உள்ளத் தூய்மைக்கு ஓர் அழைப்பு
ஒரு பழமொழி இப்படிக் கூறுகின்றது, "உன்னைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாயோ, அதுவல்ல நீ; நீ என்ன நினைக்கின்றாயோ அதுதான் நீ" இது பழமொழி மட்டுமல்ல, பைபிளில் உள்ள ஒரு வசனமும் கூட. நீதிமொழிகள் 23:7 கூறுகிறது:
"அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்;...."
சாத்தான் பல வழிகளில் நம்மை தாக்குகின்றான். அவன் தீவிரமாய், திடீரென்று தாக்கும் இடம் நமது சிந்தனை வாழ்வுதான். நாம் என்ன நினைக்கின்றோமோ அப்படியே நாம் இருக்கப் போகிறோம் என்பதை சாத்தான் நன்கு அறிவான். எனவே அவன் நம் சிந்தனை (நினைவுகளில்) எனவே அவன் எனது சிந்தனை வாழ்வில் செயல்படுகின்றான். ஆண்டவரை அறியாதவர்களுக்கு உள்ள ஒரு பெரிய மனக்குறை என்னவெனில், கிறிஸ்தவர்கள் அவர்களது கடவுளைத்தான் சாத்தான் என அழைப்பதாக நினைக்கின்றார்கள்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, தமிழகத்தின் கிராமப்புறங்களிலும் சாத்தான் கோவில்கள் இருக்கின்றன. வேதாகமம் கூறுகின்ற சாத்தான் என்பவன் உள்ளத்திலே கிரியை செய்கிறவன். அது சிலையோ மற்றவைகளோ அல்ல. நமது உள்ளத்தில் (மனதில்) எதை வரவேற்கிறோமோ, அதில் நாம் ஒவொருவரும் பொறுப்புடையவர்களாய் இருக்கிறோம்.
1. தீமையை ஏற்றுக்கொள்ளும் திறன்: அப்போஸ்தலர் பவுல், தீமையை தீமையை உள்ளம் ஏற்றுக் கொள்ளும் ஆற்றலைப் பற்றி மிகவும் கூர்ந்து கவனித்து எச்சரித்துள்ளார். ஒருவர் எதிர்பாலாரைக் குறித்த தவறான / இச்சையான் எண்ணங்களுடன் தொடர்ந்து வாழமுடியும். வேறொருவர் மற்ற மக்களைப் பற்றி கொதித்து குமுறுகின்ற உள்ளத்தோடு, பொறாமையினால் நிரந்து வாழ முடியும். மேலும் மற்றொருவர் பெருமையினால் நிறைந்து, தங்களைக் குறித்து மிக உயர்வாக நினைத்துக் கொண்டு வாழ முடியும். மாம்சத்தின் இச்சைகளைக் குறித்து கலாத்தியர் 5ல் நாம் விரிவாகப் பார்க்கிறோம். இதில் அநேகமானவை, மணத்தல் உள்ள பாவத்தைப் பற்றியது.
கலாத்தியர் 5:19-21ல்,
"மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையேன்று முன்னே நான் சொன்னது போல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்"
நமது உள்ளத்தை/மனதை/நினைவுகளை சிறிது நேரமாவது நிறுத்தி வைக்க முடியும். நமது உள்ளத்திலே நாம் அமைதியோடு, நமக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரிந்த காரியங்களை பற்றி யோசிக்க முடியும். மேலும் நாம் உண்மையாகவே சிந்திக்கும் காரியங்களைக் குறித்து பிறர் கண்டுபிடிக்க முடியாமலும் போகும். ஒன்றை நாம் முக்கியமாக அறிந்த்ஹிருக்க வேண்டும், அது என்னவெனில் கடவுள் நம்முடைய சிந்தனைகள் அனைத்தையும் அறிவார். ஆகவே அவைகளைக் குறித்து கவலை கொள்ளுக்றார். மேலும் அவைகளை அடிக்கடி வெளியரங்கமாகும்படிக்குச் செய்கிறார்.
