கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
நண்பர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட ஆயத்தமா? கிறிஸ்து ஜெயந்தியை கொண்டாட ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்! வீட்டை வெள்ளையடிக்க வேண்டும், சட்டைத்துணி எடுத்து தைக்கப்போட வேண்டும்! உறவினர்கள் வீட்டுக்கு வருவார்கள்! அவர்களுக்கு என்னென்ன பலகாரங்கள் செய்யவேண்டும் என திட்டமிட்டுக்கொண்டிருப்பீர்கள்!! அதோடு கூட சுவிஷேசத்தையும் அறிவிக்கவும் முயற்சி செய்யுங்கள்!
ஏனெனில், கிறிஸ்துமஸ் என்றால் இயேசு பிறந்தநாள் என்று அனைவருக்கும் நன்கு தெரியும்! எனவே அந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசுவை அறிவிப்பது மிக எளிது! அனைவரும் காது கொடுத்து கேட்ப்பார்கள்! உங்களுக்கு பேச வராது என நீங்கள் நினைத்தால், கைப்பிரதி கொடுத்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறலாம்! நீங்கள் விரும்பினால், உங்கள் முகவரியை (ஆங்கிலத்தில்), எனது கைபேசிக்கு, குறுந்செய்தியாக டிசம்பர் 10 க்குள், அனுப்பி வையுங்கள்! உங்கள் முகவரிக்கு, 20ம் தேதிக்குள், 25 கைப்பிரதிகளை அனுப்பி வைக்கின்றேன்! (நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்) கிறிஸ்துமஸ் அன்று காலையில், கைப்பிரதியை இனிப்புடன் (லட்டு, சாக்கலேட், அல்லது கேக்) உங்கள் அயலாகத்தாருக்கு கொடுத்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறுங்கள்! அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாங்குகின்றார்கள் எனப் பாருங்கள்! நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்! வீட்டுக்கு வந்து, கைப்பிரதி வாங்கிய ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து, ஜெபியுங்கள்!
அவர்களின் இரட்சிப்புக்கு நீங்கள் கொடுக்கின்ற கைப்பிரதி ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை! ஆண்டவர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்!! இதற்க்கு அதிக பட்சம் ரூ, 1000 செலவாகும். ஆண்டவரை நீங்கள் நேசித்தீர்கள் எனில் செய்யுங்கள்! எங்கே!! கைபேசியை எடுங்கள்!! எனது எண்: 9840836690. அல்லது எனது இன்-பாக்ஸ் வந்து உங்கள் முகவரியை பொறியுங்கள்! ஆண்டவர் உங்கள் உள்ளம் நிரம்பி வழியும்படியான மகிழ்ச்சியை தருவார்!!
No comments:
Post a Comment