15 Nov 2016

YOU ARE INVITED!!!


நீங்கள் 
வரவேற்கப்படுகின்றீர்கள்!

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நண்பர்கள்  அனைவரையும்
வாழ்த்துகின்றேன்!
 வரவேற்கின்றேன்!! 
அனைவருக்கும் எமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களோடு 
கிறிஸ்து பிறந்த நாளை ஏழைப்பிள்ளைகளோடு கொண்டாடும்படியாக 
அழைக்கின்றேன்!!!
24/12/2016 சனிக்கிழமை 
மாலை 5 முதல் 8:30 மணி வரை.
இடம்: அருந்ததி நகர், 
பெரம்பூர்,
 சென்னை - 600012
எமது செல்லிடப்பேசி எண்: 9840836690. 
இதில் பிள்ளைகளுடைய நடனம், நாடகம், பாடல், வசனம் அனைத்தும் இடம்பெறும்.
வாருங்கள்! 
இயேசுவின் இரண்டாம் வருகையை துரிதப்படுத்தும் விதமாக, முதலாம் வருகையை இந்த ஏழைப்பிள்ளைகளோடு 
கொண்டாடலாம்!!!
வாருங்கள்! இயேசுவைக் கொண்டாடுவோம்!!!

23 Jul 2016

PREPARE TO MEET THY GOD


உன் கடவுளை சந்திக்க ஆயத்தப்படு

நண்பர்கள் யாவருக்கும் நல் வாழ்த்துக்கள்! 

உங்களை இங்கு சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி!

நீங்கள் படிக்கப்போகும் செய்தி வேதாகமத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது. 
ஆமோஸ் 4:12ல்
"ஆகையால் இஸ்ரவேலே, இந்த பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே நான் உனக்கு இப்படி செய்யப்போகிறபடியினால், உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு"

இந்த வசனம் காலவரையற்ற அடிப்படையான உண்மையைக் குறிப்பிடுகிறது. இதிலே ஒரு அழைப்பு, ஒரு எச்சரிக்கை ஒவ்வொரு தலைமுறையினருக்கும் இருக்கின்றது - நீ உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு. 

நூறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்த ஒரு ரயில்வே கம்பெனி ஒன்று, ஓரிடத்தில் ஒரு பெரும் பிரச்சனையை சந்தித்தது. அது  ஒரு ரயில்வே கிராஸிங். அங்கே நிறைய விபத்துக்கள் நேரிட்டது. புகை வண்டியும், மோட்டார் வாகனங்களும் அடிக்கடி மோதி, நிறைய 
இழப்புக்களும், சாவுகளும் நிகழ்ந்த ஓரிடம். அந்த ரயில்வே கம்பெனி ஒரு பரிசுத்த திட்டத்தை அறிவித்தது. அந்த இடத்தில் மக்களை எச்சரிக்கும் ஒரு மூன்று வார்த்தைகளைக் கொண்ட ஒரு சொற்றோடரை, உருவாக்குபவருக்கு, $2500 அளிக்கப்படும் என அறிவித்தது. நீங்கள் அடிக்கடிப் பார்க்கும் அந்த மூன்று வார்த்தைகளைக் கூறி ஒரு அறிவாளி அந்த பரிசை தட்டிச் சென்றார். அது: நில், கவனி, பார். இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் மதிப்பு, $833 விலையுள்ளது. ரெயில்வே தண்டவாளங்களை கடந்து போகிற ஒருவன் இந்த வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவில்லையானால், அவனுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். நில் என்பது மிகவும் நல்ல வார்த்தை, ஆனால் மக்கள் நிற்கவில்லையானால், பார்  என்ற வார்த்தை எவ்வளவு பாதுகாப்பைக் கொடுக்கிறது! ஆனால் மக்கள் பார்க்கவில்லையானால், கவனி என்ற வார்த்தை எவ்வளவாய் எச்சரிக்கிறது, ஆனால் நீங்கள் கவனிக்கவில்லையானால், என்னவாகும்?  இதைப் போலவே, நீங்கள் மோட்சத்துக்கு வரவேண்டுமானால், நிறைய சின்ன சின்ன பாடங்களை நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் ஆயத்தப்படவில்லையானால் நரகத்துக்கு செல்ல வேண்டியது வரும். 

1) இந்த வார்த்தைகளில் உள்ள எளிமையைப் பாருங்கள்: 

இந்த வார்த்தைகள் மிகவும் எளிமையானது. வேதாகமம் கூறுகிறது, "உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு" ஆயத்தப்படு என்ற வார்த்தை, 'தேவையான முன்னேற்பாடுகளைச் செய்' என பொருள்படும். வருகின்ற கடவுளை சந்திக்கத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய். வேதாகமம் சொல்லுகிறது, இந்த உலகில் பிறக்கும் பொழுது எந்த ஒரு நபரும் கடவுளை சந்திக்க ஆயத்தமாகவில்லை. கடவுள் சொல்லுகிறார், 'இந்த உலகில் பிறக்கின்ற எவனும் நேர்மையற்ற தன்மையிலேயே பிறக்கின்றான்' இதன் பொருள் என்னவெனில் கடவுளை சமாதானத்தில் சந்திக்க உங்கள் பாவங்கள் மூடப்படவேண்டும். வேதம் மிகத் தெளிவாக அறிவிக்கின்றது, அது உங்கள் பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தாலே கழுவப்படவேண்டும். 1யோவான் 1:7 சொல்லுகிறது,
"....இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்" 
ஆயத்தப்படு என்பது மிகவும் எளிமையான வார்த்தையாகும். இதன் பொருள் தெரியாதபடிக்கு, மிகவும் கடினமான வார்த்தை இல்லை. இந்த எளிய வார்த்தை  அநேகரால் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் திருமணம் புரிய ஆயத்தமாகின்றார்கள், பலர் இளவேனிற் காலத்தில் உல்லாசப்பயணம் மேற்கொள்ள ஆயத்தமாகிறார்கள். பலர் கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் தங்கள் பிள்ளைகளை மேல் வகுப்பில் சேர்க்க ஆயத்தமாகிறார்கள். சிலர் தங்கள் ஒய்வூதியத்ததைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகின்றார்கள்; வேறு சிலரோ எதையும், எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகிறார்கள். (இந்த வாழ்க்கையில் ஆயத்தமாக வேண்டிய, காலவரையற்ற வாழ்க்கைக்குத் தேவையான, கடவுளை சந்திக்க ஆயத்தமாவதைத்தவிற) வேதாகமம் கூறும் இதைக் கவனியுங்கள், "உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு" 

2) கடவுளைச் சந்திக்கும் உறுதிப்பாடு: 

ஒன்றுு ்நிச்சயம் நாமெல்லாரும் கடவுளை சந்தித்தே ஆகவேண்டும். பணக்காரரோ ஏழையோ, வயதானவரோ இளைஞனோ, படித்தவரோ படிக்காதவரோ, எல்லோரும் கடவுளை சந்தித்தே ஆகவேண்டும்; இந்த வாழ்க்கையிலே பலரை சந்திப்பதை இரத்து செய்யமுடியும், ஆனால் நாள் ஒன்று வருகின்றது, அந்த நாளிலே உன்னை உண்டாக்கிய உன் கடவுளை நீ எதிர் கொள்ளுவதை தவிர்க்க முடியாது. வேதம் சொல்லுகிறது, எபிரேயர் 4:13ல், 
"....அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்" 

எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு நாள் திடீரென மறித்து கடவுளின் பிரசன்னத்துக்குள்  அழைத்துச் செல்லப் படுவீர்கள். ஸ்காட்லாந்து தேசத்திலே ஒரு வயதான கிறிஸ்தவ பிரசாரகர் ஒருவர் விசித்திரமாக, தனது இனத்தைச் சேர்ந்த ஒரு கடைக்காரரிடம் சென்றார். அந்த கடைக்காரர், "கடையிலே நான் மிகுந்த வேலையாக இருந்தேன், என்னுடைய வேலைகளுக்கிடையில் அந்த பிரசாரகர், கதவைக்கூட தட்டாமல் வந்து நின்று, திடீரென்று, என்னை எதிர்பார்த்தீர்களா? எனக் கேட்டார். "இல்லை, நான் எதிர்பார்க்கவில்லை" கடைக்காரர் பதிலளித்தார். பிரசாரகர் ஒரு மணித்துளி அமைதியாகி பின்பு கடுமையான குரலில், "நான் சாவாக இருந்திருந்தால் என்னவாகும்?" வந்த வேகத்திலேயே கடையைவிட்டு வெளியேறிவிட்டார். அந்த கடைக்காரர் (இந்த அனுபவத்தைக் கூறும்போது) அது எனது வேலையை நிறுத்தி யோசிக்க வைத்தது. அந்த நிகழ்ச்சியின் முடிவு, அவர் மனந்திரும்பி இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார். 

