உங்களுக்கு ஒன்று தெரியுமா?
கிறிஸ்துவில் அன்பான நண்பர்கள் யாவரையும் வாழ்த்துகின்றேன்! மேலே உள்ள தலைப்பில் ஒரு முக்கியமான விடயத்தைப் பகிற்ந்து கொள்ளுகின்றேன்!!
"எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்" (லூக்கா 16:13)
அறிந்தோ அறியாமலோ எல்லாக் காலத்திலும் பணத்துக்கு, உடைமைகளுக்கு எல்லாவற்றைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் மக்களிடையே இருந்திருக்கின்றது. அதனாலேதான் கர்த்தர் மேலே உள்ள வசனத்தைக் கூறியுள்ளார். (தமிழில் கூட 'காசேதான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா' எனப் பாடிவைத்தான். ஆனால் இந்தப் பாடல், பைபிள் வசனத்துக்கு முறன்பாடானது, கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.)
எனவேதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்து பேசியதை விட, பணத்தைக் குறித்து அதிகம் பேசியுள்ளார். பாதுகாப்பைக் குறித்து பேசும்போது, ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவி, ஊழியக்காரர்களின் செயல்பாட்டைக் கூறும்போது, ஐந்து தாலந்து, இரண்டு தாலந்து, ஒரு தாலந்து எனப் பணத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசினார். மேலும் பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்து பேசும்பொழுது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன், நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டவன் எனப் பேசினார். பல்வேறு விடயங்களை, பேசும்போது பணத்தை ஒப்பிட்டுப் பேசினார். காரணம் மக்கள் பணத்தின் மீது ஈர்ப்புடன் இருக்கின்றார்கள் என்பதுதான்.
பணம் பாதாளம் வரைப் பாயும் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பணம் நித்தியமான வீடுகள்வரை ஏறும்.
இதைஎல்லாம் வாசிக்கும்போது, நீங்கள் பண ஆசையுள்ளவர்களாக இருங்கள் என நான் வற்புறுத்துவதைப் போன்றிருக்கும். விரிவாக விளக்கம் தேவை எனில் ஐசுவரியம் VS பணஆசை என்ற ரூபாய் 10 மதிப்புள்ள புத்தகத்தைக் கேட்டு எனக்கு எழுதுங்கள். கீழே விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றேன்! லூக்கா16:9ல்,
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக்கா16:9)
நீங்கள் மரித்து அல்லது மறுரூபமாகி பரலோகத்திற்குச் செல்லும்போது, உங்களை நித்தியமான வீடுகளுக்கு வரவேற்க இங்கே உங்கள் செல்வத்தினால் நண்பர்களைச் சம்பாதியுங்கள். பிரதர்! சிஸ்டர்!! நீங்கள் போதும் என்ற மனதுடனே கூடிய தெய்வ பக்தியிலேயே வாழ்ந்துவிட்டேன், எனவே ஊழியத்திலே விதைக்கவில்லே, நண்பர்களைச் சம்பாதிக்கவில்லை என்று சொல்லுவீர்களாகில், உங்களை வரவேற்க நண்பர்கள் என்று யாரும் நித்தியமான வீடுகளிலே இருக்கமாட்டார்கள்! எனக்குப் பரலோகம் போனாலே போதும் புரோ! அந்த அளவிற்கு பரலோகத்தை சபைகள் பூட்டி வைத்திருக்கின்றன என அறிகின்றேன். இயேசு என்னை வரவேற்றால் போதும் எனக் கூறுவீர்களானால், மேலே உள்ள வசனத்தின் பொருள் என்ன? எனக்கு மோசேயைத் தெரியும், தாவீதைத் தெரியும் எனக் கூறுவீர்களானால், உங்களுக்கு அவர்களைத் தெரியும், ஆனால் அவர்களுக்கு உங்களைத் தெரியாது.
எனக்குச் சிறுவர் ஊழியத்திலே சிறிது பழக்கம் இருக்கின்றபடியினால் ஒரு சிறிய நாடகம், சரியா!
தாவீதை எடுத்துக் கொள்ளுவோம். அவரைப் பார்ப்பதற்கு பத்து நாட்களாக வரிசையில் காத்திருந்து, சந்திக்கின்றீர்கள். அவர்,
'நீங்கள் எந்த நாட்டிலிருந்து வருகின்றீர்கள்? என்ற விசேடம்?'
'ஐயா உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன்! வேதாகமத்தில் படித்திருக்கிறேன்!! எங்கள் ஊழியர்கூட உங்களைப் பற்றி, நீங்கள் எழுதிய பாடல்களைக் குறித்து நிறைய கூறியிருக்கின்றார்'
அவர், 'வாழ்த்துக்கள்! இங்கே வந்து என்னைச் சந்தித்ததில். இன்னும் நிறையப்பேர் 20 நாட்களாக என்னைச் சந்திக்க வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்! போய் வாருங்கள்!! ஒரு நிமிடம்.... இங்கே உங்களை வரவேற்பதற்கு நண்பர்களைச் சம்பாதிக்கவில்லையா?'
எனவே உங்களுக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் எனக் கூறுவதை விட்டு விட்டு, உங்களது உலகப்பொருட்களினாலே இன்னும் இரட்சிக்கப்படாத நண்பர்களைச் சம்பாதிக்க முயலுங்கள்!! ஊழியத்திலே விதையுங்கள். விதைக்கின்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! உங்களை வரவேற்க நித்தியமான வீடுகளில் பெருந்திரளான கூட்டம் ஆயத்தமாயிருக்கும்!! ஆதலால்தான் பணம், நித்தியமான வீடுகள்வரைக்கும் ஏறும். இயேசுவும் கூடப் பரலோகத்தைவிட பணத்தைப் பற்றி அதிகம் பேசியுள்ளார். சத்திய வசனத்தின் படி வாழுங்கள். கடைசியாக, 2இராஜாக்கள் 4:1ல்,
"தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்."
இந்தக் குடும்பத்தின் சூழலைப் பாருங்கள்! இது மிகவும் கடுமையானது! கொடுமையானது!! பணம் எவ்வளவுதூரம் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மதிக்கப்பட்டது என்பதையும் இந்த வசனத்திலிருந்து அறிகின்றோம்!
ஊழியத்திலே விதையுங்கள்! ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!!
ஜெபிப்போம்!
அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம்! "விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" என்று 2கொரிந்தியர் 9:10ல், எழுதியிருக்கிற பிரகாரம் ஆசீர்வதியும்! இதைப் படிக்கின்ற நண்பர்கள் அனைவரையும் கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை யாவறிலுமிருந்து விடுதலை செய்து ஆசீர்வதிப்பதற்காய் நன்றி! கிரமமாய் விதைக்கவும், அறுவடையை அபரிமிதமாகப் பெற்றுக் கொள்ளவும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் பிதாவே. ஆமென், ஆமென், ஆமென்
ஐசுவரியம் VS பணஆசை
என்ற புத்தகத்தைப் பெற, G PAY: 9840836690 மேலும் எமது மின் அஞ்சல் முகவரி: SELVIN12ZION@GMAIL.COM நன்றி! நன்றி!! நன்றி!!!