5 Dec 2017

JEALOUSY: Gateway to a great destruction (ENGLISH)

Jealousy: 
Gateway to a great destruction

It was the Parent - Teacher’s day. The teachers were waiting with the marks to share the performance of the students to their parents. The parents were meeting the teachers individually discussing the achievement of their wards and receiving the progress reports.

Frances (12th std) and  Mary’s (10th std) parents had not come to school that day. Mary and Francis went to their class teacher and told them the reason as to why their parents had not come and collected their progress report, Francis was frightened when he returned home. His parents would have seen Mary’s progress report. He imagined when compared to Mary’s marks, his marks were  not that commendable. If Mary had got more than 90% in each subject she would get a gift (new dress, etc) from her parents. Thinking like this Francis reached home. When he opened the front door he heard his parents talking in the front room.

Mary, “As usual your progress report is an excellent one”, so her father was saying. “Little one, I feel proud when I think of you”, said her mother, “You have worked hard”

Francis tried to rush across the room ignoring the three. Before he reached the next room, his mother called for him saying, “Let’s see how have you fared in your exams”.

Francis thought to himself that the 3rd world war was going to begin. He turned around and reached his mother and took out the crushed progress report from his bag.

His mother opened the report and commented that, “This too were  good marks”. His father who was immersed in deep thought replied, “Hmm....”

You have scored good marks in Maths, which shows progress. Francis said, “But still I did not score good marks like Mary. I did not do well like Mary” saying so he put the family into a great shock and bang the door shut and went out of the house.

The jealousy which Francis had over Mary put their parents into a dilemma as to what to reply to Francis. Act 13:44 to 52, The jealousy of some Jews over Paul and Barnabas misled them, the way in which they had to be treated.

ANSWER PLEASE (MEDITATES)
1. Why were Francis and the Jews filled with jealousy? What were the results of their jealousy ?
2. Have you ever felt jealous over any one at any time? What results have you achieved on account of that?

ATTENTION PLEASE:

Don’t compare yourself with others. Make a list of your talents. In which talent did you do good.
Later read the names of those who put you into jealousy.
Later praise God (surprise) for those who put you into jealousy.

READ: 
1. Genesis 37 (KJV Pg. 19)
2. Acts 17:5-9 (KJV Pg. 491)
3. Psalms 37:1-8 (KJV Pg. 264)

3 Dec 2017

CELEBRATE CHRISTMAS!!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

நண்பர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்! 

கிறிஸ்துமஸ் கொண்டாட ஆயத்தமா? கிறிஸ்து ஜெயந்தியை கொண்டாட ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்! வீட்டை வெள்ளையடிக்க வேண்டும், சட்டைத்துணி எடுத்து தைக்கப்போட வேண்டும்! உறவினர்கள் வீட்டுக்கு வருவார்கள்! அவர்களுக்கு என்னென்ன பலகாரங்கள் செய்யவேண்டும் என திட்டமிட்டுக்கொண்டிருப்பீர்கள்!! அதோடு கூட சுவிஷேசத்தையும் அறிவிக்கவும் முயற்சி செய்யுங்கள்! 

ஏனெனில், கிறிஸ்துமஸ் என்றால் இயேசு பிறந்தநாள் என்று அனைவருக்கும் நன்கு தெரியும்! எனவே அந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசுவை அறிவிப்பது  மிக எளிது! அனைவரும் காது கொடுத்து கேட்ப்பார்கள்! உங்களுக்கு பேச வராது என நீங்கள் நினைத்தால், கைப்பிரதி கொடுத்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறலாம்! நீங்கள் விரும்பினால், உங்கள் முகவரியை (ஆங்கிலத்தில்), எனது கைபேசிக்கு, குறுந்செய்தியாக டிசம்பர் 10 க்குள், அனுப்பி வையுங்கள்! உங்கள் முகவரிக்கு, 20ம் தேதிக்குள், 25 கைப்பிரதிகளை அனுப்பி வைக்கின்றேன்! (நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்) கிறிஸ்துமஸ் அன்று காலையில், கைப்பிரதியை இனிப்புடன் (லட்டு, சாக்கலேட், அல்லது கேக்) உங்கள் அயலாகத்தாருக்கு கொடுத்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறுங்கள்! அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாங்குகின்றார்கள் எனப் பாருங்கள்! நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்! வீட்டுக்கு வந்து, கைப்பிரதி வாங்கிய ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து, ஜெபியுங்கள்! 

அவர்களின் இரட்சிப்புக்கு நீங்கள் கொடுக்கின்ற கைப்பிரதி ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை! ஆண்டவர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்!! இதற்க்கு அதிக பட்சம் ரூ, 1000 செலவாகும். ஆண்டவரை நீங்கள் நேசித்தீர்கள் எனில் செய்யுங்கள்! எங்கே!! கைபேசியை எடுங்கள்!! எனது எண்: 9840836690. அல்லது எனது இன்-பாக்ஸ் வந்து உங்கள் முகவரியை பொறியுங்கள்!  ஆண்டவர் உங்கள் உள்ளம் நிரம்பி வழியும்படியான மகிழ்ச்சியை தருவார்!!  

26 Nov 2017

YOU ARE HEALED BECAUSE OF JESUS' WOUNDS (TAMIL & ENGLISH)

நீங்கள்  இயேசுவின் காயங்களால் சுகமானீர்கள்!

நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
"நாம் பாவத்துக்கு செத்து, நீதிக்குப் பிழைக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" (1பேதுரு 2:24)

இந்த வாக்கின் மூலமாக உங்களை ஆசீர்வதிக்க தேவனுக்குப் பிரியமானது. இது ஒரு விசுவாச வசனம். ஜெபம் எப்பொழுதும் முடிவுக்கு நேராக வழிநடத்தும். உதாரணத்துக்கு, நீங்கள் உங்கள் சுகத்திற்காக ஜெபிக்கிண்றீர்கள் எனில் அதன் முடிவு, சுகம். விசுவாசம் என்பது, முடிவிலிருந்து ஆரம்பமாகின்றது. உதாரணத்துக்கு நீங்கள் விசுவாசிக்கும்பொழுதே சுகமாகிவிட்டீர்கள்! மேலே உள்ள வசனத்தின்படி, இதைப்படிக்கும் நீங்கள் சுகமாகிவிட்டீர்கள்! வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், என் வார்த்தைகள் ஒருக்காலும் ஒழிந்து போகாது (மத்.24:35; மாற்கு 13:31; லூக்கா 21:33) என்று சொன்ன இயேசுவின் வாக்கு இது! டாக்டர் என்ன சொன்னாலும் எப்படி அப்படியே ஏற்றுக்கொள்ளுகிண்றீர்களோ அதைப்போல ஆண்டவரின் இந்த வாக்கையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே தேவன் உங்களைத் தெரிந்து கொண்டுள்ளார். அனைத்தும் ஆண்டவரின் ஆளுகையின் கீழ் இருக்கின்றது; உங்கள் சரீரம் உட்பட!

தவறான ஜெபத்துக்கு ஆண்டவர் ஒருபோதும் பதிலளிக்க மாட்டார்! ஒரு சிலருக்குடைய ஜெபம் இதைப்போல இருக்கின்றது. ஆண்டவரே என் உயிரை எடுத்துக்கொள்ளும், எனக்கு வாழவே பிடிக்கவில்லை. இப்படி ஜெபிப்பது, தப்பான ஜெபமாகும், இதற்க்கு ஆண்டவர் பதிலளிப்பதில்லை!

உதாரணத்துக்கு, எலியாவின் ஜெபம்! 
"போதும் கர்த்தாவே என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிராக்களை பார்க்கிலும் நல்லவன் அல்ல..." (1இராஜா. 19:4) 
உடனே ஆண்டவர் தனது தூதனை அனுப்பி, எழுந்து பூசி உனக்கு இன்னும் நிறைய வேலை இருக்கின்றது எனக்கூறி எழுப்பிவிட்டார். அதைப் போல உங்களால் ஆண்டவருக்கு நிறைய காரியங்கள் ஆகவேண்டியதிருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு சாவு இல்லை! இயேசுவின் தழும்புகளால் நான் குணமானேன் என்று சொல்லி எழுப்புங்கள்! 
ஆண்டவர் ஞாபகப்படுத்துகிற வேளையிலே கவனத்தை செலுத்துங்கள்! ஆண்டவருடைய பிரசன்னமும், கிருபையும் எப்பொழுதும் உங்களோடு இருப்பதாக! ஆமென்! ஆமென்!!