கிறிஸ்தவர்களுக்கு, தங்கள் கடவுளை சந்திப்பது என்பது, மயிர்கூச்செரியும் நிகழ்ச்சியாக இருக்கும். அப்போஸ்தலர் பவுல், தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலே 2 தீமோத்தேயு 4:6ல், 
"..... நான் இப்பொழுதே பான பலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது"
 அவர் சாவதற்கு சிறிது நேரத்துக்கு முன் இவ்வாறு கூறுகிறார். ஆனால் அவிசுவாசிகளுக்கு கடவுளை சந்திப்பது என்பது பயப்படக்கூடியதாக இருக்கும். வேதம் கூறுகிறது, எபிரேயர் 10:31ல்,

"ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது, பயங்கரமாயிருக்குமே" 

மேலும் எண்ணாகமம் 14:17ல், 
"கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும் அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும் குற்றமுள்ளவர்களை குற்றமற்றவர்களாக விடாமல்....." 
நீங்கள் ஆண்டவருடைய அன்பை எதிர்த்தும், அவருடைய இரட்சிப்பை மறுத்தும், அவருடைய எச்சரிப்பை உதாசீனப்படுத்தியும் இருந்தால், ஒருநாள் அவருக்கு முன்பாக நிற்கும்போது அது கிலியூட்டுகின்ற நாளாக இருக்கும். 

 3) காலந்தாழ்த்துவது முட்டாள்தனம்:

  உங்களில் ஒவ்வொருவரும் கடவுளைப் புண்படுத்தி இருக்கிண்றீர்கள். கடவுளுடைய நீதி, உங்களின் பாவங்களுக்காக நீங்கள் தண்டனையை அடைய வேண்டும் என வற்புறுத்துகின்றது. ஆனால் கடவுளுடைய அன்பு ஒரு தீர்வை உடையதாய் இருக்கிறது. அது கடவுளுடைய சொந்த குமாரனாகிய இயேசுவின் மரணம். ஏசாயா கூறுகின்றார், 'கர்த்தரோ நாமெல்லோருடைய பாவத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்' உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு கிறிஸ்துவின் மரணம் அமைகின்றது. நீங்கள் உங்கள் இருதயத்திலே அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும். அது காலம் தாழ்த்தும் மனப்பாங்காய் இருக்கக்கூடாது. காலந்தாழ்த்துவது என்பது வேறொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம் என ஒத்திவைப்பது. வேதம் கூறுகின்றது, பவுல் பெலிக்ஸ்க்கு, (யூதேயாவின் ரோம கவர்னர்) கர்த்தருடைய இரட்சிப்பின் திட்டத்தை அறிவித்தபொழுது, 
'அவன் நீதியையும், இச்சையடக்கத்தையும் இனிவரும் நியாய தீர்ப்பையும் குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து, இப்பொழுது நீ போகலாம், எனக்கு சமயமாகும்போது உன்னை அழைப்பிப்பேன் என்றான். அப்போஸ்தலர் 24:25

உங்களில் யாராவது இன்று இரவு 10:30க்குள் மரித்துவிடலாம். உங்களுக்கு சாவு எப்பொழுது வரும் என்பதை நீங்கள் அறியீர்கள். ஆனால் ஆண்டவர் அழைக்கும் போது நீங்கள் போய்த்தான் ஆகவேண்டும். இன்னும் சில மனிதர்கள் தாங்கள் சாகப் போகும் பொழுது, ஆண்டவருக்கு தங்கள் இருதயத்தை ஒப்புக் கொடுக்க யோசனையாய் இருக்கின்றார்கள். ஆனால் 11 மணிக்கு என திட்டமிடுகின்றவர்கள், 10:30க்கே போய் விடுகின்றார்கள். அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொடுப்பதில்லை. காலந்தாழ்த்துவது என்பது எப்பொழுதுமே ஆபத்தானது. 

வாழ்க்கை என்ற கடிகாரத்தில், சாவி கொடுக்கப்படுகின்றது ஆனால் ஒரு முறை, 
ஒருவருக்கும் வல்லமையில்லை 
எப்பொழுது பெரிய முள் நிற்கும் 
தாமதமாகவா அல்லது முன்னதாகவா 

4) கிறிஸ்துவை நிராகரிப்பதின் மடமை:

இரட்சிப்பு என்பது அன்பளிப்பு. சம்பாதித்து பெறுவது அல்ல. வேதம் சொல்லுகிறது ரோமர் 6:23ல், 
"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வாரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்"

இங்கு பாவம் என்பது ஒரு தலைவனைப்போல உள்ளது. அது சம்பளம் தருகின்றது. திகிலூட்டும் சம்பளம் என்னவெனில், ஆண்டவருடைய பிரசன்னத்திலிருந்து உங்கள் ஆவி, ஆத்துமாவை நிரந்தரமாக பிரித்துவிடுவதுதான். இதே வசனத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் பரிசுத்தத்தின் சம்பளத்தை வாசிக்கிண்றீர்கள். அது நித்திய ஜீவன். எளிதாக கூறவேண்டுமானால், கடவுளின் அன்பளிப்பு அழிவில்லாத வாழ்க்கை. 

அழிவில்லாத வாழ்க்கை ஒரு அன்பளிப்பு. கடவுள் மிகச் சரியாக அன்பளிப்பை விற்க மறுத்துள்ளார். உங்கள் வேதாகமத்தில் கடைசி பக்கத்தில் அவரது கடைசி அழைப்பை நீங்கள் பார்க்கலாம். வெளி.22:17ல், 
"ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவ தண்ணீரை ஜீவ தண்ணீரை இலவசமாய் வாங்கி கொள்ளக் கடவன்"

இரட்சிப்பு (பாவத்தின் தண்டனையில் இருந்து விடுதலை) என்பது கடவுளின் இலவச அன்பளிப்பு. நம்மில் அநேகர், அதை வேலை செய்து சம்பாதிப்பது, புண்ணியங்களை செய்வது, வேள்வியை வளர்ப்பது இப்படியாக இரட்சிப்பை பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். கிறிஸ்தவர்களே கூட சபையின் செயல்பாடுகளை வைத்து ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாகின்றார்கள். ஆனால் வேதாகமம் சொல்லுகிறது தீத்து 3:5ல்,
"நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறு ஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்"

எந்த மனிதனும் எழுந்து நின்று, நான் இந்த இந்த நற்செயல்களை செய்தேன் அதினால் கடவுள் எனக்கு இரட்சிப்பைக் கொடுத்தார் என்று கூறமுடியாது. கிறிஸ்தவ வாழ்க்கையில் நற்செயல்கள் என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் அவைகள் பாவத்திற்கு பரிகாரமாகாது. நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுடைய பாவங்களை தன் மேல் ஏற்றுக்கொண்டு, கல்வாரிச் சிலுவையில் இரத்தம் சிந்தியதை விசுவாசித்ததால் மட்டுமே இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுடைய பாவங்களுக்கான தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார். நாமெல்லாருக்காகவும் கடவுள் இதைச் செய்தார். அதையே உனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கின்றார். 

ஒரு அன்பளிப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் அது உங்களுக்கு அன்பளிப்பாக இருக்கும். அதைப்போலவே மன்னிப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையானால், மன்னிப்பு உங்களுக்குரியதல்ல. ஜார்ஜ் வில்சன் என்பவரைக் குறித்த வழக்கு அமெரிக்க தேச வரலாற்றிலே ஒரு விசித்திரமாகும். பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்க நீதிமன்றம் கி.பி. 1830ல், கொலைக்குற்றத்திற்காக்கவும் தபால்களை திருடியதற்காகவும், அவனுக்கு தூக்குத்தண்டனையை விதித்தது. அப்பொழுது ஆண்ட்ரு ஜேக்சன் என்பவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாளுக்கு மூன்று வாரங்களுக்குமுன் ஜார்ஜ் வில்சனின் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி, வில்சனுக்கு மன்னிப்பு அளித்தார். ஆனால் இந்த உலகை திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சியாக வில்சன் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மன்னிப்புக்குப் பதிலாக நீதிமன்றத் தீர்ப்பின்படி தன்னை தூக்கிலிடுவதில் உறுதியாக நின்றார். இந்த நிலை முன்பு ஒருபோதும் எழுந்ததில்லை. ஏனெனில் முன்பு எப்பொழுதெல்லாம் மன்னிப்பு வழங்கப்பட்டதோ, அப்பொழுதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாட்டத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது; இப்பொழுது சிறைசாலைத் தலைவன், நீதிமன்ற தீர்ப்பின்படி தூக்கிலே போடவேண்டுமா? அல்லது ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுதலையளிக்க வேண்டுமா? இந்த இடத்திலே சட்டம் அமைதியாக இருந்ததினால், ஜனாதிபதி, உச்சநீதிமன்றம் இதில் உடனடியாக தலையிட்டு முடிவு காண வேண்டும் என அழைத்தார். முடிவு இப்படியாக எழுதப்பட்டது: மன்னிப்பு என்பது ஒரு தாளில் உள்ளது; குற்றத்தில் சிக்கியுள்ள மனிதன் இதை ஏற்றுக் கொள்ளுவதை பொறுத்து, இதற்கு மதிப்பு வருகின்றது; தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதன் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது கடினமானது; மறுத்தால் மன்னிப்பு, மன்னிப்பு ஆகாது. எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜார்ஜ் வில்சன் தூக்கிலிடப்பட வேண்டும்.

