கடன் !!
(இரண்டாம் பகுதி)
கிறிஸ்துவில் பிரியமான நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்! இரண்டாம் பகுதியாக நடைமுறையில் எவ்வாறு கடனைத் தீர்க்கலாம்? என்ற தலைப்பில் நாம் பார்க்கலாம்.
1. முதலாவது ஜெபம்: கடனை விரைவாக திருப்பி செலுத்தி அதைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறவர்களுடைய உண்மையை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். விதவைப்பெண்ணிற்கு (2இராஜாக்கள் 4ம் அதிகாரம்) உடனடியாக உதவி செய்ததைப்போல அல்லது சிறிது காலத்துக்குப் பின், அவ்வாறு செய்யலாம். (கையில் பணம் இருந்தால் உடனடியாக கடனைத் திரும்பிச் செலுத்த முன்னுரிமை கொடுங்கள்) மாத தவணையாக திரும்பிச் செலுத்த ஒரு சிறு தொகைதான் இருந்தாலும், கடனை திரும்பிச் செலுத்துங்கள். கர்த்தர் உங்கள் முயற்சிகளை வர்த்திக்கப் பண்ணுவார்.
2. வரவு செலவைத் திட்டமிடுங்கள்: வரவு செலவு திட்டமானது, நீங்கள் முன்கூட்டியே உங்கள் செலவுகளை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, உதவியாக இருக்கும்.
3. உங்கள் உடமைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்: உங்கள் உடைமைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு தேவையற்றதாக இருக்குமென்றால், அதை விற்று கடன் சுமையிலிருந்து விரைவாக நீங்கள் வெளியேறிவிடலாம்.
4. உங்கள் கடன்களை பட்டியலிடுங்கள்: அநேகர் எவ்வளவு கடன் இருந்த போதிலும், துல்லியமாக எவ்வளவு தங்களுக்கு கடன் இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். இது இயல்பானது. உங்களுக்குத் பிடிக்காததை நீங்கள் நினைக்காமலிருந்தால், ஒருவேளை அது உங்களை விட்டு மறைந்து போய்விடும் என்ற எண்ணம் இருப்பினும், உங்களுடைய கடன்களின் பட்டியல் இருந்தால்தான் உங்களுடைய நிதி நிலைமையை நீங்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும். (ஒருவர் இப்படியாகச் சொன்னார், 2 இலட்சரூபாய் கடன் இருக்கின்றது, கடன் எனக்கு அல்ல. என் தொழிலுக்கு இருக்கின்றது என்று)
5. கடனைத் திருப்பி செலுத்துவதற்கான முயற்சிகள்: அ) முதலாவது சிறிய கடனைத் திரும்பிச் செலுத்துங்கள். இதை நீங்கள் உங்கள் குறிக்கோளாகக் கொண்டால், ஒவ்வொரு கடனாகக் குறையக் குறைய மீதமிருக்கும், கடன்களை திருப்பி செலுத்த அது உங்களை உற்ச்சாகப் படுத்தும். ஆ)அதிக வட்டியுள்ள கடன்களை திரும்பிச் செலுத்த முன்னுரிமை கொடுங்கள்.
6. உங்கள் வருவாயை அதிகரிக்க முடியுமா எனப் பாருங்கள்: இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் உங்கள் வருவாயை அதிகரிக்க முடியுமா? எனப் பாருங்கள். அப்படி வரும் அதிக வருமானத்தை கடனை அடைப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். வருவாயை அதிகரிக்கும் முயற்சியானது, கர்த்தரிடமும், உங்கள் குடும்பத்தின் மேலும் உங்களுக்கு இருக்கின்ற உறவைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். (அதாவது ஞாயிறு அன்றும் வேலைக்குச் சென்று விடாதிருங்கள். குடும்பத்தோடு நேரம் செலவிடுவதை விட்டு விடாதீர்கள்)
7. சிக்கனம்: செலவை எப்படி குறைக்கலாம் என்று யோசித்து, முடிவெடுங்கள்.