YOU ARE HEALED BECAUSE OF JESUS' WOUNDS 

Greetings in the name of our Lord Jesus Christ!
According to 1 Peter 2:24, 
"who Himself bore our sins in His own body on the tree, that we, having died to sins, might live for righteousness - by whose stripes you were healed”
God is loving to bless you according to this promise. This is a verse of faith. Prayer always leads us to the to the end. For example, if you pray for your healing, the end is healing. But Faith arises from the end. 

For example, when you have faith you have been healed. The sick people who read this have been healed. Though the heavens and thd earth may pass away, my words shall never perish, thus saith the Lord Almighty. This is His promise. As we accept whatever the doctor says like wise we should accept God’s promise, moreover, even when you were in your mother’s womb, God predestined us. Everything is under God’s control, including your body.

God never answers a wrong prayer. Some peple pray like this, Lord take away my life, I do not like to live. When we pray like this it is a wrong prayer; God never answers such prayers.

For example, Elizah’s prayer, 
“It is enough! Now, Lord, take my life, for I am no better than my fathers!” (1Kings 19:4) 
Immediately God sent His angel saying, “Arise and eat, because the journey is too great for you”. Likewise God has a lot of work to do through you. Now there is no death for you. Thus get up saying I’m healed by the stripes of Jesus.

So concentrate on the work which the Lord reminds you. May the Lord’s presence and grace be with you always. Amen, Amen. 



10 Nov 2017

DEBT - 4


கடன் - பகுதி எண் 4

நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

இந்த பகுதியின் தலைப்பு, ஆலோசனை. இந்த தலைப்பு கடனுக்கு கீழ் வந்தாலும், உங்களுக்கு எந்த பிரச்சனைக்கும் ஆலோசனை பெற்று செயல்படுவது மிக நல்லது.

ஆலோசனை: பொதுவாக இக்காலத்தில், ஆலோசனை மற்றும் அறிவுரையை யாருமே ஏற்றுக் கொள்ளுவதில்லை. சொன்னால் அது அவர்களுக்குத்தான் எனக்கில்லை என்ற மனப்பான்மைதான் காரணம். ஆனால் வேதாகமம் உங்களுக்கு நீதி. 19:20ல், 
"உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு புத்திமதியை ஏற்றுக்கொள்"

ஆங்கில வேதாகமத்தில் இதே வசனம், உன்னால் முடிந்த அளவுக்கு புத்திமதியைக் கேட்டுக்கொள். அதனால் உன் எஞ்சிய காலத்துக்கும் சமாதானத்தோடு இருப்பாய், என வருகின்றது.

முதலாவது, முடிவெடுப்பது ஆலோசகரின் வேலையில்லை, நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். மேலும் நீங்கள் முடிவெடுத்தபின் ஆலோசனைக்குச் சென்றால், ஆலோசகர் கூறுவது எதுவும் உங்கள் மண்டையில் ஏறாது. ஏற்கனவே நீங்கள் முடிவெடுத்துவிட்டபடியினால், ஆலோசனை கசப்பாக தெரியும். இதற்கடுத்து என்னசெய்வதென்றே தெரியவில்லை, என்ற சூழ்நிலையில் இருந்தால், ஆலோசனையை கவனமாக கேட்பீர்கள், சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யமுடியும். ஒரு தீர்க்கமான முடிவிற்கு நீங்கள் வரமுடியும். ஏதாவது ஒன்றை செய்ய முடிவெடுத்தால், (கடன் வாங்குவது அல்லது அடைப்பது உட்பட) அதைக் குறித்ததான அனைத்து தகவல்களையும் சேகரியுங்கள். ஆனால் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்காதீர்கள். உங்களுக்கு அதைக்குறித்து விசுவாசம் இருந்தால் செயல்படுத்துங்கள்! எல்லா விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. 

இஸ்ரவேல் மக்கள், விசுவாசத்தில் செயல்படுவதற்குப் பதிலாக தங்கள் கண்களால் காணும் தகவலின் அடிப்படையில் செயல்பட்டதால், ஒரு சந்ததியே இல்லாமல் போகும் அளவிற்கு 40 ஆண்டுகள் வனாந்திரத்தில் சுற்றித்திரிந்ததை நீங்கள், எண்ணாகமம் 13,14ம், அதிகாரங்களில் இந்த சம்பவத்தை வாசிக்கலாம். ஆண்டவர் செய்ய சொல்லிவிட்டார் என்றால், தைரியமாக விசுவாசத்தில் முன்னேறிச்செல்ல முடியும். 

ஆலோசனையை எதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

1. வேதாகமம் தரும் ஆலோசனை: சங்கீதம் 119:24ல்,
"உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது."

இங்கே சாட்சி என்பது வசனத்தைக் குறிக்கின்றது. வசனம் உங்களது நல்ல ஆலோசனைக்காரர்.

யார் பணம் சம்பத்தப்பட்ட தீர்மானங்களை திறனுடன் எடுப்பார்கள்? என யோசிக்கும்போது, முதியவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனுபவசாலிகள் உங்கள் மனதிலே வருவார்கள். வேதாகமத்தில் நீங்கள் தேடினால் உங்களுக்கு அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆலோசனையைவிட, அதிக அறிவும், ஞானமும் கிடைக்குமென்று வேதவசனம் கூறுகின்றது.

வேதாகமம் உங்களுக்கு தெளிவான பாதையைக் காட்டும்போது, நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவீர்கள். ஒரு குறிப்பிட்ட பிரச்சனையைக் குறித்து, வேதாகமத்திலிருந்து நேரடியாக பதிலைப் பெற்று கொள்ளமுடியாத பட்சத்தில், தேவனுடைய பிள்ளைகளிடத்தில் இருந்து  ஆலோசனையை பெற்றுக் கொள்ளமுடியும். 

2. தேவனுடைய பிள்ளைகளிடமிருந்து கிடைக்கும் ஆலோசனை:
"நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது, அவன் கடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை" சங்கீதம் 37:30,31

நீங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவங்களாயிருக்கிறீர்கள். அவயவங்கள் 
ஒன்றை ஒன்று சார்ந்து வாழுகின்றது. ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் சில வரங்களையும் திறன்களையும் கொடுத்திருக்கிறார். அனைவருக்கும் எல்லா வரங்களும், திறன்களும் கொடுக்கப்படுவதில்லை.

தம்பதியினர்: உங்களுக்கு திருமணம் ஆகியிருந்தால், நீங்கள் ஆலோசனை கேட்க வேண்டிய நபர், உங்கள் வாழ்க்கைத்துணை. ஒருமுறை தொடர்ந்து 3 வருடங்கள், மழை, தண்ணீர் இல்லை. ஒரு குடும்பத்தின் தலைவர் தனது மனைவியிடம், வருமான குறைவை எடுத்து கூறினார். இன்னும் ஒரு சிறிய வருமானமாவது இருந்தால் குடும்பத்தைக் குறைவின்றி (கடனின்றி) நடத்தலாம் என்ற சூழல். மனைவி தனது கணவரைப் பார்த்து, எனக்கு சௌமிட்டாய் போடத்தெரியும், (தாய் வீட்டில் கற்றது) மிட்டாய் போட்டு, பக்கத்தில் இருந்த வீட்டில் உள்ள ஒருவரை விற்கும்படி அனுப்புவோம் என சொன்னார்கள். கணவன்  மனைவி ஒத்திசைவினால், குடும்பத்தின் வறுமை நீங்கியது. இதைப்போல உங்கள் குறைவில் அல்லது நிறைவில் கூட உங்கள் மனைவியிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இங்கே கணவர் குடும்பத்தின் தலைவராய் இருந்தாலும் மனைவியின் யோசனை மிக முக்கியம். உனக்கு ஒன்னும் தெரியாது எனக்கூறி உங்கள் மனைவியின் ஆலோசனையை தள்ளிவிடாதீர்கள்.