அநேக மக்கள் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த வில்சனை முட்டாள் என ஏற்றுக் கொள்ளுகின்றனர்; ஆனால் அதே மக்கள்கடவுள்அருளும்மன்னிப்பைதினந்தோறும் உதறித்தள்ளுகின்றனர். நீங்கள் இன்று இரட்சிக்கப் படாதிருந்தால், உங்கள் பாவத்தின் பலன், நீங்கள் அக்கினியும், கந்தகமும் எரிகின்ற நரகத்துக்கு பாத்திரர். ஆனால் கர்த்தர் உங்களுக்கு மன்னிப்பைக் கொடுக்கின்றார்! நீங்கள் பாவத்திலேயே மரிக்கத் தேவையில்லை; ஏனெனில் இயேசு உங்களுக்காக மறுத்திருக்கிறார்; சற்று கடினமாக கூறவேண்டுமானால்,சரியான மனநிலையில் இருக்கும் ஒருவன், கல்வாரியில் இயேசுகொள்முதல் செய்த அன்பை ஏற்க மறுக்க மாட்டான்; இந்த வாய்ப்பை நீங்கள் மறுத்தால் உங்களுக்கு மன்னிப்பே இல்லை. நீங்கள் உங்கள் சொந்த தண்டனையை ஏற்கவேண்டும்; உங்கள் பாவத்துக்கான அபராதத்தை நீங்கள் சுமக்க வேண்டும். 

கர்த்தர் தமது வசனத்தில் பரிந்துரைக்கின்றார், 
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி;....... நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்." (அப்போஸ்தலர் 16:31; 2:38)
இப்பொழுது நீங்கள் அதைச் செய்வீர்களா? 

(மேற்கண்ட பகுதி  “Bible helps” நிறுவனத்தாரின் Hearold S. Martin அவர்கள் எழுதிய  PREPARE TO MEET THY GOD என்ற தலைப்பில் வெளியான , A Bible helps Tract No: 16 ஐ மையமாகக் கொண்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. மொழிபெயர்த்தவர்:செல்வின் துரை.



Add caption

6 Jul 2016

PETER: A Restored Leader (A Study of Luke 22:31-34; 54-62; John 21:1-23)

பேதுரு : திரும்பவும்  நிறுவப்பட்ட ஒரு தலைவர்

வேதத்தில் சீமோன் பேதுரு 12 அப்போஸ்தலரிலும்  நன்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். புதிய ஏற்பாட்டில் உங்களுக்கு இயேசுகிறிஸ்துவின் மற்ற சீடர்களைவிட (அப்போஸ்தலர் பவுலைத் தவிர) இவரைப் பற்றிய தகவல்களை அதிகமாக நாம் பார்க்கலாம். 12 சீடர்களிலேயே முதலாவது பெயர் இவருக்குத்தான். 

சில நேரங்களில் பேதுரு, முட்டாள்தனமாக தவறுகள் இழைக்கும்  மீனவனாக கொள்ளப்பட்டான்.  ஆனால் உண்மையாகவே பேதுரு ஆதி சபைக்கு முன் மாதிரியானவன். அவனுக்கு சீமோன் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. அவனுடைய தகப்பன் பெயர் யோனா (யோவான் 1:42). இவனது சகோதரன் அந்திரேயாவும் இயேசு கிறிஸ்துவின் சீடனாய் இருந்தான் (மாற்கு 1:16). பேதுரு திருமணமானவன். ஏனெனில்ஒரு முறை வேதாகமம் இயேசு, பேதுருவின் மாமியாரை சுகப்படுத்தியதாக குறிப்பிடுகின்றது (மத்தேயு 8:14,15)

கலிலேயாக் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களாக பேதுருவும், அந்திரேயாவும் இருந்தனர். ஒருவேளை யாக்கோபு மற்றும் யோவானோடு கூட சேர்ந்து மீன் பிடித்திருக்கலாம் (லூக்கா 5:10). இயேசு தன்னைப் பின்தொடரும்படி அழைப்பு விடுக்கும் முன்னே அவர்கள் யோவான் ஸ்நானகனின் சீடர்களாக இருந்தனர். இயேசுதான் மேசியா என அந்திரேயா முதன் முதல் அறிந்து கொண்டதின் மூலம், அந்திரேயாதான் பேதுருவை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தினான் (யோவான் 1:35-42). 

இப்பொழுது நாம், பேதுரு இயேசுவை மறுதலித்தது, பாவத்தை அறிக்கை செய்தது, தேவனோடுள்ள ஐக்கியத்தை மீண்டும் பெற்றுக்கொண்டதைக் குறித்து நாம் பார்க்கப் போகிறோம். 

1) இயேசு கிறிஸ்து, பேதுரு தம்மை மறுதலிக்கப் போவதை முன்னறிவித்தது (லூக்கா 22:31-34)

2) பேதுரு இயேசுவை மறுதலித்தது, பின்பு மனங்கசந்து அழுதது (லூக்கா 22:54-62)

3) பேதுரு, இயேசு கிறிஸ்துவோடு கூட  உள்ள ஐக்கியத்துக்குள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டான் (யோவான் 21: 1-23)

1) இயேசு கிறிஸ்து, பேதுரு தம்மை மறுதலிக்கப் போவதை முன்னறிவித்தது (லூக்கா 22:31-34):

இயேசு கிறிஸ்துவை பேதுரு மறுதலித்ததை வேதத்தில் உள்ள நான்கு சுவிஷேசங்களும் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) அறிவிக்கின்றன. ஆனால் லூக்கா மட்டுமே, பேதுரு எதிர்கொண்ட இந்த சோதனையில், பிசாசின் பங்கும் இருக்கிறது என்று விவரிக்கின்றார். 

சீமோனே, சீமோனே கோதுமையை சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான் (வசனம் 31) உங்களை வீழ்ச்சியுறச் செய்வதற்கு சாத்தான் எவ்வளவாய் விரும்புகிறான் என்பதை இந்த வசனத்திலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் அவன் கண்களுக்குப் புலப்படாதவன். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கே தெரியாமல் செல்வாக்குப் பெற அவனால் முடியும். 

சுளகினால் (உங்கள அப்பா, அம்மா காலத்திலே பயன்படுத்திய ஒரு கருவி) புடைப்பது என்றால், அதிலே தானியத்தைப் போட்டு மேலே தூக்கித் தூக்கிப் போடுவார்கள். பக்கவாட்டிலே வேகமாக அசைப்பார்கள். அப்பொழுதுதான் தானியத்தில் உள்ள பதர் மற்றும் சிறு சிறு கற்கள்தனியாக பிரியும். ஆண்டவரின் கோதுமை மணியிலிருந்து நம்மைப் பிரித்தெடுப்பதற்க்காக (நீக்குவதற்காக) சோதனைகள் மூலமாக உங்களை பிசாசானவன் புடைதேடுக்கிறான். 

உங்கள் அனுபவங்களில் இருந்து சோதனையிலிருந்து, சோதனைகளை ஜெயிப்பதென்பது அடிக்கடி கடினமாகத் தோன்றுகின்றது. சோதனை வழக்கமாகவே கவர்ச்சியானது. சொதனையான் கவர்ச்சிக்கு விட்டுக்கொடுக்கும்போது, அது பாவமாகின்றது. ஒருவேளை பாவத்தின் கவர்ச்சிக்கு திரும்பத் திரும்ப விட்டுக் கொடுத்தால், அதன் பலன் ஆண்டவரின் வழியிலிருந்து விழுவதாகிவிடும். எபிரெயர் 4:6-8ல்,

"ஏனெனில் ஒருதரம் பிரகாசிக்கப்பட்டு பரம் ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
ேவனுடைய நல் வார்த்தையையும் இனி வரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும் 
மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து, அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற்க்கேதுவாய் அவர்கள் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். 
எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 
முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும், சபிக்கப்படுகிறதற்க்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு"

மேலே உள்ள வசனங்களின்படி, சோதனைக்கு விட்டுக்கொடுக்கும்போது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்திர்க்குள்ளாக மீண்டும் வரும் விருப்பத்தையே அது இழக்கச் செய்துவிடும். 

ஒரு நற்செய்தி (வசனம் 32ல்) இயேசு பேதுருவைப்பார்த்து, அவனுடைய விசுவாசத்தில் அவன் இடறினாலும், அது முழுமையாக ஒழிந்து போகாது என உறுதியளிக்கின்றார். ஏனெனில் பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு, இயேசு ஜெபித்திருந்தார் (வ.32அ). பேதுருவுக்கு எதைச் செய்தாரோ அதையே அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைக்கும் எல்லோருக்கும் தினமும் செய்கிறார்.

மேலும் இயேசு கூறுகின்றார் (வ. 32ஆ), "நீ குணமாக்கப்பட்ட பின்பு உன் சகோதரரைக் குணப்படுத்து". 'குணமாக்கப்பட்ட பின்பு என்றால்' மீண்டும் மனந்திரும்பிய பின்பு எனக் கொள்ளலாம். சீடர்களின் பெயர்கள் எல்லாம் ஏற்கனவே பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கிறது (லூக்கா 10:20) 'நீ குணமாக்கப்பட்ட பின்பு' என்ற இந்த வார்த்தையைக் கூறினார். "நீ பழையபடி மனந்திரும்பியபின்பு, உன் சகோதரரை ஸ்திரப்படுத்து". இதுதான், இந்த அனுபவந்தான், பேதுருவை ஞானமுள்ளவனாக்கிற்று. அவன் இந்த ஞானத்தைக் கொண்டு, தனது சகோதரர்கள் முகஸ்துதி என்ற குழியில் விழாதபடி தவிர்க்க உதவிற்று.