8. கடன் அட்டையை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்: உங்களுக்கு கடன் அட்டை இருந்தால், அதை பயன்படுத்துவதை அறவே நிறுத்த வேண்டும். பணத்துக்குப் பதிலாக கடன் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் வழக்கமான செலவை விட 1/3 மடங்கு அதிகமாக செலவளிக்கின்றார்கள்.
9. போதும் என்ற மனநிறைவைக் கொள்ளுங்கள்: நுகர்வோரை வியாபாரிகள் பல்வேறு முறைகளில் தங்கள் பொருட்களை வாங்கும்படி தூண்டுகின்றனர். அவைகளில் ஒன்று, விளம்பரங்கள். உதாரணத்துக்கு 30/07/2017 ஞாயிறு அன்று சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரம் இது. ICICI Bank Credit & Debit Cards Daily highest spender wins 100 gms of GOLD. (In the form of a voucher worth Rs.3 lakh from Tanishq) Offer period July 16, 2017 to August 15, 2017. உங்களுக்கு இருப்பது போதாது என்ற அதிருப்தியான எண்ணத்தை உருவாக்குவதே விளம்பரங்களின் நோக்கமாக இருக்கின்றது.
ஒரு அமெரிக்க கம்பெனி, தங்கள் நாட்டில் அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்று, மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றில், தொடங்கியது. ஒரு மாதமாகியது, மாத சம்பளம் பெற்றுக் கொண்ட மக்கள், அடுத்த மாதத்திலிருந்து யாருமே வேலைக்கு வரவில்லை. ஒரு சில மாதங்கள் கம்பெனி மூடிக் கிடந்தது. பின்பு அதன் முதலாளி, அந்த கிராமத்தின் தலைவரிடம் சென்று விசாரித்தார். அவர், எங்களுக்கு எல்லாம் இருக்கின்றது! நாங்கள் ஏன் வேலை செய்யவேண்டும்? என சொன்னாராம். பின்பு யாரோ ஒருவர், அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும், விலைக்கு வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலை தபாலில் அனுப்பினாராம். அதற்கு பின்பு அந்த தொழிற்சாலைக்கு தொழிலாளர் பிரச்சனையே இல்லை.
உங்களுடைய பொருளாதாரத்தை பொருட்களின் நுகர்வு எவ்வளவு பாதிக்கின்றது என்பதற்கான 3 காரணங்கள் இதோ! 1. நீங்கள் எவ்வளவு அதிகமாக தொலைக்காட்சி பார்க்கிண்றீர்களோ அவ்வளவு அதிகமாய் செலவு செய்கின்றீர்கள். 2. பத்திரிகையில் எவ்வளவு அதிகமாய் பொருட்களின் பட்டியலையும், விலையையும் பார்க்கிண்றீர்களோ அவ்வளவு அதிகமாய் செலவு செய்கின்றீர்கள். 3. கடைத்தெருவுக்கு நீங்கள் எவ்வளவு அதிகமாய் செல்லுகிண்றீர்களோ அவ்வளவு அதிகமாய் செலவளிக்கிண்றீர்கள்! தொலைக்காட்சியில் வருகின்ற விளம்பரங்களை பார்த்துவிட்டு எனக்கு அதை வாங்கிக்கொடுங்கள் எனக் கேட்காத குழந்தைகளே உங்கள் வீடுகளில் இருக்க மாட்டார்கள். இதுவே உங்களுக்கு சான்று.
"கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. போதுமென்கிற மனதுடன் கூடிய தேவபக்தியே ஆதாயம்" 1 தீமோ. 6:5,6
இயேசுவை ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பு ஒருவர், தன் நண்பர்களோடு, சினிமாதியேட்டரில், உயர்ந்த கட்டணத்திலும், உயர்தரமான உணவு விடுதிகளில் சாப்பிடவும் தனது பணத்தை தண்ணீராய் செலவிடுவாராம். இயேசுவை ஏற்றுக்கொண்டபின் எல்லோரையும் கவருவதற்குப் பதில், புதிய கிறிஸ்தவ நண்பர்களோடு, விலை மலிவான உணவு விடுதியில் தனது வாழ்க்கைக்குத் தேவையான வேதாகம சாத்தியங்களை பேசி புதிய உறவுகளை வளர்த்துக் கொள்ளுகின்றாராம். கிறிஸ்துவில் மனா நிறைவோடு இருப்பது மிகுந்த ஆதாயம்.
9. வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர கொண்டுவர முயலுங்கள்: அநேகர் தங்கள் கடனிலிருந்து மீளுவதற்காக தங்களுடைய வாழ்க்கைத்தரத்தை குறைப்பதற்கு ஆயத்தமாய் இருக்கின்றனர். சிலர் தங்கள் வீட்டை விற்றுவிட்டு சிறிய வீட்டை வாங்கி இருக்கின்றனர். அல்லது வாடகை வீட்டுக்குச் சென்று இருக்கின்றார்கள். பலர் தங்கள் விலை உயர்ந்த கார்களை விற்றுவிட்டு, விலை குறைந்த கார்களை பணம் கொடுத்து வாங்கி இருக்கின்றார்கள். சரியாகச் சொன்னால் அவர்கள் குறைந்த காலத்தில் தங்கள் கடனிலிருந்து மீளுவதற்காக அவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை தற்காலிகமாக தியாகம் செய்திருக்கின்றார்கள்.
10. மனம் தளராதீர்கள்! கடனிலிருந்து மீளுவதற்கான இந்த முயற்சி மிகவும் கடினமானது. அதற்க்கு கடின உழைப்பு தேவை. 3 காரியங்களை நீங்கள் கட்டாயம் செய்யவேண்டும்.
1. உங்கள் வருவாயை விட அதிகமாக செலவழிப்பதை நிறுத்துங்கள்.
2. கடனுக்கான வட்டியை செலுத்த தவறாதீர்கள்.
3. கடன் முழுவதையும் அடைத்துவிடுங்கள்!
கடனிலிருந்து மீளுவது எளிதானதல்ல என்றாலும் அதனால் கிடைக்கும் விடுதலையானது உங்களை உற்சாகப்படுத்தும்.
சில சிக்கன நடவடிக்கை: கார் வாங்கினால் அந்த காரை 7,8 வருடங்களாவது பயன்படுத்துங்கள். புதிய மாடல் கார் கவர்ச்சியாக இருக்கின்றது என புதிய மாடலுக்கு தாவி விடாதிருங்கள்!! ஒரு ஸ்மார்ட் கைபேசி வாங்கினால், குறைந்த பட்சம், 5 வருடங்களாவது பயன்படுத்துங்கள்! இது ஆடம்பரத்திலிருந்து உங்களை விலக்கிக் காக்கும். ஒரு வீடு வாங்க, அல்லது கட்ட முடிவெடுத்து வங்கியில் கடன் வாங்குகிண்றீர்கள். அந்த கடன் தொகையோ, திரும்பிச் செலுத்தும் தவனையோ உங்களை / உங்கள் மனநிலையை இப்பொழுதிருக்கிற வாழ்க்கைத் தரத்தை பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த பகுதி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகின்றோம்! இந்த கட்டுரை எமது ஈஸ்கட்டோஸ் என்னும் மாதப் பத்திரிகையில் இருந்து கொடுக்கின்றோம்! உங்களுக்கு பத்திரிகை வேண்டுமானால், உங்கள் முகவரியை 9840836690 என்ற கைபேசி எண்ணுக்கு குறுங்செய்தியாக அனுப்பிவைக்கவும்!! நன்றி!!!
No comments:
Post a Comment