5 Dec 2015

IT'S RAINED @ CHENNAI

சென்னையில் மழை...... சில காட்சிகள்!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
ஒரு வாரத்துக்குப் பின் இன்றுதான் (05/12/2015) அகலக் கற்றை இணைப்பு கிடைத்தது. எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள இரு சாலைகளின் சில காட்சிகளை இங்கே இணைத்துள்ளேன், 107 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய மழை சென்னையில் பெய்ததாக சரித்திரம் சொல்லுகின்றது. இனி காட்சிகளைப்பார்ப்போம். கடைசியில் காணொளி காட்சியும் உண்டு.
இது 63-எ 6வது பிரதான சாலை, ஆசிரியர் காலனியில் உள்ள எங்கள் வீட்டில் எனது அறை 

ஆசிரியர் காலனி, வீனஸ் நகர் செல்லும் அண்ணா சாலையில், வலது பக்க காட்சி  

நடுவில் உள்ள கம்பு அங்கே உள்ள பள்ளத்தைக் காட்டுகின்றது 

 

சாலையின் ஓரத்தில் நிற்கும் கார் 
இங்கே அண்ணா சாலையின் இடது பக்க காட்சிகள் 

 

 

இரு பக்க வீடுகளின் நிலைமை 






2அடி உயரத்தில் உள்ள வீடு 




தூரத்தில் நடுவே உள்ள கட்டிடம் பேட்மின்டன் அகாடெமி, அடுத்த புகைப்படங்களிலும்.....  




இந்த வெள்ளத்திலும் வேலைக்குச் செல்லும் பெண்கள்....

பக்கத்து சாலையில் உள்ள அலுவலகத்தில் வாயிற் காப்போன் 

அம்மா உணவகத்தில் மதிய உணவு  வாங்கிகொண்டு.......






புதிதாக வரும் அடுக்ககம்! தரை தளத்தில் தண்ணீர் இல்லை,ஆனால் வெளியே செல்ல படகு வேண்டும்!

இந்த சாலை வழியாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கின்றது...

காலி மனைகள் எல்லாம் குளம் போல் காட்சி அளிக்கின்றது!

இந்த வெள்ளத்திலும் காய்கறி விற்ப்பனையாளர்! தொடர்ந்து சில படங்கள்! 








ஒரு மசூதிக்கு முன்பு... ஒருசில காட்சிகள்!



தண்ணீரின் முடிவிலும் ஆழம்! காய்கறி விற்பனையாளரின் சைக்கிளை வைத்து நீர் மட்டம்......

வெள்ளத்தை தன் கைபேசியால் புகைப்படம் எடுக்கும் ஒருவர்....



அண்ணா சாலையின் மேலும் சில காட்சிகள்......





அருகில் உள்ள கம்பெனியில் இருத்து தண்ணீரை வெளியேற்றுகின்ற  காட்சி!!

அடுத்த 5 புகைப்படங்கள் அண்ணா சாலையின் அடுத்த முனையிலிருந்து....







இது விவேகானதா சாலை. இந்த சாலை போட்டு பல வருடங்கள் ஆகியிருக்கும். இதின் ஒரு சிறப்பு அம்சம், இதில் சிற்றுந்து செல்லும் சாலை. (வில்லிவாக்கம் டு புதூர்) இந்த சாலையில் கோடை காலத்திலேயே  மெதுவாகத்தான் செல்ல முடியும்... ஆங்காங்கே பள்ளங்கள் அதிகம்! கவனமாக செல்லுவோமா!




இங்கே கொடி கட்டியிருக்கும் இடத்தில் பள்ளம்!

பைக்கை தள்ளிக்கொண்டுதான் செல்லவேண்டும்! எங்கள் வீட்டுக்கு செல்லும் சாலையானாலும் இந்த வழியே செல்லுவதில்லை! சுற்றித்தான் செல்லுகின்றோம்!

நடுவில் மர கொப்பை வெட்டிப் போட்டிருக்கும் இடம் பள்ளம்!


6 தெருக்களிலும் வெள்ளம்! இன்னும் இரு புகைப்படங்கள்......



இந்த தண்ணீர் எல்லாம் ஓடி வந்து கொண்டு இருக்கின்றது....விவேகானதா சாலையை நோக்கி....

கடைக்குள்ளே தண்ணீர்....

அடுக்ககத்தில்.....

இப்பொழுதுதான் ஒரு லாரி வருகின்றது...... பக்கத்து தெருவுக்குள்ளே சென்றுவிட்டது...



தெருவெல்லாம் தண்ணீர்...... குடிநீரோ...... கலங்கலாக....

பள்ளம் இருக்குமிடம் தெரியவில்லை.....

குடிநீர் விற்பனை செய்யும் நபர்...."சார் என்னையும் எடுங்க"

முருகன் ஸ்டோர் ஓனர்.... கவலையுடன்...... "சார், இதை வாட்ஸ் அப்பில் போடுங்க..... அடுத்த 2 படங்களும் முருகன் ஸ்டோர்தான்...... 



ஒரு அடுக்ககத்தில்.....


இந்த ஸ்டோர்ரும்......... 