சாத்தானின் சோதனை என்ற இயேசு கிறிஸ்துவின் எச்சரிப்புக்கு பின்பு, பேதுரு, "ஆண்டவரே, காவலிலும், சாவிலும், உம்மைப் பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன்" என்று பதிலளித்தான் (வ.33). மாற்க்கின் கணக்குப்படி, "இயேசுவின் நிமித்தம்,எல்லா சீடர்களும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என பேதுரு கூறுகின்றான் (மாற்கு 14:29) இது சுய நம்பிக்கை. அனுபவமில்லாத சீடத்துவம். (தனது சொந்த விசுவாசத்தின் பலவீனத்தை உணராத, அவனது இருதயமே வஞ்சிக்கப்பட்ட நிலைமை. இதிலிருந்து பிறந்ததுதான் மேலே மாற்கு 14:29ல், உள்ள வார்த்தைகள்.

வசனம் 22:34ல், இயேசு மிகச் சரியாக வருவதுரைத்தார்: பேதுருவே, இன்றைக்கு சேவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன்" இது மிகச் சிறந்த முன்னுரைத்தல், இயேசுவின் முன்னறிதலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். பேதுரு தன்னை விட்டு ஓடிப் போகமாட்டான் என்பதையும், ஆனால் அவன் தன்னை மூன்று தரம் மறுதளிப்பான் என்பதையும் இயேசு நன்கு அறிந்திருந்தார்! 

இயேசு விடிவதற்குள் (ஒரு சில மணி நேரத்துக்குள்ளேயே) அவன் மறுதலிப்பான் எனக் கூறினார்.



2) பேதுரு இயேசுவை மறுதலித்தது, பின்பு மனங்கசந்து அழுதது (லூக்கா 22:54-62)

லூக்கா 22ல், 34 முதல் 54 வரையுள்ள வசனங்களில், யூதாஸ் காரியோத்து, ரோம போர் சேவகர்களை கெத்சமனே தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, இயேசுவைக் காட்டிக் கொடுத்தது, பின்பு விசாரிக்க யூத பிரதான ஆசாரியன் வீட்டுக்கு இயேசுவை இழுத்துச் சென்றது என்ற நிகழ்வுகள் அடங்கியுள்ளன. இயேசுவை கேத்சமெனே தோட்டத்திலிருந்து இழுத்துக் கொண்டுவரும் பொழுது எல்லா சீடர்களும், ஓடிப்போய் விட்டார்கள். ஆனால் பேதுரு தூரத்திலே பின் சென்றான் (வசனம் 54).

ரொம்ப நேரத்துக்குப் பின் அல்ல எல்லாம் சிறிது நேரத்திலேயே நடந்தது. பேதுருவும் பிரதான ஆசாரியனுடைய முற்றத்திலே, நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தவர்கள் நடுவே உட்கார்ந்தான் (வ.55) அந்த பின்னிரவு நேரத்திலே அந்த நெருப்பின் அருகிலே இரகசிய கூட்டம் கூடிற்று. அவர்கள் அனைவரும் சுவிஷேசத்தை அலட்சியப்படுத்துகின்றவர்கள் - கிறிஸ்தவ விசுவாசத்துக்கு விரோதமானவர்கள் - அது இயேசுவுக்காகஉறுதியாக நிற்க முடியாத இடம். கொஞ்ச நேரத்திலே" ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக் கண்டு, உற்றுப் பார்த்து; இவனும் அவனோடிருந்தான்" என்றாள் (வ.56). அடுத்த வசனம் சொல்லுகிறது, "ஸ்திரியே அவனை அறியேன் என்று மறுதளித்தான்" பேதுரு இயேசுவை எளிதாக மறுதலித்தான். 

சற்று நேரத்துக்குப் பின்பு, வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்க்கு பேதுரு, மனுஷனே, நான் அல்ல என்றான்" (வசனம் 58)

ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்குப் பின்பு, மற்றொரு மனிதன் பேதுருவை கலிலேயன் என்று அறிந்து, சொன்னான்: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான். இவன் கலிலேயன்தான் என சாதித்தான். கலிலேயர்கள் அராமைக் மொழி பேசும் பொழுது சற்று வித்தியாசமாக உச்சரிப்பார்கள். வசனம் 60 பேதுருவின் பதிலை பதிவு செய்கின்றது, "மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன்" இதன் பொருள் நீ எதைப்பற்றிப் பேசுகின்றாய்! என்பதுதான். 

ஒவ்வொரு முறையும் பேதுருவைக் கேள்வி கேட்டபொழுது, அவன் உறுதியாக மறுத்தான். முதல் முறை நான் இயேசுவோடு கூட உள்ளவன் அல்ல (வ. 57); இரண்டாவது் முறை  இயேசுவின் சீடர்களில் ஒருவன் அல்ல  (வ. 58); மூன்றாவது முறை, மூர்க்கமாக இயேசுவையே தெரியாது (வ. 60)

அந்த நேரமே, பேதுரு இயேசுவை மூன்றாவது முறையாக மறுதலித்துப் பேசிக்கொண்டுருந்த பொழுதே, சேவல் கூவ ஆரம்பித்தது (வ. 60ஆ) 

"அப்பொழுது கர்த்தர் திரும்பி,  பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய்......" அவருடைய பார்வை, "நான் அப்பவே சொன்னேன்" என்று இல்லாமல், அன்பும், மன்னிப்பும் நிரம்பியதாய் இருந்தது. அது பேதுருவின் உள்ளத்தை உடைத்தது. 

இயேசு கிறிஸ்துவின் பார்வையில் சீமோன் பேதுரு, வாடி வதங்கிவிட்டான். இயேசு கூறியதை, சேவல் கூவுவதற்க்குமுன் நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் எனக் கூறியதை நினைவு கூர்ந்தான் - தான் செய்ததின் தாக்கத்தை உணர்ந்தான். பொறுக்க இயலாத மன வேதனைக்குள்ளானான். அது அதிகாலை மூன்று மணி. சேவல் கூவுவது என்பது ரோமானியர்களுக்கு மூன்றாம் மணி வேளையின் முடிவு. 

இந்த கவலைக்குரிய கதையின் நல்ல பகுதி என்பது, இந்த அதிகாரம் 61ம் வசனத்தோடு முடிவடையவில்லை. பேதுரு மனந்திரும்பினான்; கர்த்தருக்குள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டான்; அவனது மீதியுள்ள வாழ்க்கையில் இந்த தவறுக்காக மனம் வருந்தியதே இல்லை. "வெளியே போய் மனங்கசந்து அழுதான்" (வசனம் 62) இங்கே மனங்கசந்து அழுதான் என்பது இயேசுவை மறுதலித்ததால் மனமுடைந்து போனான் எனக் குறிப்பிடுகிறது. அவனது மென்மையான மனசாட்சி அவனை அழுகைக்கு நேராக நடத்தியது. இந்த நாட்களில் உங்களுக்கு பாவத்தின் மீது, மனமுடைந்த மனந்திரும்புதல் தேவை.

பேதுரு, ஆண்டவரை மறுதலித்தது, அவன் தனிமையாய் இருந்தபோது - மற்ற சீடர்களிடமிருந்து தனிமைப்பட்டிருந்த போது என்பதை அறிந்து கொள்ளுவது நல்லது. அந்த இரவிலே பேதுரு, யோவானுடன் அந்த முற்றத்துக்குள் பிரவேசித்தான். பின்பு அவன் தனிமைப்படுத்தப் பட்டான். (யோவானிடமிருந்து) மேலும் ஆண்டவரின் எதிரிகளின் மத்தியில் தனிமையில் நின்றிருந்தான். 

நீங்கள் தனியாக ஆண்டவருக்கு ஊழியம் செய்ய முயற்ச்சிக்கும்போழுது, நீங்கள் பலகீனமானவர்கள் என்பதை சாத்தான் நன்கு அறிந்திருக்கிறான். இயேசு கிறிஸ்து தமது சீடர்களை ஊழியத்துக்கு அனுப்பும்போது தனியாக அனுப்பாமல், இரண்டு இரண்டு பேராக அனுப்ப இதுவும் ஒரு காரணம். புதிய ஏற்பாடு, விசுவாசிகள் ஒன்றாக கூடிவருதலை உற்சாகப் படுத்துகிறது (எபிரேயர் 10:25) விசுவாசிகளுக்கு, சக கிறிஸ்தவர்களின் தைரியப்படுத்துதலும், உதவியும் தேவையாய் இருக்கிறது. ஒரு சபையில் (விசுவாசிகளின் கூட்டம் - ஐக்கியம்) ஐக்கியம் இல்லாமல், ஒரு கிறிஸ்தவன் உச்ச நிலைக்குச் செல்ல முடியாது. 

தேவ ஜனங்கள் ஒன்றாக ஜெபிப்பதற்கும், ஒன்றாக போட்டியிடுவதற்கும், ஒன்றாக ஆராதிப்பதர்க்கும் கூடி வருகின்றனர். நீங்கள் உங்கள் கூட இருக்கும் கிறிஸ்தவர்களின் ஆர்வத்தைப் பார்க்கும்போதும், அவர்களின் சாட்சியைக் கேட்க்கும்போதும், அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு பெறும்போதும் - ஆவிக்குரிய இருளில் தேவனற்ற சமுதாயத்தில் வாழும் நமக்கு, புதிய உற்சாகத்தையும், ஊழியம் செய்ய தைரியத்தையும்,  தருகின்றது. (பிலிப்பியர் 2:15)

3) பேதுரு, இயேசு கிறிஸ்துவோடு கூட  உள்ள ஐக்கியத்துக்குள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டான் (யோவான் 21: 1-23)

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த பின்பு, கலிலேயாவில் தமது சீடர்களுக்கு தரிசனமானார். யோவான் எழுதிய சுவிஷேசம் 21ம் அதிகாரத்திலே இது விவரிக்கப்பட்டுள்ளது. சீடர்கள் வடக்கே இருந்த தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். ஒரு மாலைப் பொழுதில் பேதுரு மீன் பிடிக்கச் செல்லலாம் என முடிவெடுத்தார். மற்ற சீடர்களில் சிலர் பேதுருவோடு கூட சேர்ந்துகொண்டனர். 

இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்க வில்லை. அவர்கள் கரைக்கு வந்தபொழுது, இயேசு (அப்பொழுது அது அவர்களுக்கு தெரியவில்லை) படகின் மறு பக்கத்தில் வலையைப் போடச்சொன்னார். வலை கிழிந்து போகத்தக்கதாக மீன்கள் அவர்களின் வலையில் அகப்பட்டது. சிறிது நேரத்திலேயே 153 பெரிய மீன்களால் நிறைந்த வலையை கரையிலே இழுத்தார்கள் (யோவான் 21:11)

பின்பு அவரை இயேசு என்று அறிந்து கொண்டார்கள். அவர் கரி தழலிலே காலை உணவை தயார் செய்திருந்தார் - சீடர்களை காலை உணவைத் தன்னுடன் சாப்பிடும்படி அழைத்தார். 

காலை சூரியோதயத்திலே கலிலேயாக்கடல் மின்னிக்கொண்டிருந்ததின் பின்னணியிலே, பேதுருவின் மேலிருந்து தண்ணீர் துளித்துளியாக சொட்டிக்கொண்டிருந்தது. மற்றவர்களும் நனைந்தபடியே தங்கள் படகில் கரைக்கு வந்தனர். அவர்கள் மிகவும் களைப்பாய் இருந்தனர். அவர்கள் தங்களுக்குள்ளே குசுகுசுவென்று பேசிக்கொண்டனர். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த அமைதி வேளையிலே, கரி தழல், பேதுருவுக்கு, சில நாட்களுக்குமுன் பிரதான ஆசாரியன் வீட்டு முற்றத்திலே குளிர் காய்ந்த நெருப்புத் தழலை நினைவு படுத்தியது. ஆண்டவரை அறிந்தும் மறுதலித்த நினைவும், சேர்ந்தே ஞாபகத்துக்கு வந்தது. 

காலை உணவை முடித்தவுடன் இயேசு பேதுருவின் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தார். இவர்களிலும் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? (மற்ற சீடர்களைக் காட்டி) மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப்பற்றி பேதுருவுக்கு கவலையில்லை. ஆனால் மீண்டும் பிரச்சனைக்குள் போகாமலிருக்க அவன் விழிப்பாய் இருந்தான் (மாற்கு 14:29). "ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றான் (யோவான் 21:15) இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்க்கு அவன், ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிரத்தை நீர் அறிவீர் என்றான் (வ.21:16) மீண்டும் அதே கேள்வியை சீமோன் பேதுருவிடம் கேட்டார் (வ. 21:17).

இயேசு கேள்வி கேட்டபொழுது, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? (இங்கு அன்பு என்பதற்குகிரேக்க மொழியிலே அகாப்பே என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார் - அது ஆண்டவரைப் போல அன்பு செலுத்துவது, இது 1 கொரிந்தியர் 13 ம் அதிகாரத்திலே சொல்லப்பட்டுள்ளது. பேதுரு ஒவ்வொரு முறையும் பதிலளிக்கும்போது, பிலியோ என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். பிலியோ என்றால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையிலே உள்ள அன்பு, நண்பர்களிடையே உள்ள அன்பைக் குறிக்கின்றது. முன்பு மூன்று முறை மறுதலித்த போது, பேதுருவின் தன்னம்பிக்கை மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே அவன் மன உறுதியற்ற நிலையிலே தயக்கத்துடன் தேவ அன்பு என பொருள் கொள்ளுகிற அகாப்பே என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், பிலியோ என்ற சொல்லையே பயன்படுத்தினான். மேலும் பேதுரு சொல்லுகிறான், ஆண்டவரே நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் (வசனம் 17) 

முன்பு கரி நெருப்புக்கு அருகில், பிரதான ஆசாரியன் வீட்டு முற்றத்தில் பேதுரு இயேசுவை மறுதலித்தான். இப்பொழுதோ, மற்ற சீடர்களுக்கு மத்தியில் வேறொரு கரி நெருப்புக்கு அருகில் பேதுரு ஸ்தாபிக்கப் படுகிறான். முன்பு ஆண்டவரை அறியேன் என்று மூன்று முறை மறுதலித்தான். இப்பொழுது மூன்று முறை ஆண்டவரிடத்தில் அன்பாயிருகிறேன்! 

இந்த சிறிய நேருக்கு நேர் நிகழ்ச்சியை யோவான் 21ம் அதிகாரம் பதிவு செய்கிறது. இயேசு கிறிஸ்துவோடு கூட உள்ள உறவை உறுதி செய்கிறது. இது 'உன்னுடைய முந்தைய தவறுகளெல்லாம் வருத்தத்துக்குரியதுதான் - ஆனால் அது நேற்றைக்குள்ளது, இப்பொழுதோ நீ உன் கண்களை நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து எடுத்து, நாளைக்கு வரப்போகிற நிகழ்சிகளின் மீது பதிக்கவேண்டும். நாளைக்கு கர்த்தருடைய வசனத்தைக் கேட்க பல்லாயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டிருக்கின்றனர். நீதான் அதைக் கொடுக்க வேண்டும்! இயேசு, பேதுருவிடம் சொன்னார், "என் ஆடுகளை மேய்ப்பாயாக" 

நேற்றைய தினம் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாதபடி போய்விட்டது. நாளைய தினம் இயேசுவின் மீதுள்ள உன் அன்பை நிரூபிக்க, தொடர்ந்து உண்மையுள்ளவனாக ஊழியம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறது. பேதுரு மெய்யாகவே மனந்திரும்பினான். இயேசு முழுமையாக மன்னித்துவிட்டார். பின்பு பேதுரு கிறிஸ்துவுக்குள்ளாக ஸ்தாபிக்கப்பட்டான், ஆண்டவரால் அதிகமாக உபயோகிக்கப்பட்டான். ஒரு சில வாரங்களிலேயே, பெந்தெகொஸ்தே நாளில் மிக வல்லமையாக பிரசங்கித்தான்! 

இது எதைப் போன்றது என்பது நம்மில் அநேகருக்குத் தெரியும். ஏதோ ஓரிடத்தில் ஒரு சம்பவம் நடந்து, குற்றமுணர்ந்து வெட்கப்பட்டோம், மனப்பூர்வமாக தவறை நினைத்து வருந்தினோம். சில நேரங்களில் மன சாட்சி உறுத்துகின்றது. ஆனால் பேதுருவைப் போல, வரம்பு மீறி செயல்பட்டவைகளை உண்மை என்று ஒத்துக்கொள்ளும் சாத்தியம் உண்டு - நாமும் கூட ஆண்டவரோடுள்ள உறவை மீண்டும் ஸ்தாபிக்கமுடியும். 

இந்த பகுதியில் இருந்து நீங்கள் நடைமுறைப் படுத்த வேண்டிய விஷயங்கள் அநேகம் உண்டு 

1) விசுவாசிகளுக்கு மிகப் பெரிய எதிரி பிசாசு என்று பார்த்தோம். சாத்தான் விசுவாசிகளை கோதுமையை சுளகினால் புடைப்பது போன்று புடைக்க விரும்புகிறான். நாம், பிசாசின் வல்லமை, அவனது செயல்கள், அவனது தன்மை ஆகியவைகளைக் குறித்து யோசிக்க, அக்கறை கொள்ளாத தன்மையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இயேசு பிசாசை, 'இந்த உலகின் அதிபதி', 'பொய்யும் பொய்க்குப் பிதாவும்' 'கொலைகாரன்' என்றும் கூறுகின்றார். பேதுருவும் தன் வாழ்நாளின் கடைசியில், 'கர்ச்சிக்கிற சிங்கம் போல, யாரை விழுங்கலாம் என வகைதேடி சுற்றித் திரிகிறான்' எனக் கூறுகிறான். யோவான் தன் கடிதத்தில் 'சகோதரர்களைக் குற்றஞ்சாட்டும் பிசாசு' எனக் கூறுகிறான். பிசாசு உண்மையிலேயே இருக்கிறான் எனக் கூற நாம் தயங்கக் கூடாது.

2) நாம் எப்பொழுதும் இயேசுவுக்கு ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர் நமக்கு வல்லமையுள்ள நண்பராக, தேவனுடைய வலது பாரிசத்திலிருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறபடியால். இயேசு பேதுருவைப்பார்த்து, உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டுதல் செய்திருக்கிறேன் எனக் கூறினார். உங்கள் எதிரிகள் வல்லமையானவர்கள். உங்கள் பலம் குறுகினது; இந்த உலகம் கண்ணிகள் நிறைந்தது; உங்கள் இருதயம் பலவீனமானது; இயேசு தேவனுடைய முன்னிலையில் உங்களுக்காக வேண்டுதல் செய்யாவிடில், (பேதுருவுக்கு செய்ததைப்போல) நீங்கள் பரலோகத்துக்கு செல்ல முடியாது. 