அது குடும்பத்தில் ஒற்றுமையை கொண்டுவரும். இருவரும் சேர்ந்து முடிவெடுக்கும்போது அது குடும்பத்தில் ஒரு மனத்தைக் கொண்டுவரும். உறவில் பாதிப்பு ஏற்படாது. "நான்தான் சொன்னேனே" என்னும் பேச்சுக்கே இடமில்லை. அது உங்கள் மனைவியை கனப்படுத்தி எதிர் கால  வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். ஆலோசனை கேட்கும்போது மனைவிக்கு சுயமதிப்பு உண்டாகும்.

பெற்றோர்: ஆலோசனை தருவதில் பெற்றோர் இரண்டாம் இடத்தில் வருகின்றனர். உடனே மனைவி, எனது பெற்றோரிடம் ஆலோசனை கேட்ப்போம் என்றும், கணவர் எனது பெற்றோரிடம் ஆலோசனை கேட்போம் என்றும் கேட்கலாம். அதில் தவறில்லை. (அநேக குடும்பங்களில் இங்கேதான் சண்டைகள் வருகின்றது) கணவன் மனைவியும் சேர்ந்து எடுக்கும் முடிவுக்கு உதவியாகத்தான் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், ஆதி.2:24ல், 
"இதினிமித்தம் புருஷன் தன தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" எனக் கூறுகின்றது.

அனுபவசாலிகள்: எந்த துறையில் மனிதர்கள் அனுபவசாலிகளாக இருக்கின்றார்களோ அவர்களுடைய ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளவேண்டும்.

வாலிபன் ஒருவன் சென்னைக்கு கடையில் வேலை பார்ப்பதற்காக சென்றான். வருடங்கள் பல கடந்தோடின, வியாபாரத்தில் நல்ல அனுபவம் கிடைத்தது. திருமணமானது. தனது சொந்த கிராமத்திலே ஒரு கடை ஆரம்பிக்கவேண்டும் என்று, தன் கிராமத்துக்கு திரும்பினார். வந்து அங்கே கடைவைத்திருந்த சொந்தக்காரரிடம் ஆலோசனைகேட்டார். (இது நடந்து 50 வருடங்களாகின்றது) கிராமங்கள் தேய்ந்து கொண்டு வருகின்றது, நீ சென்னைக்கே சென்று கடைவைத்து சம்பாதி; எனக்கு போட்டியாக கடைவைக்க வந்ததினால் இப்படி சொல்லுகிறேன் என்று நினைக்காதே, இங்கே உள்ள சாதக பாதகங்கள் எனக்கு நன்றாக தெரியும் எனக் கூறினார். அந்த யோசனையின்படியே சென்னையில் கடைவைத்து, பல லட்சக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியானார். 
கிராமத்துக்கு போகும்போதெல்லாம், என் அத்தான் சொன்ன யோசனையில்தான் இன்று நன்றாக இருக்கிறேன் என அடிக்கடி தனக்கு தெரிந்தவர்களிடத்திலெல்லாம் சொல்லுவார். அனுபவசாலிகளின் யோசனையும் தேவை. நீதி.15:22ல், 
"ஆலோசனையில்லாமல் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்" நீதி.11:14ல்,
"ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்"

நீங்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு ஒரு பகுதியாக இப்படிப்பட்ட யோசனைகளை ஏற்றுக்கொள்ளலாம். 

மீண்டும் ஆலோசனை பகுதி எண்: 5ல், உங்களை சந்திக்கும் வரை வணக்கம் நண்பர்களே!!


  இணையத்தில் நீங்கள் சம்பாதிக்க எளிய வழி, கீழே உள்ள தட்டியை சொடுக்கவும்: பிட் காயின் ல், சம்பாதிக்கலாம்!!

30 Sept 2017

DEBT PART - 3

கடன் - பகுதி 3

பிரியமான நண்பர்களே! 

விளம்பரங்கள் எப்படி மனிதனை கடனுக்குள்ளாக கொண்டு செல்லுகிறது? என பகுதி - 2ல் பார்த்தோம். உதாரணத்துக்கு, சண்டே டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் (சென்னை பதிப்பு) கடந்த ஜூலை 30ம் தேதி வெளியான ஒரு விளம்பரத்தை இங்கு நாம் காணலாம். இது ஒரு தனியார் வங்கியின் விளம்பரம். இது பத்திரிக்கையின் முதல் பக்கத்திலே வந்த அரைப் பக்க விளம்பரம்! விளம்பரம் இதோ!

ஆகஸ்டு ஒன்று முதல் பதினைந்து வரை தினந்தோறும் அந்த வங்கியின் ரொக்க அட்டை அல்லது கடன் அட்டையைப் பயன்படுத்தி அதிக பட்சம் பொருள் வாங்குபவர்களுக்கு, 100 கிராம் தங்கம் இலவசம்! ஒருவேளை அந்த வங்கியின் கடன் அட்டையோ, ரொக்க அட்டையோ இல்லாவிடில் அதை பெற்றுக்கொள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணை அழைக்க வேண்டும். புதிய அட்டைக்கு பதிவு செய்தாலே போதும், ரூபாய் 500 மதிப்புள்ள பணக்குறிப்பு சீட்டு (வவுச்சர்) குரோமா பல்பொருள் அங்காடியில் பொருள் வாங்க கொடுக்கப்படும்! மேலும் ரூபாய் 15,000 மதிப்புள்ள பொருட்களை அவர்கள் அட்டையைப் பயன்படுத்தி பொருள் வாங்கினால், ரூபாய் 1,000 மதிப்புள்ள பிணக்குறிப்பு சீட்டு வழங்கப்படும். அவர்களுடைய அட்டையைப் பயன்படுத்தி, பொருட்களை வாங்குங்கள், சாப்பிடுங்கள், பயணம் செய்யுங்கள், பில் கட்டுங்கள் - இப்படியெல்லாம் செலவழிக்கலாம்! இப்படிப்பட்ட விளம்பரங்கள் மக்கள் மனதை மயக்கி விரைவாக கடனுக்குள் தள்ளிவிடுகின்றது. அதிகமான விளம்பரங்களை பார்த்தாலே, அவை உங்களை அதிகம் செலவளிப்பவராக மாற்றி கடனுக்குள்ளாக கொண்டு சென்றுவிடும். 

கடன் இனிமேல் வாங்க வேண்டியது இருந்தால், என்ன என்ன கோட்ப்பாடுகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்? என்பதைக் குறித்து பார்ப்போம். 
1. கடன் தொகையோ, திரும்பிச் செலுத்தும் தவனையோ உங்களை, உங்கள் மனநிலையை இப்போதிருக்கின்ற உங்கள் வாழ்க்கைத்தரத்தைப் பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். 
2. நீக்கள் வாங்கும் கடன், உங்களுக்கு வருமானத்தைத் தருவதாக இருக்க வேண்டும். (திருமணத்துக்காக கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இயேசுவை அறியாதவர்கள், கடன் வாங்கி கோவில் குளங்களுக்கு தங்கள் நேர்த்திக் கடனை முடிப்பதற்காக செல்லுகின்றனர்) வருமானம் வராத எதற்காகவும் கடன் வாங்கக் கூடாது. 
3. திரும்பிச் செலுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் அளவிற்கு கடன் தொகை அதிகமாக இருக்கக் கூடாது. 

எப்படி திருப்பி செலுத்துவது என்பது மிகவும் முக்கியம். கடன் வாங்கும் முன்பே இதைக் கணக்கு பார்க்க வேண்டும். தொழிலிலே முதலீட்டு கடன் வாங்கலாமா? கடனைத் திருப்பி செலுத்துவதற்கு தனிப்பட்ட முறையில் உங்கள் மேல் நிர்பந்தம் இல்லையெனில் வாங்கலாம்.

வீட்டுக் கடனைப் பொறுத்த அளவில், உங்களுக்கு இரண்டு குடும்பங்கள் நடந்து கொண்ட முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுவோம். (பெரு நகரங்களில் இருக்கும் குடும்பங்களுக்கு இது மிகவும் பொருந்தி வரும்.