2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் போம்பஈ என்ற பட்டணம் ஒன்று இருந்தது. அது வேசுவியஸ் என்ற மலைத்தொடரில் இருந்தது. அந்தப் பட்டணத்தில் வாழ்ந்த ஒருவன், தன வீட்டில் உள்ள ஒரு அரை சுவரில் ஆபாசமான / அசிங்கனான படங்களை நிறைய வரைந்து வைத்து, அந்த அறையை யாரும் பார்க்காதபடி அறைக்கதவை மூடியே வைத்திருந்தான். ஒருவரும் ஒருக்காலமும் இதை அறியமாட்டார்கள் என நினைத்தான். ஒரு நாள் வெசுவியஸ் என்ற அந்த எரிமலை சீறியது. எரிமலைக் குழம்பு அந்தப் பட்டணத்தை மூடியது. அண்மைக்காலத்தில் புதைபொருள் ஆராயிச்சியாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்து அந்தப் பட்டணத்தை வெளிக் கொண்டு வந்தனர். பல வீடுகள், வீட்டுச் சொந்தக்காரர்கள் கட்டியபடியே இருந்தன. அந்த அசிங்கமான படங்கள் இருந்த வீடும் கண்டுபிடிக்கப் பட்டது. இன்றும் அந்த ஊருக்கு உல்லாசப்பயணம் செல்பவர்கள் அந்த வீட்டைப் பார்க்க முடியும். கைடு, ஏன் அந்த அறை பூட்டி இருக்கின்றது? என்பதை விளக்குவார். இன்றும் யாரும் அந்த அறைக்குச் செல்லக்கூடாது என்று அந்த அறையை பூட்டியே வைத்துள்ளனர். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரனுடைய நினைவுகள் வெளியரங்கமானது. இது யாருக்கும் தெரியவா போகிறது? இன நினைத்து எந்தத் தவறையும் செய்யாதிருங்கள்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பாவத்தின் பெரிய பகுதி எங்கு இருக்கிறதெனில் அவர்களுடைய நடவடிக்கையில் இல்லை. அவர்களது சிந்தனை வாழ்வில் இருக்கின்றது. உதாரணமாக பெருமை, காம இச்சை, சந்தேகம், நம்பிக்கையிழக்கச் செய்தல் இவைகள் அனைத்தும் எண்ணங்களில் ஏற்ப்படும் பாவம். இவையனைத்தும் பழைய மாம்சீக வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து வருகின்றது. (இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து இரட்சிக்கப்பட்டிருந்தாலும் கூட) நம்மில் அநேகர் கடந்த பல மாதங்களில் மனதில் நினைத்தவைகளை நமது வீட்டுக்கு முன் பெரிய திரையில் அனைவரும் மானத்தக்க விதத்தில் உருவத்தை விரும்புவதில்லை. இவைகள் திக்குமுக்காடச் செயபவனவாகவும்/திகைக்கச் செய்யவனவாகவும், ஒருவேளை பயந்து நடுங்க வைக்கக்கூடியதாகவும் இருக்கும்.
நமது இரகசிய நினைவுகள், நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் மிகச் சரியான அளவுகோல் அல்ல.. அது ஒரு மனிதன் தொடர்ந்து யோசித்தக் கொண்டிருந்த நினைவுகள், ஆச்சரியப்பட்ட நினைவுகள் இப்படிப்பட்டவைகள் மட்டமே அவனைப் பற்றி மிகச் சரியாக, மேலும் ஆவிக்குரிய வாழ்க்கையில் அவன் எங்கு நிற்கின்றான் என்பதையும் அறி உதவுகின்றது. பாவச் சூழ்நிலையை நாம் இந்த வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக நீக்க முடியாவிட்டாலும், தொடர்புகளின் கட்டுப்பாட்டில் நாம் அதை வைக்க முடியும்.
2. நல்லவைகளைக் கைப்பற்றும் உள்ளம்: உள்ளம் என்பது ஒரு நல்ல நிலத்தைப் போன்றது. இதில் பூக்களையும் மலரச் செய்யலாம், நேரிஞ்சல்களையும் வளரச் செய்யலாம். உள்ளஹ்தை கரிசனையோடும், புத்திசாலித்தனமாகவும் கவனித்து பாதுகாக்க வேண்டும். விழிப்புடன், முன்னறிந்து பயிற்றுவிக்கப்பட வேண்டும். நமது சரீரத்த எப்படி உடற்பயிற்சியின் மூலமாக மெருகேற்றுகின்றோமோ அதைப்போல ஆரோக்கியமான நல்ல நினைவுகளைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். பிலிப்பியர் 4:8, நல்ல காரியங்களை சிந்திக்கும்படி நம்மை அழைக்கின்றது.
"கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளேவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளேவைகளோ, நீதியுள்ளவைகளேவைகளோ, கற்புள்ளவைகளேவைகளோ, அன்புள்ளவைகளேவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளேவைகளோ புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்."