3) பொதுவாக விசுவாசிகள் பாவத்தில் விழுவது என்பது மிகச் சிறிதாக ஆரம்பிக்கும். பின்பு ஒரே சீராக வளரும். பேதுரு, இயேசுவை மறுதலித்ததுக்கான ஒரு முக்கியமான முதற்படி தற்பெருமை பேசுவதால் வரும் சுய நம்பிக்கைதான். அதை தொடர்ந்து கெட்டவர்களோடு கலப்பது. அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முன் கோழையாவது. ஒன்றை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்! அது என்னவெனில், உலகத்தினால் கேலிக்குரியவராவது, நியாயத்தீர்ப்பு நாளிலே ஆண்டவரால் வெறுக்கப் படுகிற நிகழ்ச்சிக்கு நிகரானதல்ல! 

4) சாத்தானின் சுளகில் புடைப்பதற்கு வி ட்டுக் கொடுப்பது, என்பது எப்பொழுதுமே சிறிய தவறுகளில் ஆரம்பிக்கிறது. பாபி லீச் ஸ்டார்லெட் என்பவர் பயங்கரமான துணிகரமான சாகசங்களை செய்கின்ற ஒரு சாகச வீரர். உலகப் புகழ் பெற்றவர். ஒருமுறை அமெரிக்க தேசத்தில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் மேலிருந்து ஒரு உடைந்துபோன மர பீப்பாய்க்குள் இருந்து குதித்தவர். சில வருடங்களுக்குப் பின் ஒரு ஆரஞ்சு பழ தோலில் மிதித்து சறுக்கி தரையில் விழுந்து கால் உடைந்து கஷ்ட்டப்பட்டார். அடிக்கடி ஒரு சிறிய அற்பமான சூழ்நிலை பெரிய விழுதலுக்கு காரணமாகி விடுகின்றது. 

5) நாமும், பேதுரு இயேசுவை மறுதலித்ததைப் போல மறுதலிக்க முடியும்: 

- நேர்மையில்லாத வியாபாரத்துக்கு உடன்படும்போது.....

- சரியான மற்றும் நல்லவைகளின் பக்கம் நீங்கள் நிற்காமல் போகும்போது.....

- அல்லது ஒழுக்கத்தைப் பற்றி நீங்கள் பேச வாய்ப்பு வரும்போது, யாரும் எப்படியும் போகட்டும் என பேசாமல் அமைதி காக்கும் பொழுது.....

நீங்கள் இயேசுவுக்காக நிற்க முடியும்: 

- கர்த்தரின் நாளை நீங்கள் ஆராதனைக்கு, ஓய்விற்கும் ஒதுக்கும் பொழுது,

- உங்களைத் தவறாக உபயோகிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்க மறுக்கும் போது.......

- நீங்கள் இழிவான, கேவலமான பேச்சில் பங்கு பெறாமல் விலகும்போது.....

6) வேதாகமானது பேதுருவின் பண்பில் காணப்பட்ட பலவீனத்தை மறைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. சீமோன் பேதுரு இயேசுவை மறுதலித்தான், குணப்பட்டபின்  இரு மாதங்களுக்குள் பெந்தேகோஸ்தே நாளில் பிரசங்கித்த பொழுது 3,000 பேர் மனந்திரும்பினர். பேதுருவினுடைய வாழ்க்கையிலே, ஆண்டவருடைய கிருபை, அவனை மறுரூபப்படுத்தியத்தைத் தொடர்ந்து, தைரியமுள்ள தலைவனாக, வல்லமையுள்ள சாட்சியாக, அப்போஸ்தலர் நடப்படிகள் புத்தகம் அவனைக்குறித்து அறிவிக்கின்றது. கர்த்தர் மற்றவர்களுக்கு என்ன செய்தாரோ அதையே உனக்கும் செய்ய முடியும்!

கர்த்தர் பேதுருவை மீண்டும் நிறுவிய அனுபவத்துக்குப் பின், அவனுடைய சாவை அவன் நினைவு படுத்திக்க கொண்டான். (நம் எல்லாருக்கும் வரும் சாவைப்போல) அது நம்மை உண்டாக்கினவரின் கரங்கள்! (யோவான் 21:18-23)

இந்த வேத பகுதியில், அவன் இரத்த சாட்சியாக மரிக்கப் போவதை தீர்க்கத்தரிசனமாகக் காண்கிறோம். ஆனால் பேதுருவின் கடைசி நாட்களில் அவனுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை அவன் அறிந்த பொழுது, அவனுக்கு யோவானுக்கு என்ன நடக்கும் என்பதைக் குறித்து அறிந்துகொள்ள ஆவல் உண்டாயிற்று - எனவே யோவானுக்கு என்ன நடக்கும் என்பதை ஆண்டவரிடம் கேட்டான். 

அதற்கு இயேசு மிகச் சரியாக - யோவானுக்கு நான் என்ன தெரிந்தெடுத்திருக்கிறேன் என்பதை அறிவது உன் வேலையல்ல என்றார். எந்த மாதிரியான சாவு ஆண்டவருக்கு அதிக மகிமையைக் கொண்டுவரும் என்பதை அவன் அறிந்திருந்தான். 

சரித்திர பின்னணியின் வெளிச்சத்திலே நீங்கள் 12 அப்போஸ்தலர்களின் முடிவைப் பார்க்கும்போது நீங்கள் சொல்லலாம்: யோவான் மரித்ததை போலஇயற்கையாக - முதிர் வயதில் மரிப்பவர்கள்  - மகிழ்ச்சிக்குறியவர்கள்.  பேதுருவைப்போல இயற்க்கைக்கு அப்பாற்பட்டு சிலுவையில் அடிக்கப்பட்டு மரிப்பவர்கள் - மதிப்பு மிக்கவர்கள். ஒரு வேளை இப்போதிருப்பவர்கள் அதை போன்றதொரு மரணத்தை அனுபவிக்க மாட்டார்கள். யோவான் 21:22ல், உள்ள வார்த்தை, நம்புவதற்கு ஒரு பாடத்தை நோக்கமாக கொண்டிருக்கிறது. அது மன நிறைவுள்ள ஆண்டவரின் திட்டம் ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்கும் உண்டு என்பதுதான். 

வாழ்க்கையின் சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரி, கிறிஸ்தவ விசுவாசிகளாக உங்களுக்கு அழைப்பு விடுப்பது என்னவெனில் 'நீ என்னைப் பின் பற்றி வா' - சாராம்சம் என்னவெனில் இந்த அழைப்புதான் யோவான் 21:22ல், பேதுருவும் கொடுக்கப்பட்டது. 'என்னைப் பின் பற்றி வா' என்பதின் சரியான அர்த்தம் என்னவெனில் நீ எண்ணெய் பின்பற்றிக் கொண்டே இரு என்பதுதான்!

"இயேசுவை பின்பற்றிக் கொண்டே இரு" என்பது,

வேதவசனத்தின் அதிகாரத்தைப் பற்றிய இயேசுவின் பார்வையை ஏற்றுக்கொள்ளுவது (மத்தேயு 22:31ஆ)

இயேசு மட்டுமே இரட்சிப்புக்கு  வழி என்பதை ஏற்றுக்கொள்ளுவது (யோவான் 14:6)

இயேசு பாவிகளுக்கு விலகினர் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளுவது  (எபிரேயர் 7:26)

குற்றஞ்செய்தவர்களுக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளுவது (மத்தேயு 6:14,15)

மேலும் இதற்குப் பின் வரும் வாழ்க்கையின் இயற்கைத் தன்மையை ஏற்றுக்கொள்ளுவது (யோவான் 5:28, 29)

இவைகளை அப்படியே ஏற்றுப் பின்பற்றுவதுதான் இதன் பொருள்.

"நான் வருமளவும் இவனிருக்கஎனக்குச்  சித்தமானால் உனக்கென்ன நீ என்னைப் பின்பற்றி வா" (வ.22) மிகச் சிறந்த வேத விளக்கங்களில் ஒன்று, இந்த வசனம் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிக் குறிப்பிடுவதாக கூறுகின்றது. வேறு ஒரு வேத விளக்கம், இயேசுவின் வருகையைப் பற்றி யோவான் 14: 1-3ல், விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிடுகின்றது. எது எப்படி இருந்தாலும் இருக்காவிட்டாலும், இயேசு திரும்பவும் எந்த வினாடியிலும் வருவார் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, இயேசு திரும்ப வரும் வரை தொடர்ந்து வாழ வேண்டும். உண்மையாக ஊழியம் செய்யவேண்டும்- வாழ்வதற்கு வேலை செய்ய வேண்டும். 

ஜெபிப்போம்!

அன்பின் பிதாவே! பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நாங்கள் கற்றுக் கொண்ட அனைத்துப் பாடங்களுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.... பேதுருவை மீண்டும் நேர்த்தியாக நிலைநிறுத்திய உமது அன்புக்காக, உமது ஜெபத்துக்காக, ஊழியத்தில் வல்லமையாய்  பயன்படுத்தியமைக்காக, இந்த பாடத்தின் மூலமாக நாங்கள் மனந்திரும்பவும், ஊழியத்தை வல்லமையாய் செய்ய கொடுக்கிற உற்சாகத்திற்காகவும் பிதாவே உமக்கு நன்றியும், துதியும், கனத்தையும், மகிமையையும் இயேசுவின் நாமத்தில் செலுத்துகிறோம் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென், ஆமென். 

 இந்த செய்தி தமிழைத் தாய் மொழியாக கொண்டுள்ள தமிழர்களை சந்திக்க  “Bible helps” நிறுவனத்தாரின்  Peter: A Restored Leader     (A Study of Luke 22:31-34; 54-62; John 21:1-23) Booklet No: 418 என்ற சிறு நூலை மையமாகக் கொண்டு எழுதி வெளியிடப் படுகின்றது.