குடும்பம் எண் 1: இந்த குடும்பம் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தது. வாடகை வீட்டில் இருந்ததால் வீட்டுச் சொந்தக்காரருடைய தொல்லைகள் மிக அதிகம். மின்சாரக் கட்டணம் ஒரு அலகுக்கு 3 முதல் 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியதிருந்தது. வீட்டுக்கு விருந்தினர் அடிக்கடி வரக்கூடாது. (தண்ணீர் அதிகமாக செலவளியுமாம்) இன்னும் நிறைய கட்டுப்பாடுகள். அந்த நேரத்தில் வேலை செய்துவந்த பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஊரின் ஓரத்தில் உள்ள இடத்தில் வீடு கட்டுவதற்கு நிலம் வாங்கிப்போட்டனர். உடனே கட்ட பணம் இல்லாதபடியால் நாட்கள் தள்ளிப்போனது. இதற்கிடையில் பல்வேறு அடுக்ககங்களில் வீடுகள் விலைக்கு வந்தது. குடும்பத்தில் ஒருவர் ஓரளவு நன்கு சம்பாதித்ததால், ஒரு வீடு வாங்கிவிடலாம் என முடிவெடுத்து பல்வேறு வீடு கட்டுவோரிடம் சென்று வீடுகளை பார்த்தனர். இப்போது இருக்கும் வீட்டு வாடகை ரூ.600/-, மின்சாரக் கட்டணமாக 200 செலவாகியது. முறைவாசல் ரூ.20 என மாதம் ரூ.820 செலவாகியது. 
கடைசியில் ரூ. 3 லட்ச ரூபாயில் வீடு ஒன்று பிடித்துப் போனது. வீடு வாங்க கடன் கொடுத்த நிறுவனம் மாதம் செலுத்து தொகையாக, ரூ.805 என 25 வருடங்களுக்கு நிர்ணயித்தது. (கடன் கொடுத்த நிறுவனத்தில் வேலை செய்தபடியால் வட்டித் தொகை மிகவும் குறைவாக இருந்தது) வருமான வரியிலிருந்து கட்டுகின்ற செலுத்து தொகைக்கு, அரசாங்கம் வரிவிலக்கு அளித்தது. (அரசாங்கமும் கடன் வாங்க மக்களை ஒருவிதத்தில் ஊக்குவிக்கிறது) வாடகை வீட்டில் இருந்து கஷ்டப்படுவதைவிட அதே தொகையை நிதி நிறுவனத்துக்கு செலுத்தி சொந்த வீட்டில் குடியிருக்கலாம் என மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு வீட்டை வாங்கி குடியேறினர். வருடங்கள் உருண்டோடின. குடும்ப வருமானம் அதிகரித்தது. வங்கியில் கையிருப்பு கூடியது. வேறு எதிலாவது முதலீடு செய்யலாம் என முடிவெடுத்த பொழுது, மிகவும் அறிந்த ஒருவர், வீடு கட்டி விற்கும் தொழிலை புதிதாக தொடங்கினார். தனது திட்டத்தில் ஒரு வீட்டை வாங்குங்கள் என உற்ச்சாகப் படுத்தினார். சரி என ஒப்புக்கொண்டு 10 லட்ச ரூபாயில் ஒரு வீட்டை வாங்க ஒப்புக்கொண்டனர். இப்பொழுது இருக்கிற வீட்டைவிட்டு பெரிய வீடு. திட்டம் மிகவும் பிடித்துப் போனது. 10 வருடத்தில் கடன் தொகையை கட்டிவிடலாம் என முடிவெடுத்து அந்த திட்டத்தில் சேர்ந்தனர். கடன் கொடுத்த நிறுவனத்துக்கு மாதம் ரூ.12,000 கட்டவேண்டும். இருக்கின்ற வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, புதிய வீட்டில் குடியேறினர். பழைய வீட்டு வாடகை ரூ.6,000/-. மீதி பணத்துக்காக தங்கள் அன்றாட செலவுகளைக் குறைத்தனர். பிள்ளைகளுக்கு கூட செலவழிக்க கனக்குப் பார்த்தனர். மிகச் சிக்கனமாக 2 வருடங்கள் குடும்பம் நடத்தினர். கடன் கொடுத்த நிறுவனத்தைக் காட்டிலும், குறைந்த வட்டி வாங்கும் வேறொரு நிறுவனத்துக்கு தங்கள் கடனை மாற்றினார். இவர்கள் வாழ்ந்த சிக்கன வாழ்க்கையில், பள்ளியில் இவர்கள் பிள்ளைகளை மிகவும் ஏழைகளாக பார்த்தனர். இது பிள்ளைகளை பாதித்தது. ஆனாலும் வேறு வழி இல்லை. (பணத்தின் அருமையை பிள்ளைகள் கற்றுக் கொண்டார்கள் என்பது வேறு செய்தி) பணமதிப்பு இழந்தது. வருமானம் கூடியது. இப்பொழுது தங்களது வாழ்க்கையில் ஓரளவு சாதாரணமாக செலவழிக்க முடிந்தது. 

இப்பொழுது, முன்பு வாங்கிப் போட்ட இடத்தில் வீடுகட்ட முடிவெடுத்தனர். மதிப்பு 16 லட்சம். மிகப்பெரிய வீடு. 8 வருடத்தில் கடனைக் கட்டி முடிக்க வேண்டும். இரண்டு வீட்டு வாடகை, மற்றும் சிக்கன வாழ்க்கை தொடருகின்றது. இப்பொழுது பிள்ளைகளும் வளர்ந்து வேலைக்கு செல்ல, சம்பாதிக்க  ஆரம்பித்து விட்டனர். இனிமேல், இரண்டாவது குடும்பத்தைப் பார்ப்போம்.

குடும்பம் எண் 2: இவர்கள் நடுத்தர குடும்பம். கணவன், மனைவி இருவரும் வேலை செய்தனர். வாடகை வீட்டில் வாழ்ந்தனர். ஒரு வீடு குத்தகைக்கு (லீஸ்) வந்தது. 1.5 லட்ச ரூபாய். கையில் கொஞ்சம் பணம் இருந்தது. மீதிக்கு நகையை அடகு வைத்து, பி.எப். ல், கடன் வாங்கி, லீஸ் வீட்டில் குடியேறினர். இப்பொழுது முன்பு வாடகை கொடுத்துக் கொண்டிருந்த பணத்தில், நகைக்கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து, பி.எப். கடன்  சம்பளத்தில் பிடித்தம் செய்ததால், மிக சிக்கனமாக வாழ்ந்து, மீதி பணத்தை சேர்த்து வந்தனர். வீட்டுச் சொந்தக்காரர் 2 வருடங்களுக்குப் பின், மேலும் ரூ. 50,000/- கொடுங்கள் என்றார். சரியென பணத்தைப் புரட்டிக் கொடுத்தனர். மேலும் இரு வருடங்கள் சென்றது, சொந்த நிலத்தில் வீடு கட்டவேண்டும்; மதிப்பு ரூ.10,00,000/- வங்கிக்கடன். மாதம் ரூ.12,000 கட்டவேண்டும். வீட்டைக் காலி செய்த பொழுது, கொடுத்த ரூ. 2,00,000 ஐ  வாங்கிக்கொண்டார். இப்பொழுது சிக்கனமாக வாழ்ந்து, பணத்தை வங்கிக்கு கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். 

கடனைக் குறித்த இக்கட்டுரை இத்துடன் முடிவடைகின்றது. இது உங்களுக்குத் பிடித்திருந்தால் இந்த வலைத்தளத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். நன்றி! 

        

29 Sept 2017

YOU ARE THE CHILDREN OF GOD!

 நீங்கள் கடவுளின் பிள்ளைகள்!!

நண்பர்கள் யாவருக்கும் வாழ்த்துங்களுடன் வணக்கங்கள்!

"அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12)

வெகு நாட்களுக்கு முன்  நகைக்கடை ஒன்றில்   வாலிபன் ஒருவன் விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தான். அவன் தனது வேலையில் அர்ப்பணிப்பினாலும், உண்மையினாலும் படிப்படியாக உயர்ந்து, அந்த கிளையின் மேலாளர் ஆனான். மேலும் தனது திறமையைப் பயன்படுத்தி அந்த கிளையின் விற்பனையை இருமடங்காக்கினான். இதை பார்த்த அந்த கடையின் நிர்வாகம் அவனை இன்னும் 2 கிளைகளுக்கு சேர்த்து மேலாளர் ஆக்கியது. அந்த கிளைகளும் விற்பனையின் உச்சகட்டத்தை எட்டியது. எனவே தனது எல்லாக் கிளைகளுக்கு சேர்த்து பொது மேலாளர் ஆக்கியது நிர்வாகம். நல்ல சம்பளம், இதர வசதிகள்....... இப்பொழுது அக்கடையின் முதலாளி சொத்துக்களை தனது பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார். இதை அறிந்த அந்த பொது மேலாளர், நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதில் எனது நிர்வாகத்தில்தான் எங்கள் கடை பல்வேறு கிளைகளாகப் பிரிந்து விரிந்து, நல்ல வருமானத்தை ஈட்டியது. எனவே சொத்தில் ஒரு பங்கை எனக்கு கொடுக்க உத்திரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 

சற்று யோசித்துப் பாருங்கள்! நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்திருக்கும். நீதிமன்றம் நீர் எவ்வளவுதான் இந்த கடைக்காக உழைத்து இதின் வளர்ச்சிக்கு பாடுபட்டிருந்தாலும், நீர் சம்பளம் வாங்குகிற வேலைக்காரன்தான்! இந்த சொத்துக்கள் அவருடைய பிள்ளைகளுக்கே சேரும், சந்ததிதான்  சொத்துக்களை அனுபவிக்க முடியும் என தீர்ப்பளித்தது.

இதேதான் மேலே நீங்கள் வாசித்த வசனமும் கூறுகின்றது. ஆண்டவருக்கு உரியதெல்லாம், உங்களுக்குத்தான், (அதிகாரத்தோடுகூட) நீங்கள்தான் அனுபவிக்க முடியும். இயேசு சிலுவையில் சம்பாதித்து வைத்திருக்கும் அனைத்து ஆசீர்வாதங்களும் உங்களை சேர்ந்தது! 

ஒருவேளை அந்த நகைக்கடைக்காரரின் பிள்ளைகள் துன்மார்க்கமாக ஜீவித்தாலும் அனுபவ பாத்தியதை அனைத்தும் பிள்ளைகளுக்குத்தான்.  காரணம் பிள்ளைகள் என்ற மாறாத, உரிமையான உறவுதான்! 

ஒருவேளை நீங்கள் ஆண்டவரைப் பார்த்து நான் தகுதி இல்லாதவன் (ள்), குப்பை, புழு, ஒன்றுக்கும் உதவாதவள் (ன்) என்றெல்லாம் ஜெபித்திருந்தாலும், (ஆண்டவருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள் என்பது இப்படிக்கு கூறுவது அல்ல, நீங்கள் இப்போதிருக்கும் நிலைமையை அப்படியே ஆண்டவரிடம் ஒத்துக்கொள்ளுவதும், ஆண்டவருடைய மகிமையை-வல்லமையை-அன்பை உயர்த்திப் புகழுவதும்தான்) ஆண்டவர் என்னவோ உங்களை தனது மகளாக, மகனாகத்தான் பார்க்கின்றார். அவர் வானத்தையும், பூமியையும் படைத்தவர். அவர் உங்கள் சொந்த தகப்பன் என்ற உரிமையின் அடிப்படையில் கெட்டப் பெற்று கொள்ளவேண்டும்! இயேசு சிலுவையில் சம்பாதித்த அனைத்தும் பாவமன்னிப்பு (முக்காலத்துக்கும்), சுகம், சாபத்திலிருந்து விடுதலை உங்களுக்கு சொந்தமானது. இதில் ஏதாவது ஒன்றில் நெருடல் வந்தால், கடவுளுடைய பிள்ளைகள் என்ற அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்தவேண்டும். நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள்! 

உங்கள் பிள்ளைகள் உங்கள் விருப்பத்தினாலோ, செயல்களினாலோ பிறவாமல் தேவனால் பிறந்தவர்கள். மேலும் 1பேதுரு 1:23ன் படி,
"அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கின்றீர்களே" (பிறப்பிக்கப் பட்டிருக்கின்றீர்களே ) 

இங்கே நான் குறிப்பிடுவது உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் சேர்த்து. இதை நீங்கள் விசுவாசிக்கிண்றீர்களா? 

விசுவாசித்தால் வரும் பலன்:
"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்ய மாட்டான்" (1யோவான் 3:9). 

மேலும், இந்த வசனம் உங்களை உற்ச்சாகப்படுத்துகின்றது. 1யோவான் 5:18ல்,
"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான். பொல்லாங்கன் அவனைத் தொடான்"
உங்கள் பிள்ளைகள் பாவஞ்செய்ய மாட்டார்கள் என நீங்கள் அறிந்திருக்கின்ரீகளா? 

எனவே பிள்ளைகளைக் குறித்த பயம், கவலைகளை விட்டொழியுங்கள். பிள்ளைகளைக் குறித்த பயம் அல்லது கவலை வந்தால் இந்த வசனங்களை, (உங்களுக்கு ஆண்டவர் அதிகாரம் கொடுத்திருக்கின்றார்) பயன்படுத்துங்கள், அறிக்கை செய்யுங்கள். சமாதானத்தைப் பெற்று கொள்ளுவீர்கள்! அறிக்கை செய்ததின் பலனைப் பெற்று கொள்ளுங்கள்! 

உன் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள், அவர்களுடைய சமாதானம் பெரிதாய் இருக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, தமது பிள்ளைகளான உங்களுக்கு பரிசுத்த ஆவியை-நன்மைகளை வழங்காதிருப்பாரோ? நிச்சயமாகவே கொடுப்பார். 

இயேசு கிறிஸ்து, கூனியை சுகப்படுத்தியதை நீங்கள் அறிவீர்கள், சகேயு வீட்டுக்கு இரட்சிப்பு வழங்கியதையும் அறிவீர்கள்! இந்த இரு நபர்களிடமும் ஆண்டவர் பார்த்தது என்ன தெரியுமா? கூனியைப் பார்த்து, இவளும் ஆபிரகாமின் குமாரத்தியாய் இருக்கிறாள் என்றும், சகேயுவை பார்த்து, இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாய் இருக்கிறானே என்றும் கூறினார். ஆண்டவர் பார்த்த தகுதி இதுதான். 
"நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராகவும் இருக்கின்ரீர்கள்" (கலா.3:29)

உங்களை ஆசீர்வதிக்க ஆண்டவர் உங்களிடம் பார்க்கும் ஒரே தகுதி, நீங்கள் தேவனுடைய பிள்ளைகள்; ஆபிரகாமின் சந்ததியார். எனவே தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே நெருங்கிச் சேருங்கள்!  

ஜெபிப்போம்!

எங்களை நேசிக்கின்ற அன்பின் பிதாவே! இயேசுவின் நாமத்தில் உமக்கு துதி, கணம், மகிமையை செலுத்துகிறோம்! இதை படிக்கின்ற அன்பு நண்பர்கள் யாவரையும் விசுவாசத்தின்  மூலமாக, உமது பிள்ளைகளாக தெரிந்து உமது அதிகாரத்தை தந்திருப்பதற்காய் உமக்கு நன்றி! உமது பிள்ளைகள் என்ற சுதந்திரத்தினால் வரும் அத்தனை ஆசீர்வாதத்தையும் பெற்று அனுபவிக்கவும், பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்கவும், எங்களை இந்த செய்தியின் மூலமாய் நடத்தியதற்காய் நன்றி!! நாங்களும் எங்கள் சந்ததியும் இயேசுவின் நாம மகிமைக்காக வாழ ஒப்புக்கொடுக்கின்றோம்! நாங்கள் பெற்று இருக்கிற இந்த பேற்றை எமது இரட்சிக்கப்படாத நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், மற்றும் அக்கம்பக்கத்திலுள்ளோர் அனைவரும் பெற்றுக்கொள்ள ஜெபிக்கிறோம்! அதற்கான பிரயாசங்களை ஆசீர்வதியும்! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென். 

