உன் கடவுளை சந்திக்க ஆயத்தப்படு
நண்பர்கள் யாவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
உங்களை இங்கு சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி!
நீங்கள் படிக்கப்போகும் செய்தி வேதாகமத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஆமோஸ் 4:12ல்,
ஆமோஸ் 4:12ல்,
"ஆகையால் இஸ்ரவேலே, இந்த பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே நான் உனக்கு இப்படி செய்யப்போகிறபடியினால், உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு"
இந்த வசனம் காலவரையற்ற அடிப்படையான உண்மையைக் குறிப்பிடுகிறது. இதிலே ஒரு அழைப்பு, ஒரு எச்சரிக்கை ஒவ்வொரு தலைமுறையினருக்கும் இருக்கின்றது - நீ உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு.
நூறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்த ஒரு ரயில்வே கம்பெனி ஒன்று, ஓரிடத்தில் ஒரு பெரும் பிரச்சனையை சந்தித்தது. அது ஒரு ரயில்வே கிராஸிங். அங்கே நிறைய விபத்துக்கள் நேரிட்டது. புகை வண்டியும், மோட்டார் வாகனங்களும் அடிக்கடி மோதி, நிறைய
இழப்புக்களும், சாவுகளும் நிகழ்ந்த ஓரிடம். அந்த ரயில்வே கம்பெனி ஒரு பரிசுத்த திட்டத்தை அறிவித்தது. அந்த இடத்தில் மக்களை எச்சரிக்கும் ஒரு மூன்று வார்த்தைகளைக் கொண்ட ஒரு சொற்றோடரை, உருவாக்குபவருக்கு, $2500 அளிக்கப்படும் என அறிவித்தது. நீங்கள் அடிக்கடிப் பார்க்கும் அந்த மூன்று வார்த்தைகளைக் கூறி ஒரு அறிவாளி அந்த பரிசை தட்டிச் சென்றார். அது: நில், கவனி, பார். இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் மதிப்பு, $833 விலையுள்ளது. ரெயில்வே தண்டவாளங்களை கடந்து போகிற ஒருவன் இந்த வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவில்லையானால், அவனுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். நில் என்பது மிகவும் நல்ல வார்த்தை, ஆனால் மக்கள் நிற்கவில்லையானால், பார் என்ற வார்த்தை எவ்வளவு பாதுகாப்பைக் கொடுக்கிறது! ஆனால் மக்கள் பார்க்கவில்லையானால், கவனி என்ற வார்த்தை எவ்வளவாய் எச்சரிக்கிறது, ஆனால் நீங்கள் கவனிக்கவில்லையானால், என்னவாகும்? இதைப் போலவே, நீங்கள் மோட்சத்துக்கு வரவேண்டுமானால், நிறைய சின்ன சின்ன பாடங்களை நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் ஆயத்தப்படவில்லையானால் நரகத்துக்கு செல்ல வேண்டியது வரும்.
1) இந்த வார்த்தைகளில் உள்ள எளிமையைப் பாருங்கள்:
இந்த வார்த்தைகள் மிகவும் எளிமையானது. வேதாகமம் கூறுகிறது, "உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு" ஆயத்தப்படு என்ற வார்த்தை, 'தேவையான முன்னேற்பாடுகளைச் செய்' என பொருள்படும். வருகின்ற கடவுளை சந்திக்கத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய். வேதாகமம் சொல்லுகிறது, இந்த உலகில் பிறக்கும் பொழுது எந்த ஒரு நபரும் கடவுளை சந்திக்க ஆயத்தமாகவில்லை. கடவுள் சொல்லுகிறார், 'இந்த உலகில் பிறக்கின்ற எவனும் நேர்மையற்ற தன்மையிலேயே பிறக்கின்றான்' இதன் பொருள் என்னவெனில் கடவுளை சமாதானத்தில் சந்திக்க உங்கள் பாவங்கள் மூடப்படவேண்டும். வேதம் மிகத் தெளிவாக அறிவிக்கின்றது, அது உங்கள் பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தாலே கழுவப்படவேண்டும். 1யோவான் 1:7 சொல்லுகிறது,