வெளியிடுபவர்: சகோ.  செல்வின் துரை.

Share Up To 110 % - 10% Affiliate Program

30 Jun 2016

HE DOES INCREDIBLE MIRACLES

எண்ணி முடியாத அதிசயங்களை அவர் செய்கிறார் 

"ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (யோபு 9:10)

ஜெபித்த, நினைத்த காரியங்கள் எல்லாம் ஒன்றும் நடக்கவில்லையே, தள்ளிக்கொண்டு போகிறதே என்று நினைக்கின்ற உங்களுக்குத்தான் ஆண்டவர் இந்த வாக்கைக் கொடுக்கின்றார்! ரோமர் 11:33ல், 

"ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாய் இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்" 

இதன்படி, ஆண்டவர் எவ்வளவு மேனமையானவர், சர்வவல்லவர் என்பதைப்பார்க்கிறோம்! மேலும் ஆண்டவருடைய வழிகளை நம்மால் நிதானிக்க முடியாது. அவருடைய வழியில் அவர் அதிசயத்தை உங்களுக்கு செய்வார்! யோபு 26:14ல்,
"இதோ, இவைகள் (வானமும், பூமியும்) அவருடைய கிரியையில் கடைக்கோடியானவைகள்; அவரை குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடை வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்" 

அவருடைய வல்லமை மிகப்பெரிது, கர்த்தர் பெரியவர்; அவரால் செய்யமுடியாத அதிசயம் ஒன்று உண்டோ? பிரசங்கி 3:1ன் படி, 
"அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலேயே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;......"

நிச்சயமாகவே மிகச் சரியான நேரத்தில் அவர் செய்வார்! ஏசாயா 40:27,28ல்,

"யாக்கோபே, இஸ்ரவேலே; என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதிமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது" 

ஆண்டவருடைய அன்பைப் பாருங்கள்! எவ்வளவு நேர்த்தியாய் உங்களை உற்சாகப்படுத்துகின்றார். எபேசியர் 3:20ன்படி, 
"நீங்கள் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய்.... உங்களுக்கு செய்ய வல்லமை உள்ளவர்"

ஆண்டவருடைய அன்பைப் போற்றுவோம்:
"கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிரவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?" (யாத்.15:11)
"ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை  என்றுமுள்ளது" (சங்கீதம் 136:4)
"அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்ஜியம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறையாக நிற்கும்" (தானியேல் 4:3)

"இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்" (சங்கீதம் 72:18)

ஜெபிப்போம்!

எங்களை நேசித்து வழிநடத்தி அற்புதங்களைச் செய்கிற எங்கள் கர்த்தாவே, நீண்ட நாள் காத்திருப்பது இருதயத்தை இளைக்கப்பண்ணும், வேண்டியது வரும்போதோ ஜீவ விருட்சம் போலிருக்கும் என்ற வசனத்துக்கேற்ப இந்த நாட்களிலே நீர் செய்யவிருக்கின்ற அற்புதத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம்! நேபுகாத்நேச்சார் உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாகக் கண்டது என எழுதியதைப் போல, நாங்கள், நீர் செய்கிற அதிசயங்களை உலகமெங்கிலும் பிரசித்தப்படுத்த கிருபை செய்யும், பணத் தேவையிலும், சுகவீனத்திலும் நீர் செய்கிற அற்புததிற்க்காய் நன்றி! 

கர்த்தரும் மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே! ஆமென்! ஆமென்!! 

என்தேவன் தமது ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" பிலி.4:19

20 Apr 2016

FIELD OF ELECTION

தேர்தல் களம்

தமிழ் நாடு இப்பொழுது தேர்தல் களத்திலே இருக்கின்றது. வாக்களிக்காமல் இருந்து விடாதிருங்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆளுகையை ஒப்படைக்கின்றீர்கள்! எதிர்கால குழந்தைகளின் வாழ்வுக்கு அடித்தளமிடுகின்றீர்கள். எனவே மிகவும் கவனமாக ஓட்டளிக்க வேண்டும்.

முதலாவது நபர்களைத் தெரிந்தெடுத்தல்: ஜாதி பார்க்க வேண்டாம். நேர்மையானவரா? தொகுதிக்கு என்ன செய்வதாக வாக்குக் கொடுக்கின்றார்? முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தால், லஞ்சம் வாங்கினாரா? கொஞ்சம் வாங்கினாலும் லஞ்சம் லஞ்சமே! பிரச்சனைகளின் போது மக்களோடு மக்களாக நின்றாரா? இதுவரை என்ன செய்திருக்கிறார்? எல்லாவற்றையும் குறித்து நிதானமாக நிதானியுங்கள். உங்கள் தொகுதியில் கட்சி வேறுபாடு பார்க்காமல் நிற்கின்ற சுயேச்சை உட்பட எல்லாரையும் நிதானித்துப் பாருங்கள்.

இவர்தான் ஜெயிப்பார் என நினைத்து யாருக்கும் ஓட்டளிக்காதிருங்கள்! நல்லவரும், வல்லவரும், எளிமையானவருமாகப் பார்த்து வாக்களியுங்கள்! யார் வேண்டுமானாலும் நேரில் பார்த்து பிரச்சனைகளை பேசலாம் என்பவர் எளிமையானவர். இப்படிப்பட்ட நபரை உங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்து வாக்களியுங்கள்.

இரண்டாவதாக கட்சியின் அடிப்படை: தி.மு.க. கூட்டணி, அ.இ.அ.தி.மு.க. கூட்டணி இரண்டையும் ஒதுக்கி வைக்க வேண்டும். இரண்டுமே உங்கள் சந்ததியின் எதிர்காலத்துக்கு எதிரிகள். தே.மு.தி.க.வுக்கு கொள்கையே கிடையாது. (எதிர் கட்சிக்காரர்களை தரக் குறைவாக பேசுபவர்கள், என்ன மக்களுக்கு செய்வோம் என குறைவாக பேசுபவர்கள், ஒருசில மனிதரையே குறை சொல்லிக்கொண்டிருப்பவர்கள்) எனவே இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டளித்தால் உங்கள் வோடே வேஸ்டு. அப்பா காங்கிரஸ், நானும் அதற்குத்தான் வாக்களிப்பேன் என வாக்களிக்காதிருங்கள். சந்தர்ப்ப வாத கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம். (உதாரணமாக, வாசன்) பா.ம.க. இதில் கொள்கை தெளிவு இல்லை. ஆம் ஆத்மி, நாம் தமிழர் என புதிய கட்சிகள். உண்மையான மாற்று நாம் தமிழர் கட்சிதான். இதிலும் இன்றைய தேதியில் விளக்கங்கள் தேவைப்படுகின்றது. குறிப்பாக, மத சிறுபான்மை இன மக்களைக் குறித்து.

கடைசியாக:

நல்ல மனிதரை நீங்கள் வாக்களிக்க தெரிவு செய்துவிட்டீர்களென்றால், அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என பார்க்க வேண்டாம். வாக்களியுங்கள்!

29 Mar 2016

TO-DAY'S NIGHT PRAYER - 2

இன்றைய இரவு ஜெபம் - 2

அன்புள்ள தேவனே, வாழ்வில் இன்னொரு நாளைத் தந்தபடியால் உமக்கு நன்றி,
இன்று நான் கற்றுகொண்டவைகளுக்காக ,
இன்று நான் விளையாடிய விளையாட்டுக்காக, இன்று நான் சந்தித்த நண்பர்களுக்காக 
உமக்கு நன்றி! 
இன்று எனது வீட்டில் நான் பெற்ற அன்பிற்காகவும் கரிசனைக்காகவும்;
இன்று எனது பள்ளியில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள், மற்றும் பயிற்சிக்காகவும்;
இன்று எனது நண்பரிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட நம்பிக்கைக்குரிய நட்புணர்வுக்காகவும்
உமக்கு நன்றி.
என் இரட்சகரே என்னை மன்னியும், இன்னும் நன்கு வாழ என்னை உருவக்கும்படியாய் 
இயேசு கிறிஸ்த்துவின் மூலம் ஜெபிக்கிறேன் எங்கள் பிதாவே, ஆமென், ஆமென்.

24 Mar 2016

TO-DAY'S NIGHT PRAYER - 1

இன்றைய இரவு ஜெபம் - 1


அன்புள்ள ஆண்டவரே! படுக்கைக்குப் போகுமுன் உமது சமூகத்தில் பிறரை நினைவு கூர்ந்து ஜெபிக்கிறேன்,
இன்று இரவு வியாதியின் நிமித்தம் தூங்க முடியாமலிருப்போருக்காக,
இந்த இரவு தனிமையில் வாடுவோருக்காக, 
கடலில் புயலின் ஆபத்தில் இருப்போருக்காக, 
விமானத்திலும், நிலத்திலும் பயணப்படுவோருக்காக,
சிறையில் அவமானப்பட்டு வாடுவோருக்காக,
வாழுவதற்கு வீடு இல்லாமல் கஷ்டப்படுவோருக்காக,
கடற்படையில், விமானப்படையில், தரைப் படையில் வேலைசெய்வோருக்காக,
ஜெபிக்கிறேன்! 
எனது எல்லா நண்பர்களையும் உமது சமூகத்தில் நினைவுகூர்ந்து ஜெபிக்கிறேன், ஆசீர்வதியும்
இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் பிதாவே! ஆமென், ஆமென். 