23 Aug 2017

CHRIST TOOK AWAY THE CURSE THE LAW PUT ON US

கிறிஸ்து உங்களுக்காக சாபமாகி உங்கள் மீது இருந்த சாபத்தை நீக்கிவிட்டார் 

நாம் எதை விசுவாசிக்க வேண்டும்? 

1தெசலோனிக்கேயர் 4:14ன் படி,
"இயேசுவானவர் மறித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே...."

இயேசு சிலுவையில் மரித்ததின் பலன் என்ன? அதை விசுவாசிக்கிண்றீர்களா? இயேசு சிலுவையில் செய்து முடித்ததை நீங்கள் விசுவாசிக்கிண்றீர்களா?

1. உங்கள் பாவம் மன்னிக்கப்படுகின்றது. இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டதினால் சிந்திய இரத்தத்தினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது. 
"அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7)

2. நீங்கள் சுகமாகின்றீர்கள். 
"நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" (1பேதுரு 2:24)

3. உங்கள் மேலிருந்த சாபம் நீக்கப்படுகின்றது.

"மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்" (கலாத்தியர் 3:13)

4. உங்களை குற்றங்சாட்டுகின்ற பிசாசை சிலுவையிலே ஜெயித்தார். 
"நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குழைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்க கோலமாக்கி அவைகளின் மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்" (கொலோ. 2:14,15)

மேலே உள்ளவற்றில், சாபங்கள் நீங்கியதைப்பற்றி தியானிப்போம். நியாயப்பிரமாணத்தின் சாபங்கள்: 
"இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்துக்கு செவி கொடாதேபோவாயாகில் இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்" (உபாகமம் 28:15)
இந்த வசனத்துக்குப் பின் 68ம் வசனம் வரைக்கும் சாபங்கள்தான். 

இந்த சாபங்களெல்லாம் இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டதினால் உங்களை விட்டு நீக்கப்பட்டது. இயேசு எனக்காக மரித்தார் என்று சொல்லும் நீங்கள், என் மீது வந்த சாபங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார் எனவும் கூறவேண்டும். அதாவது உபாகமம் 28:15ன்படி, ஆண்டவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனாலும், அதனால் வரும் சாபங்கள் அனைத்தும் (வானமும், பூமியும் உள்ளளவும்) நீக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் வெறுமனே பாவ மன்னிப்புக்காக மட்டுமல்ல. 

இயேசுவானவர் சிலுவையில் செய்து முடித்தவைகளை விசுவாசிக்க நீங்கள் அழைக்கப்பட்டு இருக்கின்ரீர்கள். செய்து முடித்தவைகளின் மீது வைக்கப்படுவதுதான் விசுவாசம். இனிமேல்தான் நடக்கும் என எதிர்பார்ப்பது நம்பிக்கை. இதன் வித்தியாசத்தை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். விசுவாசம் என்பது இயேசு ஏற்கனவே சிலுவையில் செய்து முடிக்கப்பட்டவைகளில் வைப்பது. ஆண்டவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போகின்ற, உனது சாபங்கள் எல்லாம் உங்களை விட்டு நீக்கப்பட்டது. இனி,

மனிதர்களுக்கிடையேயான சாபம்: 
"அடைக்கலான் குருவி அலைந்து போவது போலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும் காரணமில்லாமலிட்ட சாபம் தாங்காது" (நீதி. 26:2)

எந்த மனிதராவது, உங்களை சாபமிட்டால், இந்த வசனத்தை மனதிற் கொண்டு, சாபத்தை அலட்சியப்படுத்திவிடுங்கள். மேலும், 
"...... உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்..." (மத்தேயு 5:44)

 ஒருவேளை உங்கள் மீது தவறு இருந்து அதாவது காரணத்தோடு சாபமிட்டால், நேரடியாக மன்னிப்புக் கேட்டுவிடுங்கள். 

ஜெபம்:
எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே, இயேசுவின் நாமத்தில் உமக்கு ஸ்தோத்திரம்! கல்வாரி சிலுவையில் நீர் பட்ட பாடுகளுக்காய் உமக்கு ஸ்தோத்திரம்! அதன் மூலமாக நியாயபிரமாணத்தை நாங்கள் மீறியதால் வந்த  சாபத்தை எங்களை விட்டு என்றென்றும்   நீக்கியதற்காய் நன்றி! சகமனிதர்கள் மூலமாய் வருகின்ற சாபத்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காய் நன்றி! எங்களின் மூலமாக இயேசுவின் நாமம் சதாகாலங்களிலும் மகிமைப்படுவதாக. இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே! ஆமென், ஆமென்.
     
நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்! சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாகும் என்ற வசனத்தின்படி விடுதலையோடு வாழ உங்களை ஆண்டவர் வழிநடத்துவாராக! வசனம் என்னும் பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! உபயோகப்படுத்துங்கள்!! கோபம், எரிச்சல், பொறாமை என்னும் மாம்சத்தின் கிரியைகளை கொண்டு வருகின்ற பிசாசை ஜெயித்துவிடுங்கள்!!! மீண்டும் வாழ்த்துக்கள்!!!!

10 Aug 2017

DEBIT PART - 2

கடன் !!
(இரண்டாம் பகுதி)
கிறிஸ்துவில் பிரியமான நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்! இரண்டாம் பகுதியாக நடைமுறையில் எவ்வாறு கடனைத் தீர்க்கலாம்? என்ற தலைப்பில் நாம் பார்க்கலாம்.

1. முதலாவது ஜெபம்: கடனை விரைவாக திருப்பி செலுத்தி அதைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறவர்களுடைய உண்மையை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். விதவைப்பெண்ணிற்கு (2இராஜாக்கள் 4ம் அதிகாரம்) உடனடியாக உதவி செய்ததைப்போல அல்லது சிறிது காலத்துக்குப் பின், அவ்வாறு செய்யலாம். (கையில் பணம் இருந்தால் உடனடியாக கடனைத் திரும்பிச் செலுத்த முன்னுரிமை கொடுங்கள்) மாத தவணையாக  திரும்பிச் செலுத்த ஒரு சிறு தொகைதான் இருந்தாலும், கடனை திரும்பிச் செலுத்துங்கள். கர்த்தர் உங்கள் முயற்சிகளை வர்த்திக்கப் பண்ணுவார்.

2. வரவு செலவைத் திட்டமிடுங்கள்: வரவு செலவு திட்டமானது, நீங்கள் முன்கூட்டியே உங்கள் செலவுகளை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, உதவியாக இருக்கும்.

3. உங்கள் உடமைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்: உங்கள் உடைமைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு தேவையற்றதாக இருக்குமென்றால், அதை விற்று கடன் சுமையிலிருந்து விரைவாக நீங்கள் வெளியேறிவிடலாம்.

4. உங்கள் கடன்களை பட்டியலிடுங்கள்: அநேகர் எவ்வளவு கடன் இருந்த போதிலும், துல்லியமாக எவ்வளவு தங்களுக்கு கடன் இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். இது இயல்பானது. உங்களுக்குத் பிடிக்காததை நீங்கள் நினைக்காமலிருந்தால், ஒருவேளை அது உங்களை விட்டு மறைந்து போய்விடும் என்ற எண்ணம் இருப்பினும், உங்களுடைய கடன்களின் பட்டியல் இருந்தால்தான் உங்களுடைய நிதி நிலைமையை நீங்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும். (ஒருவர் இப்படியாகச் சொன்னார், 2 இலட்சரூபாய் கடன் இருக்கின்றது, கடன் எனக்கு அல்ல. என் தொழிலுக்கு இருக்கின்றது என்று)

5. கடனைத் திருப்பி செலுத்துவதற்கான முயற்சிகள்: அ) முதலாவது சிறிய கடனைத் திரும்பிச் செலுத்துங்கள். இதை நீங்கள் உங்கள் குறிக்கோளாகக் கொண்டால், ஒவ்வொரு கடனாகக் குறையக் குறைய மீதமிருக்கும், கடன்களை திருப்பி செலுத்த அது உங்களை உற்ச்சாகப் படுத்தும். ஆ)அதிக வட்டியுள்ள கடன்களை திரும்பிச் செலுத்த முன்னுரிமை கொடுங்கள். 