மின் வாரிய ஊழியர்கள்...... "சார் நாங்க 3 நாளா வீட்டுக்கே போகல சார்! "நீங்க எந்த பத்திரிகை?" ஒரு கிறிஸ்தவ பத்திரிகை", "போடுங்க சார்!"
இந்த படத்தில் ஓரத்தில் உள்ள  பெட்டி உயரத்தில் இருக்கின்றது.... அநேக பெட்டிகள்  தண்ணீருக்குள் மூழ்கி இருக்கின்றன..   

"சார் ஒரு அரை மணி நேரமாவது, மின்சார இணைப்பு கொடுங்க.... நாங்க மோட்டார் போட்டு கொள்ளுகின்றோம்... என அநேக வீடுகளில் கேட்கின்றார்கள்!  நாங்கள் எப்படி கொடுப்பது?" 




வலது ஓரத்தில் உள்ள பெட்டிக்கடைஎல்லாம் தண்ணீருக்குள்....

இந்த கடைகளுக்குள் தண்ணீர்..... ஒரு வாரமாக திறக்கவில்லை.... மேலும் இரு படங்கள்...



எங்கள் பகுதியில் உள்ள இரண்டு பூங்காக்களில் இது பெரியது.....இது சிறுவர்கள் விளையாடும் பகுதி....

எனக்கு வேறு ஊழியம் இல்லாத பொழுது இங்கே வருவேன்! இங்கு அநேகரை நண்பராக கொண்டிருக்கின்றேன்....

நூறுக் கணக்கான கைப்பிரதிகளைக் கொடுத்திருக்கின்றேன்.....

25க்கும் மேலாக புதிய ஏற்பாடு விநியோகித்திருக்கின்றேன்....

கவலையோடு வருகின்றவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆண்டவரை அறிமுகப்படுத்தி இருக்கின்றேன்!

அநேகர் உற்ச்சாகமாக வீடுகளுக்கு சென்றிருக்கின்றார்கள்!

ஒருமுறை இதே பூங்காவில் ஒரு வாலிபன் (மெட்ரோ ட்ரெயினில் வேலை செய்பவன்) ஒரு என் அருகில் வந்து அமர்ந்து கையில் இருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தான்!

நான் அவனுக்காக மனதுக்குள் ஜெபித்துவிட்டு, மெதுவாக பேச்சு கொடுத்தேன்! அந்த புத்தகத்தை காண்பித்தான். தலைப்பு, "தியானம்" எனக்கு கொஞ்சம் ஆச்சரியம்!!

இந்த வயதிலேயே தியானத்தைப் பற்றி படிக்கின்றானே.... ஏன் இந்த புத்தகத்தைப் படிக்கின்றாய்? 

"ஐயா..... எனது மனதிலே திடீர் திடீர் என்று மோசமான சிந்தனைகள் வருகிறது... அதை ஜெயிக்க முடியவில்லை...... தியானம் செய்தால் வெற்றிபெறலாம் என வாங்கி படிக்கின்றேன்" 

நான் பிலிப்பியர் 4:8ஐ பேசினேன்... அவன்  உள்ளம் தொடப்பட்டதை அறிந்தேன்... புதிய ஏற்பாடை பெற்றுக்கொண்டான்......

வேறொரு சமயம் ஒரு வாலிப தம்பி, சோகமாக உட்கார்ந்து ஒரு 2ம் வகுப்பு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்.  நான் அவன் அருகில் சென்று அமர்ந்து.... என் கையில் இருந்த பிஸ்கெட்டில் இருந்து இரண்டை கொடுத்தேன்.... பெற்றுக் கொண்டான்.

"தம்பி என்ன செய்கின்றீர்கள்? அவன், "பேச ஆரம்பித்தான், அப்பொழுதுதான் தெரிந்தது அவனுக்கு திக்குவாய் என....... எம்.சி.ஏ. படித்துவிட்டு அநேக இடங்களில் வேலை தேடினான், இவனது குறைபாட்டினால் யாருமே வேலை கொடுக்கவில்லை...... சோகம்..... ஆண்டவரைக் கூறினேன், ஏற்றுக் கொண்டான்.... பைபிள் அன்று நான் கொண்டு செல்லவில்லை.... அவனே கேட்டான், பைபிள் எங்கே கிடைக்கும்?  

"நான் முதலாவது ஒன்று வாங்கி படிப்பேன்"

இவர்கள் இந்த பூங்காவை பராமரிப்பவர்கள்.....

சத்தியத்தைக் சொல்லவேண்டும்....

பூங்காவின் புல்வெளி.... அடுத்த 4 புகைப்படங்கள் 





சிறுவர்கள் அதிகமாய் விளையாடிக்கொண்டிருக்குமிடம்....

பூங்காவின் நுழை வாயில்.....
இது அண்ணா சாலை.......


இது விவேகானந்தா சாலை.......
ஒரு சுற்று சுற்றி விட்டோம், மீண்டும் எனது அறையிலே முடிக்கின்றேன்....
இதை பார்த்த நண்பர்கள், பெரியவர்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்!! உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய வேண்டுகின்றேன்!!!

No comments:

Post a Comment