பைபிள் கூறுகின்றது பிலிப்பியர் 2:5ல்,
"கிறிஸ்து இயேசுவில் இருத்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது"
நாம் ஆவிக்குரிய நினைவுகளை ஊக்குவிக்க வேண்டும். அவை மேலேயுள்ள பிலிப்பியர் 4:8ல் உள்ளவையே.
1. "உண்மையுள்ளவைகளேவைகளோ....": நம்பகமான, உண்மை என்று அறிந்த செய்திகள்; பொய்யிக்கும், ஏமாற்றுதலுக்கும் எதிரான செய்திகள். நாம் கேள்விப்படுகிற எல்லா வதந்திகளிலும் நம் மனதை செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இவைகளெல்லாம் உன்ன்மையர்ரவை. கதையின் அடுத்த பக்கத்தை நாம் கேட்க வேண்டும். ஒரு பக்கத்தை மட்டுமே கேட்டு அதன் மீது மனதைச் செலுத்தக் கூடாது. எபேசியர் 6:14ன்படி,
"சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாகவும்,...."
நாம் உண்மையை (சத்தியத்தை) யோசித்தோமானால் பைபிளை பற்றி யோசிக்கவேண்டும், பைபிளைப்பற்றி யோசித்தோமானால், இயேசு கிறிஸ்துவைப்பற்றி யோசிக்க வேண்டும். இரண்டும் சத்தியம் (உண்மை) என்று அழைக்கப்படுகின்றது.
யோவான் 14:6ல்,
"அதற்க்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;......"
யோவான் 17:17ல்,
"உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்"
2. "ஒழுக்கமுள்ளவைகளேவைகளோ...": இது, ஏமாற்றாமல், தவறான வழிகளில் அல்லாமல், நேர்மையான முறையில் முறையில் பெற்றுக் கொண்ட அல்லது சம்பாதித்த எதை வேண்டுமானாலும் குறிக்கின்றது. நம்மில் அநேகருக்கு நம்முடைய நேர்மையைப் சோதித்தறிவது பெரிய காரியமல்ல. பிறருடைய ரூ10,000த்தை நாம் ஒரு போதும் தவறான முறையில் கையாள மாட்டோம். ஆனால் 10ரூபாயில் அல்லது 100 ரூபாயில் நாம் கவனமுடையவர்களாய் இருக்க வேண்டும். நமது மனசாட்சி / உள்மனம் கூறும் எச்சரிப்பைக் கவனிக்க வேண்டும். ஓட்டலில் தங்கியிருக்கும் அறையிலிருந்து ஒரு துண்டையோ, தம்ளரையோ திருடாமல் நம்மைக் காத்துக் கொள்ளவேண்டும். மேலும் பிறரைப் பற்றி நினைக்கும் பொழுது அவர்கள் செய்த நன்மைகளையே நினைக்க வேண்டும்.
முடிவாக, நாம் நம் முன்னோர்களைப்போல யோசிக்கப் பழக வேண்டும்.
3. "நீதியுள்ளவைகளேவைகளோ...": இது சரியான, நேர்மையான நடுநிலையோடு யோசிப்பது ஆகும். வியாபாரத்தில் வாடிக்கையாளரிடம் முழு கவனத்தையும் செலுத்தி கவனிப்பதாகும். வேத வசனத்தைப் பிரசங்கிக்கும் பொழுது, தவறாக கற்பித்தல், கொள்கை சித்தாந்தங்களை போதித்தலில் ஒரு சார்பு இல்லாமல் இருத்தல், நமது எல்லாத் தொடர்புகளிலும் நேர்மையைக் கடைப்பிடித்தல், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பாகுபாடு இல்லாமல் நடந்து கொள்ளுவது, ஒரு முறையேனும் நேர்மையற்ற, பாரபட்சமாகக் கூட யோசிக்காமல் இருப்பதுவே நீதியுள்ளவைகளாகும்.