6. உங்கள் வருவாயை அதிகரிக்க முடியுமா எனப் பாருங்கள்: இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் உங்கள் வருவாயை அதிகரிக்க முடியுமா? எனப் பாருங்கள். அப்படி வரும் அதிக வருமானத்தை கடனை அடைப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். வருவாயை அதிகரிக்கும் முயற்சியானது, கர்த்தரிடமும், உங்கள் குடும்பத்தின் மேலும் உங்களுக்கு இருக்கின்ற உறவைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். (அதாவது ஞாயிறு அன்றும் வேலைக்குச் சென்று விடாதிருங்கள். குடும்பத்தோடு நேரம் செலவிடுவதை விட்டு விடாதீர்கள்)

7. சிக்கனம்: செலவை எப்படி குறைக்கலாம் என்று யோசித்து, முடிவெடுங்கள்.

8. கடன் அட்டையை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்: உங்களுக்கு கடன் அட்டை இருந்தால், அதை பயன்படுத்துவதை அறவே நிறுத்த வேண்டும். பணத்துக்குப் பதிலாக கடன் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் வழக்கமான செலவை விட 1/3 மடங்கு அதிகமாக செலவளிக்கின்றார்கள்.

9. போதும் என்ற மனநிறைவைக் கொள்ளுங்கள்: நுகர்வோரை வியாபாரிகள் பல்வேறு முறைகளில் தங்கள் பொருட்களை வாங்கும்படி தூண்டுகின்றனர். அவைகளில் ஒன்று, விளம்பரங்கள். உதாரணத்துக்கு 30/07/2017 ஞாயிறு அன்று சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரம் இது. ICICI Bank Credit & Debit Cards Daily highest spender wins 100 gms of GOLD. (In the form of a voucher worth Rs.3 lakh from Tanishq) Offer period July 16, 2017 to August 15, 2017. உங்களுக்கு இருப்பது போதாது என்ற அதிருப்தியான எண்ணத்தை உருவாக்குவதே விளம்பரங்களின் நோக்கமாக இருக்கின்றது. 

ஒரு அமெரிக்க கம்பெனி, தங்கள் நாட்டில் அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்று, மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றில், தொடங்கியது. ஒரு மாதமாகியது, மாத சம்பளம் பெற்றுக் கொண்ட மக்கள், அடுத்த மாதத்திலிருந்து யாருமே வேலைக்கு வரவில்லை. ஒரு சில மாதங்கள் கம்பெனி மூடிக் கிடந்தது. பின்பு அதன் முதலாளி, அந்த கிராமத்தின் தலைவரிடம் சென்று விசாரித்தார். அவர், எங்களுக்கு எல்லாம் இருக்கின்றது! நாங்கள் ஏன் வேலை செய்யவேண்டும்? என சொன்னாராம். பின்பு யாரோ ஒருவர், அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும், விலைக்கு வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலை தபாலில் அனுப்பினாராம். அதற்கு பின்பு அந்த தொழிற்சாலைக்கு தொழிலாளர் பிரச்சனையே இல்லை.

உங்களுடைய பொருளாதாரத்தை பொருட்களின் நுகர்வு எவ்வளவு பாதிக்கின்றது என்பதற்கான 3 காரணங்கள் இதோ! 1. நீங்கள் எவ்வளவு அதிகமாக தொலைக்காட்சி பார்க்கிண்றீர்களோ அவ்வளவு அதிகமாய் செலவு செய்கின்றீர்கள். 2. பத்திரிகையில் எவ்வளவு அதிகமாய் பொருட்களின் பட்டியலையும், விலையையும் பார்க்கிண்றீர்களோ அவ்வளவு அதிகமாய் செலவு செய்கின்றீர்கள். 3. கடைத்தெருவுக்கு நீங்கள் எவ்வளவு அதிகமாய் செல்லுகிண்றீர்களோ அவ்வளவு அதிகமாய் செலவளிக்கிண்றீர்கள்! தொலைக்காட்சியில் வருகின்ற விளம்பரங்களை பார்த்துவிட்டு எனக்கு அதை வாங்கிக்கொடுங்கள் எனக் கேட்காத குழந்தைகளே உங்கள் வீடுகளில் இருக்க மாட்டார்கள். இதுவே உங்களுக்கு சான்று.

"கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. போதுமென்கிற மனதுடன் கூடிய தேவபக்தியே ஆதாயம்" 1 தீமோ. 6:5,6

இயேசுவை ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பு ஒருவர், தன் நண்பர்களோடு, சினிமாதியேட்டரில், உயர்ந்த கட்டணத்திலும், உயர்தரமான உணவு விடுதிகளில் சாப்பிடவும் தனது பணத்தை தண்ணீராய் செலவிடுவாராம். இயேசுவை ஏற்றுக்கொண்டபின் எல்லோரையும் கவருவதற்குப் பதில், புதிய கிறிஸ்தவ நண்பர்களோடு, விலை மலிவான உணவு விடுதியில் தனது வாழ்க்கைக்குத் தேவையான வேதாகம சாத்தியங்களை பேசி புதிய உறவுகளை வளர்த்துக் கொள்ளுகின்றாராம். கிறிஸ்துவில் மனா நிறைவோடு இருப்பது மிகுந்த ஆதாயம்.

9. வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர கொண்டுவர முயலுங்கள்: அநேகர் தங்கள் கடனிலிருந்து மீளுவதற்காக தங்களுடைய வாழ்க்கைத்தரத்தை குறைப்பதற்கு ஆயத்தமாய் இருக்கின்றனர். சிலர் தங்கள் வீட்டை விற்றுவிட்டு சிறிய வீட்டை வாங்கி இருக்கின்றனர். அல்லது வாடகை வீட்டுக்குச் சென்று இருக்கின்றார்கள். பலர் தங்கள் விலை உயர்ந்த கார்களை விற்றுவிட்டு, விலை குறைந்த கார்களை பணம் கொடுத்து வாங்கி இருக்கின்றார்கள். சரியாகச் சொன்னால் அவர்கள் குறைந்த காலத்தில் தங்கள் கடனிலிருந்து மீளுவதற்காக அவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை தற்காலிகமாக தியாகம் செய்திருக்கின்றார்கள்.

10. மனம் தளராதீர்கள்! கடனிலிருந்து மீளுவதற்கான இந்த முயற்சி மிகவும் கடினமானது. அதற்க்கு கடின உழைப்பு தேவை. 3 காரியங்களை நீங்கள் கட்டாயம் செய்யவேண்டும். 
1. உங்கள் வருவாயை விட அதிகமாக செலவழிப்பதை நிறுத்துங்கள். 
2. கடனுக்கான வட்டியை செலுத்த தவறாதீர்கள்.
3. கடன் முழுவதையும் அடைத்துவிடுங்கள்!
கடனிலிருந்து மீளுவது எளிதானதல்ல என்றாலும் அதனால் கிடைக்கும் விடுதலையானது உங்களை உற்சாகப்படுத்தும்.

சில சிக்கன நடவடிக்கை: கார் வாங்கினால் அந்த காரை 7,8 வருடங்களாவது பயன்படுத்துங்கள். புதிய மாடல் கார் கவர்ச்சியாக இருக்கின்றது என புதிய மாடலுக்கு தாவி விடாதிருங்கள்!! ஒரு ஸ்மார்ட் கைபேசி வாங்கினால், குறைந்த பட்சம், 5 வருடங்களாவது பயன்படுத்துங்கள்! இது ஆடம்பரத்திலிருந்து உங்களை விலக்கிக் காக்கும். ஒரு வீடு வாங்க, அல்லது கட்ட முடிவெடுத்து வங்கியில் கடன் வாங்குகிண்றீர்கள். அந்த கடன் தொகையோ, திரும்பிச் செலுத்தும் தவனையோ உங்களை / உங்கள் மனநிலையை இப்பொழுதிருக்கிற வாழ்க்கைத் தரத்தை பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த பகுதி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகின்றோம்! இந்த கட்டுரை எமது ஈஸ்கட்டோஸ் என்னும் மாதப் பத்திரிகையில் இருந்து கொடுக்கின்றோம்! உங்களுக்கு பத்திரிகை வேண்டுமானால், உங்கள் முகவரியை 9840836690 என்ற கைபேசி எண்ணுக்கு குறுங்செய்தியாக அனுப்பிவைக்கவும்!! நன்றி!!!