"....இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்"ஆயத்தப்படு என்பது மிகவும் எளிமையான வார்த்தையாகும். இதன் பொருள் தெரியாதபடிக்கு, மிகவும் கடினமான வார்த்தை இல்லை. இந்த எளிய வார்த்தை அநேகரால் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் திருமணம் புரிய ஆயத்தமாகின்றார்கள், பலர் இளவேனிற் காலத்தில் உல்லாசப்பயணம் மேற்கொள்ள ஆயத்தமாகிறார்கள். பலர் கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் தங்கள் பிள்ளைகளை மேல் வகுப்பில் சேர்க்க ஆயத்தமாகிறார்கள். சிலர் தங்கள் ஒய்வூதியத்ததைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகின்றார்கள்; வேறு சிலரோ எதையும், எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகிறார்கள். (இந்த வாழ்க்கையில் ஆயத்தமாக வேண்டிய, காலவரையற்ற வாழ்க்கைக்குத் தேவையான, கடவுளை சந்திக்க ஆயத்தமாவதைத்தவிற) வேதாகமம் கூறும் இதைக் கவனியுங்கள், "உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு"
2) கடவுளைச் சந்திக்கும் உறுதிப்பாடு:
ஒன்றுு ்நிச்சயம் நாமெல்லாரும் கடவுளை சந்தித்தே ஆகவேண்டும். பணக்காரரோ ஏழையோ, வயதானவரோ இளைஞனோ, படித்தவரோ படிக்காதவரோ, எல்லோரும் கடவுளை சந்தித்தே ஆகவேண்டும்; இந்த வாழ்க்கையிலே பலரை சந்திப்பதை இரத்து செய்யமுடியும், ஆனால் நாள் ஒன்று வருகின்றது, அந்த நாளிலே உன்னை உண்டாக்கிய உன் கடவுளை நீ எதிர் கொள்ளுவதை தவிர்க்க முடியாது. வேதம் சொல்லுகிறது, எபிரேயர் 4:13ல்,
"....அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்"
எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு நாள் திடீரென மறித்து கடவுளின் பிரசன்னத்துக்குள் அழைத்துச் செல்லப் படுவீர்கள். ஸ்காட்லாந்து தேசத்திலே ஒரு வயதான கிறிஸ்தவ பிரசாரகர் ஒருவர் விசித்திரமாக, தனது இனத்தைச் சேர்ந்த ஒரு கடைக்காரரிடம் சென்றார். அந்த கடைக்காரர், "கடையிலே நான் மிகுந்த வேலையாக இருந்தேன், என்னுடைய வேலைகளுக்கிடையில் அந்த பிரசாரகர், கதவைக்கூட தட்டாமல் வந்து நின்று, திடீரென்று, என்னை எதிர்பார்த்தீர்களா? எனக் கேட்டார். "இல்லை, நான் எதிர்பார்க்கவில்லை" கடைக்காரர் பதிலளித்தார். பிரசாரகர் ஒரு மணித்துளி அமைதியாகி பின்பு கடுமையான குரலில், "நான் சாவாக இருந்திருந்தால் என்னவாகும்?" வந்த வேகத்திலேயே கடையைவிட்டு வெளியேறிவிட்டார். அந்த கடைக்காரர் (இந்த அனுபவத்தைக் கூறும்போது) அது எனது வேலையை நிறுத்தி யோசிக்க வைத்தது. அந்த நிகழ்ச்சியின் முடிவு, அவர் மனந்திரும்பி இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார்.
கிறிஸ்தவர்களுக்கு, தங்கள் கடவுளை சந்திப்பது என்பது, மயிர்கூச்செரியும் நிகழ்ச்சியாக இருக்கும். அப்போஸ்தலர் பவுல், தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலே 2 தீமோத்தேயு 4:6ல்,
"..... நான் இப்பொழுதே பான பலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது"அவர் சாவதற்கு சிறிது நேரத்துக்கு முன் இவ்வாறு கூறுகிறார். ஆனால் அவிசுவாசிகளுக்கு கடவுளை சந்திப்பது என்பது பயப்படக்கூடியதாக இருக்கும். வேதம் கூறுகிறது, எபிரேயர் 10:31ல்,
"ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது, பயங்கரமாயிருக்குமே"
மேலும் எண்ணாகமம் 14:17ல்,
"கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும் அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும் குற்றமுள்ளவர்களை குற்றமற்றவர்களாக விடாமல்....."நீங்கள் ஆண்டவருடைய அன்பை எதிர்த்தும், அவருடைய இரட்சிப்பை மறுத்தும், அவருடைய எச்சரிப்பை உதாசீனப்படுத்தியும் இருந்தால், ஒருநாள் அவருக்கு முன்பாக நிற்கும்போது அது கிலியூட்டுகின்ற நாளாக இருக்கும்.
