18 Jan 2017

THANK YOU VERY MUCH!!

ஜெபித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஆண்டவருடைய கிருபையால், கிருஸ்துமஸ் நிகழ்ச்சிகள் ஆண்டவருடைய நாமத்துக்கு மகிமையை சேர்க்கும் விதமாக அமைந்தது. நான் சென்ற பத்து நாட்களாக (5/01/2017 முதல் 17/01/2017) வரை கொல்கத்தா சென்றிருந்ததால் உங்களோடு உடனே   இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. கொல்கத்தா ஊழியம் நன்றாக இருந்தது, 500 குடும்பங்கள் சந்திக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியத்தின் மூலைகல் வசனம், ரோமர் 10:20,

"..... என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் ....."
ஜெபித்துக் கொள்ளுங்கள்! சந்திக்கப்பட்ட அனைவரும் இரட்சிக்கப்படவேண்டும்.

கிருஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் நிறைய காணொளிகள் உண்டு. இப்பொழுது இங்கே இரண்டு காணொளிகளை மட்டும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்! இந்த நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக வாலிபர்களுக்கு ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்ய இருக்கின்றேன். அது 22/01/2017 அன்று மாலை நடைபெற இருக்கின்றது. கலந்து கொள்ளுகின்ற வாலிபர்கள் அனைவரும் ஆண்டவரை அறியாதவர்கள். 20 வாலிபர்களை எதிர்பார்த்து, இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப் படுகின்றது. 

தயவு செய்து இந்த கூட்டத்திற்காக ஜெபியுங்கள்! 

சென்னையில் நீங்கள் இருப்பீர்களானால், வந்து கலந்து கொள்ளுங்கள். நாம் இணைந்து இந்த ஊழியத்தைச் செய்வோம். செல்லிடப்பேசி எண்: 9840836690 இடம்: அருந்ததி நகர், பெரம்பூர். சென்னை 600012.

கீழே உள்ள தொடுப்புக்களை சொடுக்கி பாருங்கள்! 

https://youtu.be/dWlBqPYQpx4

https://youtu.be/bCHeV0bxy68

நன்றி! நன்றி!! நன்றி!!!

BTCClicks.com Banner

15 Nov 2016

YOU ARE INVITED!!!


நீங்கள் 
வரவேற்கப்படுகின்றீர்கள்!

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நண்பர்கள்  அனைவரையும்
வாழ்த்துகின்றேன்!
 வரவேற்கின்றேன்!! 
அனைவருக்கும் எமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களோடு 
கிறிஸ்து பிறந்த நாளை ஏழைப்பிள்ளைகளோடு கொண்டாடும்படியாக 
அழைக்கின்றேன்!!!
24/12/2016 சனிக்கிழமை 
மாலை 5 முதல் 8:30 மணி வரை.
இடம்: அருந்ததி நகர், 
பெரம்பூர்,
 சென்னை - 600012
எமது செல்லிடப்பேசி எண்: 9840836690. 
இதில் பிள்ளைகளுடைய நடனம், நாடகம், பாடல், வசனம் அனைத்தும் இடம்பெறும்.
வாருங்கள்! 
இயேசுவின் இரண்டாம் வருகையை துரிதப்படுத்தும் விதமாக, முதலாம் வருகையை இந்த ஏழைப்பிள்ளைகளோடு 
கொண்டாடலாம்!!!
வாருங்கள்! இயேசுவைக் கொண்டாடுவோம்!!!