16 Mar 2016

DO YOU WANT MONEY? CLICK! CLICK!! CLICK!!!





நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!
பணத்தேவையோடு இருக்கின்றீகளா? 
மேலே உள்ள பேனரை சொடுகுங்கள்!
பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன!
அதிகப்படியான பண வரவு!
முதலீடு இல்லாமலேயே!
வாழ்த்துக்கள்!

15 Mar 2016

EARN EXTRA MONEY FROM ON-LINE

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

ஓய்வு நேரத்தில் பணம் சம்பாதிக்கலாம்... எந்த முதலீடும் இல்லாமலேயே! குறைந்த நேரத்தில்..... முயற்சி செய்யுங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!  கீழே உள்ள படத்தை சொடுக்கி முன்செல்லுங்கள்!

25 Feb 2016

PRAYER

ஜெபம்
பிதாவாகிய தேவனே!
ஒருவர் என்னிடத்தில் உதவி கேட்கும் பொழுது சரி என்று உடனே சொல்லக்கூடிய கிருபையையும்,
நான் சோதிக்கப்படும் பொழுது, தவறானதை செய்ய மனம் இணங்கும் பொழுது உறுதியாக இல்லை என்று சொல்லக்கூடிய பெலத்தையும்,
நான் அவசரப்படும்பொழுது, எனக்கு நானே காத்திரு எனக் கூற பொறுமையையும்,
இன்று செய்யக்கூடியதை வேறொரு நாள் செய்யலாம் என தள்ளிவைக்கும் மனப்பான்மை வரும் போது, இப்பொழுதே என சொல்லக்கூடிய மன உறுதியையும்,
இன்று வருகின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும், கர்த்தாவே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? எனக் கேட்கும் கீழ்ப்படிதலையும், கொடுக்கும்படியாய் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென், ஆமென்.

உங்கள் ஜெபத்திற்கு பதில் உண்டு...

18 Jan 2016

MY COMMITMENT IN 2016

இந்த 2016ல்  எனது அர்ப்பணிப்பு 
இந்த வருட புதிய செய்தியோடு உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்! ஆண்டவராகிய இயேசுதாமே உங்களை ஆவிக்குரிய வாழ்க்கையை ஆசீர்வதித்து உயர்த்துவாராக. 


பொதுவாக கிறிஸ்தவர்களாகிய நாம் புதுவருட தீர்மானமாக, அதிகமாக வேதத்தை வாசித்து தியானிக்க அதிக நேரம் கொடுப்பேன்; அதிகமாக ஒரு மணி நேரம் ஜெபிப்பேன்.... என உறுதி எடுப்பார்கள். இதைப்போலவும் நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகின்றார். இந்த தீர்மானத்தைக் கைக்கொள்ளும் பொழுது உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு எழுப்புதல் உண்டாகும்.
 1. நீங்கள் சொன்னதை (நீங்களே) செய்ய கவனமாயிருங்கள்.

2. அவர்கள் சொன்னபடி செய்ய கவனமாயிருங்கள்.

3. பரிசுத்த ஆவியானவர் சொன்னபடி செய்ய கவனமாயிருங்கள்.

1. நீங்கள் சொன்னதை (நீங்களே) செய்ய கவனமாய் இருங்கள்:

நீங்கள் வாயைத் திறந்து எதைச் சொல்லுகின்றீர்களோ, அதை செய்ய கவனமாய் இருங்கள். நண்பர்களிடத்தில், பிள்ளைகளிடத்தில் நீங்கள் அநேக காரியங்களைக் குறித்து பேசுகின்றீர்கள். புத்திமதி கூறுகின்றீர்கள். ஆனால் பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக இல்லாமல் இருக்க நீங்கள் பிரயாசப் படவேண்டும். இதில் நமக்கு உதாரண புருஷர் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துதான். சுவிஷேச புத்தகங்களிலே அநேக சம்பவங்கள் இருந்த போதிலும் இங்கே ஒரு சம்பவத்தை மட்டும் பார்ப்போம். மத்தேயு 5:44ல்,
"நான் உங்களுக்கு சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" 
இதையே லூக்கா 6:28ம் கூறுகின்றது,
"உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்"
இயேசு தாம் கூறியவற்றை சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் போதும் நிறைவேற்றத் தவறவில்லை. லூக்கா 23:34ல், 
"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்...."
இயேசுவை உங்களுக்கு முன்மாதிரியாக கொள்ளுங்கள். இதையே யாக்கோபு 3:2ல்,
"ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக் கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்" 
இந்த வசனத்தினாலே நீங்கள் பெற்றுக் கொள்ளப் போகிற ஆசீர்வாதங்கள் ஏராளம்! ஏராளம்!! எனவே இந்த வசனத்தின்படி நடக்க கவனமாய் இருங்கள்! 

2. அவர்கள் சொன்னபடி செய்ய கவனமாயிருங்கள்:

மத்தேயு 23:2ல், இயேசு கிறிஸ்து,
"ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்;...." 
இங்கே, அப்பா, அம்மா, பெரியோர்கள், அதிகாரிகள் ஆகியோர் 'மனுஷனுடைய' என்ற வார்த்தையின் கீழ் வருகின்றார்கள். பொதுவாக ஞானம் வெளியில் இருந்து கூப்பிடுகின்றது.

3. பரிசுத்த ஆவியானவர் சொன்னபடி செய்ய கவனமாயிருங்கள்:

யோவான் 16:13,14ல், இயேசு கிறிஸ்து,
"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞசொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்"
ஆவியானவர் எப்பொழுதும் சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை வழிநடத்துவார். மாத்தி பேசு, பொய் சொல்லு, வாய்க்கு வந்ததை சொல்லு என்று கூறவே மாட்டார். ஆண்டவரிடத்தில் கேள்விப்பட்டதை உங்களுக்கு சொல்லுவார். தீர்க்கதரிசனமாக உங்களுக்கு அறிவிப்பார். அவர் இயேசுவை மகிமைப்படுத்துவார்; இவைகளில் இருந்து ஆவியானவர் புரள மாட்டார்; உங்கள் உள்ளத்தில் எழும்புகிற எந்த குரலும் இது இயேசுவை மகிமைப்படுத்துகிறதா? என நிதானித்து ஏற்றுக்கொள்ளுங்கள்; மற்றபடி வழி நடத்துபவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவன்தான்! 

இதிலே ஒரு சாட்சி: ஊழியத்தில் நடந்தது. ஒருமுறை நானும் ஒரு சகோதரனும் ஊழியத்தை ஒரு புதிய பகுதியில் ஆரம்பிக்கலாம் என எண்ணி, சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு சென்றோம். (முந்தைய வாரத்தில் ஒரு நாள் அங்கு சென்று அந்த பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று அங்கு சென்றிருந்தோம். கைப்பிரதி கொடுத்தோம், கூடி வந்த பிள்ளைகளுக்கு ஒரு பாடல் கற்றுக் கொடுத்தோம்) இருவரும் அந்த பகுதிக்குள் பிரவேசிக்கும் பொழுது, உள்ளே இருந்து ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டே வந்தார்; நீங்கள் இங்கே வரக்கூடாது என கத்தினார்; கூட வந்த சகோதரன் சற்று ஓரமாக ஒதுங்கிக் கொண்டார். நான் உள்ளத்திலே ஜெபிக்க ஆரம்பித்தேன். அவர் மிக அருகில் வந்ததும் வாயைத் திறந்து 'உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்' என அவரைப்பர்த்துக் கூறினேன். அந்த நாளில் அந்த வசனத்தை நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனவே எனக்கு ஆச்சரியம்! பின்பு மிகுந்த ஆச்சரியம்! காரணம் கேட்டவர்த்தைகளில் பேசி எங்களை அடிக்க வந்தவர், குபீரென்று சிரித்தார்! பின்பு மெதுவாக பேச்சு கொடுத்தேன், முடிவாக எந்த வீட்டுக்கும் போங்கள், எங்கள் வீட்டுக்கு மட்டும் வராதீர்கள் என்றார்! இதுதான் பரிசுத்த ஆவியானவறது நடத்துதல்!

முடிவாக, பரிசுத்த ஆவியானவர் வேத வசனத்துக்கு விரோதமாக உங்களை நடத்த மாட்டார்.

ஜெபிப்போமா?

எங்களை வழி நடத்துகின்ற பரிசுத்த ஆவியானவரே உம்மைத் துதிக்கிறோம் மகிமைப்படுத்துகின்றோம்! இந்த அருமையான சத்தியத்தின்படி இந்த வருடம் முழுவதும் வழி நடத்தும்படியாய் ஜெபிக்கிறோம், எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையிலே முன்னேறிச் செல்ல, இயேசுவை மகிமைப்படுத்த, அநேகருக்கு முன்பாக சாட்சியாய் வாழ எங்களுக்கு கிருபை செய்யும். இந்த வருடம் முழுவதும் இந்த சத்தியத்தில் இருந்து விலகிச் செல்ல ஆரம்பிக்கும் பொழுதே எங்களை கண்டித்து உணர்த்தும். இயேசுவின் மூலம் ஜெபங்களும் பிதாவே. ஆமென், ஆமென்.

ஆண்டவர் இந்த சத்தியத்தின்படி இந்த வருடம் முழுவதும் வாழ்ந்து இயேசுவை மகிமைப்படுத்த உதவி செய்வாராக!