தேர்தல் களம்
தமிழ் நாடு இப்பொழுது தேர்தல் களத்திலே இருக்கின்றது. வாக்களிக்காமல் இருந்து விடாதிருங்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆளுகையை ஒப்படைக்கின்றீர்கள்! எதிர்கால குழந்தைகளின் வாழ்வுக்கு அடித்தளமிடுகின்றீர்கள். எனவே மிகவும் கவனமாக ஓட்டளிக்க வேண்டும்.
முதலாவது நபர்களைத் தெரிந்தெடுத்தல்: ஜாதி பார்க்க வேண்டாம். நேர்மையானவரா? தொகுதிக்கு என்ன செய்வதாக வாக்குக் கொடுக்கின்றார்? முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தால், லஞ்சம் வாங்கினாரா? கொஞ்சம் வாங்கினாலும் லஞ்சம் லஞ்சமே! பிரச்சனைகளின் போது மக்களோடு மக்களாக நின்றாரா? இதுவரை என்ன செய்திருக்கிறார்? எல்லாவற்றையும் குறித்து நிதானமாக நிதானியுங்கள். உங்கள் தொகுதியில் கட்சி வேறுபாடு பார்க்காமல் நிற்கின்ற சுயேச்சை உட்பட எல்லாரையும் நிதானித்துப் பாருங்கள்.
இவர்தான் ஜெயிப்பார் என நினைத்து யாருக்கும் ஓட்டளிக்காதிருங்கள்! நல்லவரும், வல்லவரும், எளிமையானவருமாகப் பார்த்து வாக்களியுங்கள்! யார் வேண்டுமானாலும் நேரில் பார்த்து பிரச்சனைகளை பேசலாம் என்பவர் எளிமையானவர். இப்படிப்பட்ட நபரை உங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்து வாக்களியுங்கள்.
இரண்டாவதாக கட்சியின் அடிப்படை: தி.மு.க. கூட்டணி, அ.இ.அ.தி.மு.க. கூட்டணி இரண்டையும் ஒதுக்கி வைக்க வேண்டும். இரண்டுமே உங்கள் சந்ததியின் எதிர்காலத்துக்கு எதிரிகள். தே.மு.தி.க.வுக்கு கொள்கையே கிடையாது. (எதிர் கட்சிக்காரர்களை தரக் குறைவாக பேசுபவர்கள், என்ன மக்களுக்கு செய்வோம் என குறைவாக பேசுபவர்கள், ஒருசில மனிதரையே குறை சொல்லிக்கொண்டிருப்பவர்கள்) எனவே இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டளித்தால் உங்கள் வோடே வேஸ்டு. அப்பா காங்கிரஸ், நானும் அதற்குத்தான் வாக்களிப்பேன் என வாக்களிக்காதிருங்கள். சந்தர்ப்ப வாத கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம். (உதாரணமாக, வாசன்) பா.ம.க. இதில் கொள்கை தெளிவு இல்லை. ஆம் ஆத்மி, நாம் தமிழர் என புதிய கட்சிகள். உண்மையான மாற்று நாம் தமிழர் கட்சிதான். இதிலும் இன்றைய தேதியில் விளக்கங்கள் தேவைப்படுகின்றது. குறிப்பாக, மத சிறுபான்மை இன மக்களைக் குறித்து.
கடைசியாக:
நல்ல மனிதரை நீங்கள் வாக்களிக்க தெரிவு செய்துவிட்டீர்களென்றால், அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என பார்க்க வேண்டாம். வாக்களியுங்கள்!
No comments:
Post a Comment