நீங்கள் இயேசுவின் காயங்களால் சுகமானீர்கள்!
நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
"நாம் பாவத்துக்கு செத்து, நீதிக்குப் பிழைக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" (1பேதுரு 2:24)
இந்த வாக்கின் மூலமாக உங்களை ஆசீர்வதிக்க தேவனுக்குப் பிரியமானது. இது ஒரு விசுவாச வசனம். ஜெபம் எப்பொழுதும் முடிவுக்கு நேராக வழிநடத்தும். உதாரணத்துக்கு, நீங்கள் உங்கள் சுகத்திற்காக ஜெபிக்கிண்றீர்கள் எனில் அதன் முடிவு, சுகம். விசுவாசம் என்பது, முடிவிலிருந்து ஆரம்பமாகின்றது. உதாரணத்துக்கு நீங்கள் விசுவாசிக்கும்பொழுதே சுகமாகிவிட்டீர்கள்! மேலே உள்ள வசனத்தின்படி, இதைப்படிக்கும் நீங்கள் சுகமாகிவிட்டீர்கள்! வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், என் வார்த்தைகள் ஒருக்காலும் ஒழிந்து போகாது (மத்.24:35; மாற்கு 13:31; லூக்கா 21:33) என்று சொன்ன இயேசுவின் வாக்கு இது! டாக்டர் என்ன சொன்னாலும் எப்படி அப்படியே ஏற்றுக்கொள்ளுகிண்றீர்களோ அதைப்போல ஆண்டவரின் இந்த வாக்கையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே தேவன் உங்களைத் தெரிந்து கொண்டுள்ளார். அனைத்தும் ஆண்டவரின் ஆளுகையின் கீழ் இருக்கின்றது; உங்கள் சரீரம் உட்பட!
தவறான ஜெபத்துக்கு ஆண்டவர் ஒருபோதும் பதிலளிக்க மாட்டார்! ஒரு சிலருக்குடைய ஜெபம் இதைப்போல இருக்கின்றது. ஆண்டவரே என் உயிரை எடுத்துக்கொள்ளும், எனக்கு வாழவே பிடிக்கவில்லை. இப்படி ஜெபிப்பது, தப்பான ஜெபமாகும், இதற்க்கு ஆண்டவர் பதிலளிப்பதில்லை!
உதாரணத்துக்கு, எலியாவின் ஜெபம்!
"போதும் கர்த்தாவே என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிராக்களை பார்க்கிலும் நல்லவன் அல்ல..." (1இராஜா. 19:4)
உடனே ஆண்டவர் தனது தூதனை அனுப்பி, எழுந்து பூசி உனக்கு இன்னும் நிறைய வேலை இருக்கின்றது எனக்கூறி எழுப்பிவிட்டார். அதைப் போல உங்களால் ஆண்டவருக்கு நிறைய காரியங்கள் ஆகவேண்டியதிருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு சாவு இல்லை! இயேசுவின் தழும்புகளால் நான் குணமானேன் என்று சொல்லி எழுப்புங்கள்!
ஆண்டவர் ஞாபகப்படுத்துகிற வேளையிலே கவனத்தை செலுத்துங்கள்! ஆண்டவருடைய பிரசன்னமும், கிருபையும் எப்பொழுதும் உங்களோடு இருப்பதாக! ஆமென்! ஆமென்!!
YOU ARE HEALED BECAUSE OF JESUS' WOUNDS
Greetings in the name of our Lord Jesus Christ!
According to 1 Peter 2:24,
"who Himself bore our sins in His own body on the tree, that we, having died to sins, might live for righteousness - by whose stripes you were healed”
God is loving to bless you according to this promise. This is a verse of faith. Prayer always leads us to the to the end. For example, if you pray for your healing, the end is healing. But Faith arises from the end.
For example, when you have faith you have been healed. The sick people who read this have been healed. Though the heavens and thd earth may pass away, my words shall never perish, thus saith the Lord Almighty. This is His promise. As we accept whatever the doctor says like wise we should accept God’s promise, moreover, even when you were in your mother’s womb, God predestined us. Everything is under God’s control, including your body.
God never answers a wrong prayer. Some peple pray like this, Lord take away my life, I do not like to live. When we pray like this it is a wrong prayer; God never answers such prayers.
For example, Elizah’s prayer,
“It is enough! Now, Lord, take my life, for I am no better than my fathers!” (1Kings 19:4)
Immediately God sent His angel saying, “Arise and eat, because the journey is too great for you”. Likewise God has a lot of work to do through you. Now there is no death for you. Thus get up saying I’m healed by the stripes of Jesus.
So concentrate on the work which the Lord reminds you. May the Lord’s presence and grace be with you always. Amen, Amen.