3) காலந்தாழ்த்துவது முட்டாள்தனம்:
உங்களில் ஒவ்வொருவரும் கடவுளைப் புண்படுத்தி இருக்கிண்றீர்கள். கடவுளுடைய நீதி, உங்களின் பாவங்களுக்காக நீங்கள் தண்டனையை அடைய வேண்டும் என வற்புறுத்துகின்றது. ஆனால் கடவுளுடைய அன்பு ஒரு தீர்வை உடையதாய் இருக்கிறது. அது கடவுளுடைய சொந்த குமாரனாகிய இயேசுவின் மரணம். ஏசாயா கூறுகின்றார், 'கர்த்தரோ நாமெல்லோருடைய பாவத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்' உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு கிறிஸ்துவின் மரணம் அமைகின்றது. நீங்கள் உங்கள் இருதயத்திலே அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும். அது காலம் தாழ்த்தும் மனப்பாங்காய் இருக்கக்கூடாது. காலந்தாழ்த்துவது என்பது வேறொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம் என ஒத்திவைப்பது. வேதம் கூறுகின்றது, பவுல் பெலிக்ஸ்க்கு, (யூதேயாவின் ரோம கவர்னர்) கர்த்தருடைய இரட்சிப்பின் திட்டத்தை அறிவித்தபொழுது,
'அவன் நீதியையும், இச்சையடக்கத்தையும் இனிவரும் நியாய தீர்ப்பையும் குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து, இப்பொழுது நீ போகலாம், எனக்கு சமயமாகும்போது உன்னை அழைப்பிப்பேன் என்றான். அப்போஸ்தலர் 24:25
உங்களில் யாராவது இன்று இரவு 10:30க்குள் மரித்துவிடலாம். உங்களுக்கு சாவு எப்பொழுது வரும் என்பதை நீங்கள் அறியீர்கள். ஆனால் ஆண்டவர் அழைக்கும் போது நீங்கள் போய்த்தான் ஆகவேண்டும். இன்னும் சில மனிதர்கள் தாங்கள் சாகப் போகும் பொழுது, ஆண்டவருக்கு தங்கள் இருதயத்தை ஒப்புக் கொடுக்க யோசனையாய் இருக்கின்றார்கள். ஆனால் 11 மணிக்கு என திட்டமிடுகின்றவர்கள், 10:30க்கே போய் விடுகின்றார்கள். அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொடுப்பதில்லை. காலந்தாழ்த்துவது என்பது எப்பொழுதுமே ஆபத்தானது.
வாழ்க்கை என்ற கடிகாரத்தில், சாவி கொடுக்கப்படுகின்றது ஆனால் ஒரு முறை,
ஒருவருக்கும் வல்லமையில்லை
எப்பொழுது பெரிய முள் நிற்கும்
தாமதமாகவா அல்லது முன்னதாகவா
4) கிறிஸ்துவை நிராகரிப்பதின் மடமை:
இரட்சிப்பு என்பது அன்பளிப்பு. சம்பாதித்து பெறுவது அல்ல. வேதம் சொல்லுகிறது ரோமர் 6:23ல்,
"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வாரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்"
இங்கு பாவம் என்பது ஒரு தலைவனைப்போல உள்ளது. அது சம்பளம் தருகின்றது. திகிலூட்டும் சம்பளம் என்னவெனில், ஆண்டவருடைய பிரசன்னத்திலிருந்து உங்கள் ஆவி, ஆத்துமாவை நிரந்தரமாக பிரித்துவிடுவதுதான். இதே வசனத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் பரிசுத்தத்தின் சம்பளத்தை வாசிக்கிண்றீர்கள். அது நித்திய ஜீவன். எளிதாக கூறவேண்டுமானால், கடவுளின் அன்பளிப்பு அழிவில்லாத வாழ்க்கை.
அழிவில்லாத வாழ்க்கை ஒரு அன்பளிப்பு. கடவுள் மிகச் சரியாக அன்பளிப்பை விற்க மறுத்துள்ளார். உங்கள் வேதாகமத்தில் கடைசி பக்கத்தில் அவரது கடைசி அழைப்பை நீங்கள் பார்க்கலாம். வெளி.22:17ல்,
"ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவ தண்ணீரை ஜீவ தண்ணீரை இலவசமாய் வாங்கி கொள்ளக் கடவன்"
இரட்சிப்பு (பாவத்தின் தண்டனையில் இருந்து விடுதலை) என்பது கடவுளின் இலவச அன்பளிப்பு. நம்மில் அநேகர், அதை வேலை செய்து சம்பாதிப்பது, புண்ணியங்களை செய்வது, வேள்வியை வளர்ப்பது இப்படியாக இரட்சிப்பை பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். கிறிஸ்தவர்களே கூட சபையின் செயல்பாடுகளை வைத்து ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாகின்றார்கள். ஆனால் வேதாகமம் சொல்லுகிறது தீத்து 3:5ல்,
"நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறு ஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்"
எந்த மனிதனும் எழுந்து நின்று, நான் இந்த இந்த நற்செயல்களை செய்தேன் அதினால் கடவுள் எனக்கு இரட்சிப்பைக் கொடுத்தார் என்று கூறமுடியாது. கிறிஸ்தவ வாழ்க்கையில் நற்செயல்கள் என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் அவைகள் பாவத்திற்கு பரிகாரமாகாது. நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுடைய பாவங்களை தன் மேல் ஏற்றுக்கொண்டு, கல்வாரிச் சிலுவையில் இரத்தம் சிந்தியதை விசுவாசித்ததால் மட்டுமே இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுடைய பாவங்களுக்கான தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார். நாமெல்லாருக்காகவும் கடவுள் இதைச் செய்தார். அதையே உனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கின்றார்.
