பொறாமை - தீமையின் வாசல்
விசுவாசிகள் மற்றும் நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
அது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் நாள். பிள்ளைகளின் படிப்பு எந்த அளவில் இருக்கின்றது என்பதை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியலுடன் காத்துக் கொண்டிருந்தனர். பெற்றோர்கள் ஆசிரியர்களை பார்த்து தங்கள் பிள்ளைகளின் படிப்பில் உள்ள முன்னேற்றங்களைக் குறித்து, தனித்தனியாக சந்தித்துப் பேசி, மதிப்பெண் பட்டியல்களை வாங்கி கொண்டிருந்தனர்.
பிரான்சிஸ் (12ம் வகுப்பு), மேரியின் (10ம் வகுப்பு) பெற்றோர் அன்று பள்ளிக்கு வரவில்லை. மேரியும், பிரான்சிஸும் காரணத்தைச் சொல்லி அவரவர் வகுப்பாசிரியர்களிடம் சென்று மதிப்பெண் பட்டியலை வாங்கி கொண்டனர். பிரான்சிஸ் வீட்டுக்கு பயத்தோடு சென்றான். தனது பெற்றோர் மேரியின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்திருப்பார்கள். தனது மதிப்பெண்கள், அவளோடு மதிப்பெண்களோடு ஒப்பிட்டால், அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என எண்ணிப்பார்த்த்தான். "அவர்கள், அவள் 90% க்கு மேல் வாங்கியிருக்கும் ஒவ்வொரு படத்துக்கும், ஒரு அன்பளிப்பு என (புத்தாடை, தின்பண்டம் அது, இது என) வாங்கிக் கொடுப்பார்கள். இப்படியே யோசித்துக் கொண்டு வீட்டை அடைந்தான். முன் கதவைத் திறந்தபொழுது, முன் வீட்டில் இருந்த அவனது பெற்றோரின் பேச்சைக் கேட்க நேரிட்டது.
"மேரி, வழக்கம் போலவே இது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த மதிப்பெண் பட்டியல்" என உணர்ச்சிபொங்க அப்பா கூறிக்கொண்டிருந்தார்.
"செல்ல்ல்ல்ல குட்டி, உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது, நீ மிக கடுமையாக உழைத்திருக்கிறாய்" இது அம்மா.
பிரான்சிஸ் அவர்கள் மூவரையும் தாண்டிச் செல்ல முயன்றான். அவன் அடுத்த அறைக்கு செல்லுவதற்கு சற்றுமுன், அவனது அம்மா, "பிரான்சிஸ் இங்கே வா.... இந்த முறை நீ எப்படி செய்திருக்கிறாய்? எனப் பார்ப்போம்"
"மிக நல்லது....." எனக் கூறிய பிரான்சிஸ், இப்பொழுது உலகப்போர் 3 ஆரம்பமாகப் போகிறது என நினைத்தான். திரும்பி அம்மாவிடம் வந்து, அவனது பையில் இருந்த கசங்கி இருந்த மதிப்பெண் பட்டியலை எடுத்து நீட்டினான்.
அம்மா அதை பிரித்துப் பார்த்து, "நல்லது இதுவும் நல்ல மதிப்பெண்கள்தான்" சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவனது அப்பா, "ஹும்ம்ம்ம்ம்ம்...."
"கணக்கிலே இந்த முறை நல்ல மதிப்பெண்கள், முன்னேற்றந்தான்......"
பிரான்சிஸ், "சரிதான்..... ஆனாலும் நான் மேரியைப்போல நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை. ஒரு பாடத்திலும் 90 மதிப்பெண்கள் எடுக்கவில்லை, அவளைப்போல நான் நன்றாகவே செய்யவில்லை" இப்படிக் கூறிவிட்டு அந்த குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு வேகமாக கதவை அடித்து சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
பிரான்சிஸ், மேரிமீது கொண்ட பொறாமை அவனது பெற்றோர்களுக்கு பதில் கூற வேண்டியதை பாதித்தது. அப்போஸ்தலர் நடப்படிகள் 13:44-52ல், சில யூதமக்கள், பவுல் மற்றும் பர்னபாவிடம் கொண்ட பொறாமை, அவர்களை நடத்த வேண்டிய விதத்தைப் பாதித்தது.
பதிலளியுங்கள் (தியானியுங்கள்):
1. ஏன் பிரான்சிஸ் மற்றும் யூதர்கள் பொறாமையினால் நிறைந்தனர்? அவர்களின் பொறாமையின் பின் விளைவுகள் என்ன?
2. யார் மீதாவது நீங்கள் பொறாமைப்பட்டிருக்கின்ரீர்களா? அதன் மூலம் என்ன பின் விளைவுகளை சந்தித்தீர்கள்?
கவனிக்க:
நீங்கள், பிறரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதிருங்கள்.
உங்கள் திறமைகளை பட்டியலிடுங்கள், எதிலெல்லாம் நல்லவைகளை செய்தீர்கள்? பின்பு உங்களை பொறாமை என்னும் சோதனைக்குள்ளாக்கிய நபர்களின் பெயர்களை படியுங்கள்.
உங்களை பொறாமை கொள்ளச்செய்த (சரியாக சொன்னால் உங்களை ஆச்சரியப்படுத்திய, கிளர்ச்சியூட்டிய) நபர்களுக்காக ஆண்டவரைத் துதியுங்கள்.
மேலும் படிக்க: 1) ஆதியாகமம் 37 (பக்கம் 48)
2) அப்போஸ்தலர் 17:5-9 (பக்கம் 187)
3) சங்கீதம் 37:1-8 (பக்கம் 691)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நண்பர்களே!! உங்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகின்றேன்! உங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாயிருக்கும் இதைப்போன்ற வெளியீடுகளை, உங்கள் நண்பர்களுக்கும் (கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவரல்லாதவர்கள்) என எல்லாருக்கும் அறிமுகம் செய்யுங்கள்! நன்றி!!
No comments:
Post a Comment