சூழலை நினைவு கூர்ந்தபொழுது, தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் என அறிந்து கொண்டேன். அதைப் போல ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் துக்கம் நிவர்த்தியாக ஒருவரை அனுப்புவார். மனங்கலங்காதிருங்கள். இதுவரை உங்களை உங்கள் ஊழியத்தை நடத்தி வந்தவர், மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்னவர், இனிமேலும் உங்களை, ஊழியத்தை நடத்துவார்.
அன்புச் சகோதரர் விட்டுச் சென்ற அவரது மனைவி மற்றும் மகள் குடும்பத்தார் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல் உரித்தாவதாக.
கொலோசேயர் 1:12"ஒளியில் உள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, உங்களைத் தகுதியானவருக்கு," சகல துதியும் கனமும் உண்டாவதாக. ஆமென்.