இராப்போசனம் / நற்கருணை
உலகளாவிய தொப்புள் கொடித் தமிழ் உறவுகள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்!
நீண்ட நாட்களுக்குப் பின், வலைத்தளத்தின் மூலமாக உங்களைச் சந்திக்கச் செய்த தேவனைத் துதிக்கிறேன்!
நற்கருணை ஆராதனையில் பங்கு பெற்று இயேசுவின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தைப் பாணம் பண்ணி இயேசுவின் மரணத்தை நினைவு கூறுகின்ற உங்களை வாழ்த்துகிறேன்!!
1கொரிந்தியர் 11:26ல்,
"ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்"
ஆதாம் ஆண்டவருடைய கட்டளையை மீறியபொழுது, ஆதியாகமம் 3:17ல்,
"பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்"
இங்கே ஆண்டவர் ஆதாமை சபிக்கவில்லை ஏனெனில் அவன் ஆண்டவரால் சிருஷ்டிக்கப்பட்டவன், மகனைப் போல. எனவே அவனது மீறுதலினால் வரும் விளைவுகளைப் பற்றி இங்குக் கூறுகின்றார். பூமி சபிக்கப்பட்டதினால், அவனுடைய வாழ்க்கை கடினமாகும் எனக் குறிப்பிடுகின்றார்.
காயீன் தன் சகோதரனான ஆபேலைக் கொலை செய்தபொழுது, ஆதியாகமம் 4:11,12ல்,
"இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியிலே நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்."
இங்கே காயீன் ஆண்டவரிடமிருந்து நேரடியாகச் சாபத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றான். நற்கருணை ஆராதனையில் இயேசுவின் இரத்தத்தையும் பாணம் பண்ணும்போது, உங்களால் இந்தப் பூமி ஆசீர்வதிக்கப்படுகின்றது! காயீனால் இந்த பூமி பெற்ற சாபம் நிவர்த்தியாகின்றது. அடுத்த முறை நற்கருணையில் பங்கு பெரும்போது, என்னால் இந்தப் பூமி (உங்கள் தோட்டம், துரவு) ஆசீர்வதிக்கப்படுகின்றது என்ற விசுவாசத்தோடு பங்கு பெறுங்கள்!!
மாம்சமும், இரத்தமும்:
மத்தேயு 16:17ல்,
"இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரமாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்"
எமது ஊழியத்திலே நாம் அதிகமாக விரும்புவது, அனேக வெளிப்பாடுகளை உள்ளடக்கியதாய் எமது பிரசங்கம் இருக்க வேண்டும் என்பதுதான். பேதுருவின் மூலமாக வந்த வெளிப்பாடு எப்படி இயேசுவை உற்சாகப்படுததியதோ, அதைப் போல எமது பிரசங்கத்திலே பிதாவின் வெளிப்பாடுகள் நிறைந்ததாய் இருக்க வேண்டும். மட்டுமல்ல, இயேசுவிடமிருந்து உடனே வாக்குத்தத்தத்தைப் பேதுரு பெற்றுக் கொண்டதைப் போல, எமது சத்தத்தைக் கேட்கின்ற யாவரும் ஆண்டவரிடமிருந்து வாக்குத்தத்தத்தைப் பெற்று தங்கள் வாழ்க்கையிலே உயர்வடைய வேண்டும். அடுத்த முறை நீங்கள் நற்கருணை ஆராதனையில் பங்கு பெறும்போது, என்னையும் எமது ஊழியத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள்! மேலும், எபிரேயர் 2:24ல்,
"ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்காயிருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் மாம்சத்தையும் உடையவரானா்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,....."
இராப்போஜனத்தில் பங்குபெறும்போது, அவருடைய மரணத்தை நினைவு கூறுகின்றோம். அவருடைய மரணம், பிசாசை அழித்துவிட்டபடியினால், நமது வாழ்க்கையில் பிசாசுக்கு எந்த அதிகாரமும், வல்லமையும் இல்லை என்பதையும் நினைவு கூறுகின்றோம். அடுத்த முறை பங்கேற்கும்போது இந்தச் சத்தியத்தை மனதில் வையுங்கள்! 1கொரி.15:50ல்,
"சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை"
புதிய ஏற்பாடு முழுவதும் நமது உள்ளம், மனம், ஆத்துமா இவைகளைப் பற்றியே பேசுகின்றது. இயேசுவும் கூட மனந்திரும்புங்கள் என்றே பிரசங்கித்தார். உங்கள் ஆத்துமா வாழும்போது, உங்கள் வாழ்க்கையே ஆசீர்வதிக்கப்படுகின்றது. பிறனுக்கானவைகளையும் நோக்குவோம்!! கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கின்றோம். இன்று அனேகர் தங்கள் பாவ சுபாவம் போகவிலலையெனப் பேசுகின்றனர். அது போகாது, நாம் அதைச் சிலுவையிலே அறைந்திருக்கிறோம்!! அல்லேலுயா!!!!
உங்களை ஏதோ ஒரு நிச்சமில்லாதவற்றை விசுவாசிக்க வேதம் அழைக்கவில்லை. மிகவும் உறுதியான வசனம் நமக்கு உண்டு. அப்படிப்பட்ட வேதத்தின் வெளிச்சத்திலே நாம் நடக்கின்றோம். வாழ்த்துக்களுடன்....
ஜெபிப்போம்!
அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம்! நாங்கள் பாவிகளாய் இருக்கையில் உம்முடைய அன்பை, உமது திருக்குமாரனாகிய இயேசுவை சிலுவையிலே அடிக்க ஒப்புக் கொடுத்ததிலிருந்து அறிகின்றோம்.... நீங்கள் எங்கள்மீது வைத்திருக்கின்ற மாறாத அன்பிற்காக உமக்கு நன்றி!! இராப்போஜனத்தின் மூலமாக இயேசு எங்களுக்காக, பாவங்களை மன்னிக்க, எங்களைச் சுகமாக்க, ஐசுவரியவான்களாக்க, எங்கள் வாழ்க்கையில் பிசாசின் சகல வல்லமைகளையும் அழிக்கச் சிலுவையில் மரணித்தார் என்பதை நினைவு கூறுகின்றோம். இதன் மூலமாகப் பூமி ஆசீர்வதிக்கப்படுவதற்காய் நன்றி! இயேசுவின் நாமத்தில் ஜெபங்கேளும் பிதாவே! ஆமென், ஆமென், ஆமென்....
ஊழிய அழைப்புக்கு
selvin12zion@gmail.com
Cell: +91 9840836690 & +91 8939018488
No comments:
Post a Comment