4. "கற்புள்ளவைகளேவைகளோ....": எல்லாவற்றிலிருந்தும் விடுதலை இதுவே கறையாகும். மறுபாலாரோடு பாலியல் தொடர்பு கொள்ளுவதைக் குறிப்பது, கற்பு. இந்த நாட்களில் அரைகுறை ஆடை அணிதல், ஆபாச படங்கள், ஆபாச புத்தகங்களின் மூலமாக அசுத்த எண்ணங்கள் தூண்டப்படுகின்றன. இப்படிப்பட்ட காரணங்களினால் கிறிஸ்துவைப் பின்பற்றுவோர், திரைப்படங்களைப் பார்ப்பதை தவிர்க்கின்றனர். கவனமாக தாங்கள் படிக்கும் புத்தகங்களை அவர்கள் தணிக்கை செய்து படிக்கின்றனர். பெருந்தன்மை இல்லாத, சுத்தமில்லாத ஜோக்குகள் பேசுபவரோடு பழகுவதைத் தவிர்க்கின்றனர். பெரும்பாலான டீ.வி. நிகழ்ச்சிகள் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. என்னவெல்லாம் சுத்தமாய் இருக்கிறதோ, அவைகளையே யோசிக்கின்றனர். இன்னும் சிலரோ அவள் எப்படி இருப்பாள்? இவள் எப்படி இருப்பாள்? என பெண்களை நிர்வாணமாக மனதில் நினைத்து இரசித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி சிந்தித்துக் கொண்டிருந்தால் உன் உள்ளம் எப்பொழுதும் அழுக்காகவே இருக்கும்.
5. "அன்புள்ளவைகளேவைகளோ....": இது, அழகான, மனதை மகிழ்விக்கக் கூடிய, இனிமையான, கவர்ச்சிமிக்க, அன்புள்ள என்ற இந்த வார்த்தைகளெல்லாம் அவலட்சணம் மற்றும் இயல்புக்கு மீறிய, விபரீதம் என்ற வார்த்தைகளின் எதிர் பதமாகும். கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாய் பிறரிடம் காட்டுகின்ற மரியாதை மற்றும் நகைச் சுவையை போற்றி பாதுகாத்து வளர்க்க வேண்டும். கடினமாக பதில் கூறுவது, பதிலுக்குப்பதில் பேசுவது, ஏளனப் பேச்சு இவைகளைத் தவிர்க்க வேண்டும். இதமான குரலிலே பதிலளிக்காத மனைவியைப் பார்க்கும்போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்கள் அன்புள்ளவைகளல்ல.
மனபூர்வமாய் வியந்து பாராட்டியது, உண்மையாய் இருந்ததினால் நடந்த சம்பவங்கள், பிறரிடம் நம்பிகைக்குரியவனாய் நடந்து கொண்ட சம்பவங்கள், தைரியமாய் நடந்து கொண்ட சம்பவங்கள் இப்படிப்பட்டவைகளையே நாம் நினைக்க வேண்டும். டீ.வி. நிகழ்ச்சிகள், தினசரி பத்திரிகைகள் இவைகளில் விரிவாக வெளிவரும் கதைகனான கணவன் மனைவி சண்டை, கொலை, கொள்ளைச் சம்பவங்கள், (உ-ம் சதக் சதக் என்று வெட்டினான்) சிறுவர் மானபங்கம் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்புகள் வெடி குண்டு வீச்சு, கலவரம் இவைகளனைத்தும் அன்புள்ளவைகளுக்கு எதிரானவை. எனவே இதைப் படிக்கின்ற நாம் இச்செய்திகளை மனதில் கொள்ளக் கூடாது.
6. "நற்கீர்த்தியுள்ளவைகளேவைகளோ....": இது மிருதுவான குரலில் பேசுவது, பிறரைப் பற்றி உயர்வாக, மதித்து பேசியவைகள், வதந்திக்கு எதிரானவைகள், மற்றவர்களிடம் காட்டும் பண்பு, பெற்றோர்களை மதிப்பது, கணவன் மனைவிக்கிடையில் உள்ள நம்பிக்கை, விசுவாசம் இவைகள்தான் நற்கீர்த்தியுள்ளவைகள்.
நினைவு கூறுதல் (நினைத்தல்) அல்லது எண்ணிப்பார்த்தல் அல்லது சிந்தனை என்பதின் பொருள் என்னவெனில், அதன் மீது தங்கியிருத்தல், கவனத்தை ஒருமுகப்படுத்துதல் என்பதாகும். இரக்க குணம், நம்பிக்கையாக நடப்பது, உதவி செய்யும் தன்மை இவைகளைப் பற்றி நாம் கவனமாக யோசிக்க வேண்டும்.
இவைகளைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், நமது சிந்தனை வாழ்வு மலரும். அதன் மூலமாக முழு வாழ்க்கையும் ஆசீர்வதிக்கப்படும். நாம் இப்பொழுது தியானித்துக் கொண்டிருக்கும் பிலிப்பியர் 4:8ன்படி, தீமையான் எண்ணங்களை ஜெயிப்பது என்பது, தீமையான் எண்ணங்களோடு போராடிக்கொண்டிருப்பது அல்ல; நல்ல எண்ணங்களையே எப்போதும் உள்ளத்தில் நினைப்பதுதான்.
3. சரியானவற்றுக்கு போராடும் மனம்: கிறிஸ்தவ வாழ்க்கை அனுதினமும் போராடுகின்ற வாழ்க்கை. அஜ்ப்ஜக்ஸ்ச்தலர் பவுல் தம் மனப் போராட்டத்தைப் பற்றி எழுதுகின்றார். ரோமர் 7:23ல்,
"ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாஎருக்கிற பாவப் பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது"
அவர் உள்ளம் ஒரு பக்கம் தீமையைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது, மறுபக்கம் ஆண்டவருடைய ஆவியானவர் பவுலின் உள்ளத்தை ஆண்டவருடைய ஆளுகைக்குக் கீழாக கொண்டு வர முயர்ச் செய்து கொண்டு இருக்கிறார்.
நம் ஒவொருவருக்கும் தவறான எண்ணங்களால் பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் எண்ணங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பும் இருக்கின்றது. ஆண்டவர் கூறுகின்றார்,
"துன்மார்க்கன் தன வழியையும், அக்கிரமக்காரன் தன நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்.
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் ஆல்; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகின்றார்" ஏசாயா 55:7-9.
மேலும் ஆண்டவர் கூறுகின்றார், ஏசாயா 26:3ல்,
"பூரண சமாதானத்தைக் காத்துக்கொள்ளுகிறவனுடைய உள்ளம் ஆண்டவரிடத்தில் தங்கியிருக்கும்".(இது எனது மொழி பெயர்ப்பு)
தீய எண்ணங்களை மேற்கொள்ளுவது எப்படி?
முதலாவது, மேலே பாடத்த, உன்ன்மயுள்ளவைகள், ஒழுக்கமுள்ளவைகள், நீதியுள்ளவைகள், (நேர்மையானவைகள்) கற்புள்ளவைகள், அன்புள்ளவைகள், நற்கீர்த்தியுள்ளவைகள், புண்ணியம், புகழ், இவைகளுக்கு எதிரான தீய எண்ணங்களை விட்டு ஓடுவது ஒருமுறை. 2தீமோத்தேயு 2:19ல்,
"கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக்கடவனேன்பதும்...."
மீண்டும் 2தீமோத்தேயு 2:22ல், வேதம் சொல்லுகிறது,
"அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி,...."
யோசேப்பு, போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்ட பொழுது, அவன் அவ்விடத்தைவிட்டு ஓடிப்போனான். (ஆதியாகமம் 39:12) அசுத்த எண்ணங்களை மேற்கொள்ள ஒரு வழி, தவறான எண்ணங்களைத் தூண்டி பாவத்திற்கு நேராக வழிநடத்துகின்ற சூழ்நிலையிலிருந்து வெளியே இருப்பதுதான்.
செயற்கரிய இன்னொறு வெற்றிக்கு வழி, ஆரோக்கியமான எண்ணங்களால் உள்ளம் நிறைந்திருக்க வேண்டும். அப்பொழுது அசுத்த எண்ணங்கள் உள்ளே வரவிடாமல் அது தடுத்து நிறுத்தும். பிசாசானவன், நமது மூலையில் எங்காவது வெற்றிடம் இருக்கிறதா உள்ளே நுழையலாம் எனப் பார்க்கும் பொழுது ஆரோக்கியமான எண்ணங்கள் அவனைத் தடுத்து நிறுத்தும். நமது உள்ளத்தில் அசுத்த எண்ணங்கள் வரும்போது உடனே நிறுத்தி, ஜெபிக்கவும், வேதத்தின் ஒரு பகுதியை தியானிக்கவும் தொடங்க வேண்டும். இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளவும் வேண்டும். மனதை நமது பழைய சந்தோசமான நிகழ்ச்சிகளுக்குத் திருப்ப வேண்டும். உடனே நம் மனது நல்ல நினைவுகளை உணர ஆரம்பிக்கும். தீய நினைவுகள் நமது உள்ளத்தை விட்டு மெல்ல மெல்ல அகல ஆரம்பிக்கும்.
