கடன்!
(முதல் பகுதி)
அன்பு நண்பர்கள் யாவருக்கும் வணக்கம்!
இந்த தலைப்பை 3 பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1. வேதாகமம் கடனைப்பற்றி என்ன கூறுகின்றது?
2. நடைமுறையில் கடனை எவ்வாறு தீர்க்கலாம்?
3. இனிமேல் கடன் வாங்க வேண்டியது இருந்தால், என்ன கோட்பாடுகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்?
வேதாகமத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (உங்களுக்கு கடன் இருந்தால், இந்த தலைப்பில் உள்ள அனைத்தையும் திறந்த உள்ளத்தோடு படியுங்கள்! இந்த வேதவசனங்களுக்கு கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்புக்கொடுங்கள்! கடனிலிருந்து வேதவசனத்தின் அடிப்படையில் வெளியேற வேண்டும் என்பதில் தீவிரமாக இருங்கள்!) கடனிலிருந்து வெளியேற ஆவியானவர் உங்களை வழிநடத்துவார் என விசுவாசிக்கின்றேன்! வேத வசனங்களை உறுதியாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்! கடனை வேதவசனத்தின் அடிப்படையில் பாருங்கள்! கவலை உங்கள் உள்ளத்தை விட்டு அகலும். வேத வசனத்தை மீண்டும் மீண்டும் வாசித்து, பதிலை ஒரு நோட்டில் எழுதவும்.
குறிப்பு:
ஒவ்வொரு வசனத்துக்கு தனித்தனியாக பதிலை எழுதவேண்டும். எந்த வசனம் உங்களுக்கு இடறலாக தெரிகின்றதோ, அதற்க்கு நிச்சயமாக கீழ்ப்படிந்தே (ஏற்றுக்கொண்டே) ஆகவேண்டும்.
வசன பகுதி 1. உபாகமம் 15:4-6
"எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்கு கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
உன்தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை"
வசனப்பகுதி 2: உபாகமம் 28:1,2,12,
"இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்துக்கு உண்மையாய் செவி கொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவி கொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்"
வசனப்பகுதி 3: உபாகமம் 28:15, 43-45 "இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதே போவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும். உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மென்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப் போவாய். அவன் உன்னிடத்தில் கடன் படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாய் இருப்பான், நீ வாலாயிருப்பாய்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து....."
மேலே உள்ள வசனபகுதிகளில் இருந்து தனித்தனியாக கீழே உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
கேள்வி:
இந்த வேதபி பகுதிகளின் அடிப்படையில் பழைய ஏற்பாட்டுக்கு காலத்தில் கடன் எவ்வாறு பார்க்கப்பட்டது?
ஒருவர்்கடனுக்கு ஆளாவதற்கோ அதினின்று விடுபடுவதற்க்கோ என்ன காரணம்?
அடுத்தது,
வேதப்பகுதி 1:ரோமர் 13:8 "ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மறறொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறரிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்"
நீதிமாழிகள் 22:7,
"ஐசுவரியாவான் தரித்திரனை ஆழுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை"
1 கொரிந்தியர் 7:23,
"நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்"
வேதாகமம் கடனைப் பரிந்துரைக்கிறதா? அப்படியெனில் ஏன்?2இந்த வேதவசனங்கள் கூறுவது உங்கள் தொழிலுக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா? (வாழ்க்கைக்கும்)
உங்களுக்கு கடன் இருந்தால் அதிலிருந்து மீளுவதற்கான திட்டம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் அந்த திட்டத்தை உங்கள் நோட்டில் எழுதவும். இதை நன்கு சிந்தித்து முடிவெடுக்கவும்.
அடுத்தது,
சங்கீதம் 37:21,
"துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இறங்கிக் கொடுக்கிறான்"
நீதிமொழிகள் 3:27,28,
"நன்மை செய்யும்படி உனக்கு திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாலைக்குத் தருவேன் என்று சொல்லாதே"
கேள்வி: கடனைத் திரும்பிச் செலுத்துவதை பற்றி இந்த வசனங்கள் கூறுவது என்ன? இரு வசனங்களுக்கும் தனித்தனியாக பதில் எழுதவும். இதை நீங்கள் எவ்வாறு செயல்படுத்துவீர்கள்?
அடுத்தது,
2 இராஜாக்கள் 4:1-7ஐ வாசிக்கவும்.
"தீர்க்கத்தரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமதுஅடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்.
எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்:பி ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.
அப்பொழுது அவன்: நீ பொய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி,
உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததாய் ஒரு பக்கத்தில் வை என்றான்.
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.
அந்த பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா என்றாள். அதற்க்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.
அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவணம் பண்ணுங்கள் என்றான்.
1. இந்த வேத பகுதியில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளும் கடனிலிருந்து மீளுவதற்கான கோட்பாடுகள் என்னென்ன?
2. ஏதாவது ஒரு கோட்பாட்டை உங்களுடைய தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்த முடியுமா? ஆம் எனில் எவ்வாறு?
(மேலே உள்ள இரு கேள்விகளுக்கும் நீங்களே தியானித்து எழுதுங்கள். அல்லது அடுத்த பதிவாக இதே வலைத்தளத்தில் வெளியிடப்படும், உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகம் செய்யுங்கள். இது உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்)
அடுத்தது,
நீதிமொழிகள் 22:26,27
"கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைக்கப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக் கொள்ள வேண்டியதாகுமே"
நீதிமொழிகள் 17:18,
"புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக் கொடுத்துப் பிணைப்படுகிறான்"
மேலே உள்ள வசனங்களில் இருந்து கீழே உள்ள கேள்விக்கு பதிலளிக்கவும்.
1. ஜாமீன் கொடுப்பதைக் குறித்து இந்த வசனம் என்ன சொல்லுகிறது? எழுதவும்.
அடுத்தது,
நீதிமொழிகள் 6:1-5,
"என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அன்னியனுக்குக் கையடித்துக் கொடுத்தாயானால்,
நீ உன் வாய் மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்ட படியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.
உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவது போல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்"
கேள்வி:
ஜாமீன் கையெழுத்திட்டவர் என்ன செய்ய வேண்டும்?
நண்பர்கள் யாவருக்கும் அன்பு வணக்கம்! அடுத்த இரு பிரிவுகள் அடுத்த பதிவாக வெளியாகும். உங்களுக்கு கடன் இருக்கும் பட்சத்தில், கடனிலிருந்து வெளியேற ஜெபிக்கிறேன்! வாழ்த்துகின்றேன்!!
No comments:
Post a Comment