22 Jun 2017

ENVY - GATE OF THE EVIL

பொறாமை - தீமையின் வாசல் 

விசுவாசிகள் மற்றும் நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

அது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் நாள். பிள்ளைகளின் படிப்பு எந்த அளவில் இருக்கின்றது என்பதை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியலுடன் காத்துக் கொண்டிருந்தனர். பெற்றோர்கள் ஆசிரியர்களை பார்த்து தங்கள் பிள்ளைகளின் படிப்பில் உள்ள முன்னேற்றங்களைக் குறித்து, தனித்தனியாக சந்தித்துப் பேசி, மதிப்பெண் பட்டியல்களை வாங்கி கொண்டிருந்தனர்.

பிரான்சிஸ் (12ம் வகுப்பு), மேரியின் (10ம் வகுப்பு) பெற்றோர் அன்று பள்ளிக்கு வரவில்லை. மேரியும், பிரான்சிஸும் காரணத்தைச் சொல்லி அவரவர் வகுப்பாசிரியர்களிடம் சென்று மதிப்பெண் பட்டியலை வாங்கி கொண்டனர். பிரான்சிஸ் வீட்டுக்கு பயத்தோடு சென்றான். தனது பெற்றோர் மேரியின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்திருப்பார்கள். தனது மதிப்பெண்கள், அவளோடு மதிப்பெண்களோடு ஒப்பிட்டால், அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என எண்ணிப்பார்த்த்தான். "அவர்கள், அவள் 90% க்கு மேல் வாங்கியிருக்கும் ஒவ்வொரு படத்துக்கும், ஒரு அன்பளிப்பு என (புத்தாடை, தின்பண்டம் அது, இது என) வாங்கிக் கொடுப்பார்கள். இப்படியே யோசித்துக் கொண்டு வீட்டை அடைந்தான். முன் கதவைத் திறந்தபொழுது, முன் வீட்டில் இருந்த அவனது பெற்றோரின் பேச்சைக் கேட்க நேரிட்டது.

"மேரி, வழக்கம் போலவே இது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த மதிப்பெண் பட்டியல்" என உணர்ச்சிபொங்க அப்பா கூறிக்கொண்டிருந்தார். 
"செல்ல்ல்ல்ல குட்டி, உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது, நீ மிக கடுமையாக உழைத்திருக்கிறாய்" இது அம்மா.

பிரான்சிஸ் அவர்கள் மூவரையும் தாண்டிச் செல்ல முயன்றான். அவன் அடுத்த அறைக்கு செல்லுவதற்கு சற்றுமுன், அவனது அம்மா, "பிரான்சிஸ் இங்கே வா.... இந்த முறை நீ எப்படி செய்திருக்கிறாய்? எனப் பார்ப்போம்"

"மிக நல்லது....." எனக் கூறிய பிரான்சிஸ், இப்பொழுது உலகப்போர் 3 ஆரம்பமாகப் போகிறது என நினைத்தான். திரும்பி அம்மாவிடம் வந்து, அவனது பையில் இருந்த கசங்கி இருந்த மதிப்பெண் பட்டியலை எடுத்து நீட்டினான்.

அம்மா அதை பிரித்துப் பார்த்து, "நல்லது இதுவும் நல்ல மதிப்பெண்கள்தான்" சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவனது அப்பா, "ஹும்ம்ம்ம்ம்ம்...."
"கணக்கிலே இந்த முறை நல்ல மதிப்பெண்கள், முன்னேற்றந்தான்......"

பிரான்சிஸ், "சரிதான்..... ஆனாலும் நான் மேரியைப்போல நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை. ஒரு பாடத்திலும் 90 மதிப்பெண்கள் எடுக்கவில்லை, அவளைப்போல நான் நன்றாகவே செய்யவில்லை" இப்படிக் கூறிவிட்டு அந்த குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு வேகமாக கதவை அடித்து சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

பிரான்சிஸ், மேரிமீது கொண்ட பொறாமை அவனது பெற்றோர்களுக்கு பதில் கூற வேண்டியதை பாதித்தது. அப்போஸ்தலர் நடப்படிகள் 13:44-52ல், சில யூதமக்கள், பவுல் மற்றும் பர்னபாவிடம் கொண்ட பொறாமை, அவர்களை நடத்த வேண்டிய விதத்தைப் பாதித்தது.

பதிலளியுங்கள் (தியானியுங்கள்):

1. ஏன் பிரான்சிஸ் மற்றும் யூதர்கள் பொறாமையினால் நிறைந்தனர்? அவர்களின் பொறாமையின் பின் விளைவுகள் என்ன?

2. யார் மீதாவது நீங்கள் பொறாமைப்பட்டிருக்கின்ரீர்களா? அதன் மூலம் என்ன பின் விளைவுகளை சந்தித்தீர்கள்?

கவனிக்க: 

நீங்கள், பிறரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதிருங்கள்.

உங்கள் திறமைகளை பட்டியலிடுங்கள், எதிலெல்லாம் நல்லவைகளை செய்தீர்கள்? பின்பு உங்களை பொறாமை என்னும் சோதனைக்குள்ளாக்கிய நபர்களின் பெயர்களை படியுங்கள்.

உங்களை பொறாமை கொள்ளச்செய்த (சரியாக சொன்னால் உங்களை ஆச்சரியப்படுத்திய, கிளர்ச்சியூட்டிய) நபர்களுக்காக ஆண்டவரைத் துதியுங்கள்.

மேலும் படிக்க: 1) ஆதியாகமம் 37 (பக்கம் 48)
2) அப்போஸ்தலர் 17:5-9 (பக்கம் 187)
3) சங்கீதம் 37:1-8 (பக்கம் 691)


       
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நண்பர்களே!! உங்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகின்றேன்! உங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாயிருக்கும் இதைப்போன்ற வெளியீடுகளை, உங்கள் நண்பர்களுக்கும் (கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவரல்லாதவர்கள்) என எல்லாருக்கும் அறிமுகம் செய்யுங்கள்! நன்றி!!

9 May 2017

CHILDREN'S BIBLE SCHOOL

சிறுவர் வேதாகம பள்ளி
அன்பு நண்பர்கள் யாவருக்கும் வணக்கம்!
சிறுவர் வேதாகம பள்ளி 2/05/2017 செவ்வாய் அன்று ஆரம்பித்து 6/05/2017 சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது. கடைசி நாள் ஊர்வலம் மட்டும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதை கீழே வெளியிட்டுள்ளேன்! சிறுவர்களின் வாயினால் ஏற்பட்ட துதியினால் பெரம்பூர், அருந்ததி நகர் பகுதி நிரம்பி வழிந்தது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக! பெரம்பூரில் எழுப்புதல் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!
தொடர்ந்து ஞாயிறு பள்ளியும் நடைபெற்று வருகின்றது! உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்! சனிக்கிழமை மாலை பிள்ளைகள் 5:15க்கு, கூடிவந்தனர்! அனைவருக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டது. (ஜீவ கிரீடம், நீதியின் கிரீடம்) சிறுவர் வேதாகம பள்ளியில் கற்றுக் கொடுத்த பாடல்களை பாடிக்கொண்டே ஊர்வலம் சகோதரி. லிடியாவின் ஆரம்ப ஜெபத்துடன் ஆரம்பமானது! ஆண்டவரது நாமம் மகிமைப்பட்டது! 
லிடியாவின் ஆரம்ப ஜெபம்!
 ஆரம்ப நிலையில் உள்ள பவனியின் சில புகைப்படங்கள்!



இந்த இடத்தில்தான் சிறுவர் வேதாகம பள்ளி நடத்தப்பட்டது!

தெருக்களில் பாடல்களை பாடி......




என்னோடுகூட சகோதரி.லீதியாள், சகோதரி. மோகனவல்லி ஆகியோர் இணைந்து ஒரு குழுவாக இந்த பள்ளி  நடத்தபட்டது. நன்றி!