ஒரு அன்பளிப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் அது உங்களுக்கு அன்பளிப்பாக இருக்கும். அதைப்போலவே மன்னிப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையானால், மன்னிப்பு உங்களுக்குரியதல்ல. ஜார்ஜ் வில்சன் என்பவரைக் குறித்த வழக்கு அமெரிக்க தேச வரலாற்றிலே ஒரு விசித்திரமாகும். பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்க நீதிமன்றம் கி.பி. 1830ல், கொலைக்குற்றத்திற்காக்கவும் தபால்களை திருடியதற்காகவும், அவனுக்கு தூக்குத்தண்டனையை விதித்தது. அப்பொழுது ஆண்ட்ரு ஜேக்சன் என்பவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாளுக்கு மூன்று வாரங்களுக்குமுன் ஜார்ஜ் வில்சனின் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி, வில்சனுக்கு மன்னிப்பு அளித்தார். ஆனால் இந்த உலகை திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சியாக வில்சன் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மன்னிப்புக்குப் பதிலாக நீதிமன்றத் தீர்ப்பின்படி தன்னை தூக்கிலிடுவதில் உறுதியாக நின்றார். இந்த நிலை முன்பு ஒருபோதும் எழுந்ததில்லை. ஏனெனில் முன்பு எப்பொழுதெல்லாம் மன்னிப்பு வழங்கப்பட்டதோ, அப்பொழுதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாட்டத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது; இப்பொழுது சிறைசாலைத் தலைவன், நீதிமன்ற தீர்ப்பின்படி தூக்கிலே போடவேண்டுமா? அல்லது ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுதலையளிக்க வேண்டுமா? இந்த இடத்திலே சட்டம் அமைதியாக இருந்ததினால், ஜனாதிபதி, உச்சநீதிமன்றம் இதில் உடனடியாக தலையிட்டு முடிவு காண வேண்டும் என அழைத்தார். முடிவு இப்படியாக எழுதப்பட்டது: மன்னிப்பு என்பது ஒரு தாளில் உள்ளது; குற்றத்தில் சிக்கியுள்ள மனிதன் இதை ஏற்றுக் கொள்ளுவதை பொறுத்து, இதற்கு மதிப்பு வருகின்றது; தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதன் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது கடினமானது; மறுத்தால் மன்னிப்பு, மன்னிப்பு ஆகாது. எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜார்ஜ் வில்சன் தூக்கிலிடப்பட வேண்டும்.
அநேக மக்கள் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த வில்சனை முட்டாள் என ஏற்றுக் கொள்ளுகின்றனர்; ஆனால் அதே மக்கள்கடவுள்அருளும்மன்னிப்பைதினந்தோறும் உதறித்தள்ளுகின்றனர். நீங்கள் இன்று இரட்சிக்கப் படாதிருந்தால், உங்கள் பாவத்தின் பலன், நீங்கள் அக்கினியும், கந்தகமும் எரிகின்ற நரகத்துக்கு பாத்திரர். ஆனால் கர்த்தர் உங்களுக்கு மன்னிப்பைக் கொடுக்கின்றார்! நீங்கள் பாவத்திலேயே மரிக்கத் தேவையில்லை; ஏனெனில் இயேசு உங்களுக்காக மறுத்திருக்கிறார்; சற்று கடினமாக கூறவேண்டுமானால்,சரியான மனநிலையில் இருக்கும் ஒருவன், கல்வாரியில் இயேசுகொள்முதல் செய்த அன்பை ஏற்க மறுக்க மாட்டான்; இந்த வாய்ப்பை நீங்கள் மறுத்தால் உங்களுக்கு மன்னிப்பே இல்லை. நீங்கள் உங்கள் சொந்த தண்டனையை ஏற்கவேண்டும்; உங்கள் பாவத்துக்கான அபராதத்தை நீங்கள் சுமக்க வேண்டும்.
கர்த்தர் தமது வசனத்தில் பரிந்துரைக்கின்றார்,
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி;....... நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்." (அப்போஸ்தலர் 16:31; 2:38)
இப்பொழுது நீங்கள் அதைச் செய்வீர்களா?
(மேற்கண்ட பகுதி “Bible helps” நிறுவனத்தாரின் Hearold S. Martin அவர்கள் எழுதிய PREPARE TO MEET THY GOD என்ற தலைப்பில் வெளியான , A Bible helps Tract No: 16 ஐ மையமாகக் கொண்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. மொழிபெயர்த்தவர்:செல்வின் துரை.
Add caption |