அசுத்த நினைவுகளின் மீது வெற்றி சிறக்க 3வது வழி: விழித்திருந்து ஜெபிப்பது. சாத்தான் நமது சிந்தனையில் தீய எண்ணங்களை விதைக்க நாம் அவனை அனுமதிக்கவே கூடாது. அதே நேரத்தில் நாம் அந்த தீய சிந்தனையில் தங்கிவிடவும் முடியாது. நமது தலைக்கு மேலே பறவைகள் பறக்க தடை செய்ய முடியாது, ஆனால் நம் தலையில் கூடு கட்டுவதைத் தவிற்க முடியும். கிறிஸ்துவுக்குக் கீழ்படிவதின் மூலம் நாம் எல்லாச் சிந்தனைகளையும் சிறைப்பிடிக்க முடியும். வேதம் கூறுகிறது:
"எங்கள் போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிரதற்குத் தேவ பலமுள்ளவை களாயிருக்கிறது.
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குள்ளாக கீழ்படியச் சிறைப்படுத்து கிறவர்களாயிருக்கிறோம்". 2கொரி. 10:4,5.
கவனமுடைய கண்களை உடையவர்களாய், நம் இருதயத்தில் தோன்றும் ஒவ்வொரு நினைவுகளுக்கும் நியாயத்தீர்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து விறுவிறுப்பாக இருக்க வேண்டும். பாவமான நினைவுகள் நம் உள்ளத்தில் வரும்போது, வேத வசனம் என்னும் பட்டயத்தை எடுத்து பதில் கொடுக்க வேண்டும். (வேத வசனத்தை சத்தமாக கூறவேண்டும்) கீர்த்தனை, பாமாலைப் பாடல்களைப் பாடவேண்டும். விடுதலைக்கு ஒரு ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும். மெதுவாக ஆனால் நிச்சயமாக (ஆண்டவருடைய உதவியினால்) துர்சிந்தனைகளை நாம் நம் உள்ளத்தை விட்டு வெளியேற்ற முடியும்.
நாம் அன்புள்ள, நேர்மையான பாராட்டப்படத்தக்க நினைவுகளால் நிரம்பியிருக்க தளராத முயற்சியுடன் முயலும் பொழுது, கிருபைக்குள்ளாக நாம் வளருவதையும் உணர முடியும். ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுதாமே, நம் உள்ளத்தைப் பாதுகாத்து உண்மையில்லாதவைகளையும் ஒழுக்கமில்லாதவைகளையும், கற்பில்லாதவைகளையும் எதிர்த்து நிற்க வல்லமை தந்து உதவி செய்வாராக.
ஜெபிப்போம்: ஆண்டவராகிய இயேசுவே இன்று நான் இந்த பகுதியை படித்ததின் மூலமாக எனது உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளக் கற்றுக் கொண்டேன். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். எனது எதிர் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க உதவி செய்யும். உன் உள்ளத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள், அதிலிருந்து ஜீவ ஊற்று புறப்படும் என்ற வேத வசனத்தின்படி என் உள்ளத்தை காத்துக் கொள்ள கிருபை தந்தமைக்காய் நன்றி! துர்ச்சிந்தனைகளை ஜெயிக்க கிருபை தந்ததற்க்காய் நன்றி! உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் என மத்தேயு 6:21ல், எழுதியிருக்கிறபடி என்னை ஆசீர்வதிப்பதர்க்காய் உமக்கு நன்றி!!! இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் பிதாவே. ஆமென், ஆமென்.
பின் குறிப்பு: இந்த செய்தி ‘BIBLE HELPS’ நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட “A CALL TO THOUGHT PURITY” என்ற கைப்பிரதியை மையமாக கொண்டு தமிழில் எழுதி வெளியிடப்படுகின்றது.
எழுதியவர்: K.SELVIN DURAI
மேலும் இச்செய்தி கைப்பிரதியின் வடிவத்திலே எங்களிடத்தில் இருக்கின்றது. இதைப் படித்ததில் இருந்து இச்செய்தி கணினி இல்லாத உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கும் தேவை என நீங்கள் உணரும் பட்சத்தில் உங்களால் முடிந்த நன்கொடை அனுப்பி பெற்று கொடுக்குமாறு வேண்டுகின்றோம்.
Bro. K.SELVINDURAI
63-A, 6th Main Road,
2nd Layout,
Laxmipuram Teacher’s Colony,
Kolathur, Chennai - 600 099
Cell: 9840836690