21 Nov 2014

NO EVIL BEFALL.....

பொல்லாப்பு உனக்கு நேரிடாது
"ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது" (சங்கீதம் 91:1௦)

ந்த இடத்தில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
இந்த வசனத்தின் மூலமாக ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக....  இதற்கு முந்தய வசனத்தின்படி உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர்  உன்னதமானவராகவும் அடைக்கலமானவராகவும் இருந்தால் பொல்லாப்பு உங்களுக்கு நேரிடாது. 
 
ங்கள்  வாழ்க்கையில் ஆண்டவரை உன்னதமான இடத்தில் (முதலிடத்தில்) வைக்க வேண்டும். எதை ஆரம்பித்தாலும், செய்தாலும் ஆண்டவரிடம் கேட்க வேண்டும். ஆண்டவருடைய சித்தம் என்ன என்பதைத் தேடவேண்டும். பிரச்சனைகள் வரும் பொழுது ஆண்டவரை அடைக்கலமாக - புகலிடமாகக் கொள்ளவேண்டும். ஆண்டவரையே வழுமிடமாக கொள்ளவேண்டும்.
 
முன்பு ஒரு காலத்தில், ஆஸ்டின் என்ற ஒரு ஊழியக்காரர், ஒரு குறிப்பிட்ட ஊரில் பிரசங்கிப்பதர்க்காக சில உடனூழியர்களோடு சென்றார். இங்கு அநேகரை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்காக வருகின்றார் என கேள்விப்பட்ட கிறிஸ்தவ விரோதிகள் சிலர்,  அவரை கொல்லுவதற்காக அவர்கள் வரும் வழியில் ஆயுதங்களோடு   பதுங்கி இருந்தனர். ஊழியர்கள் வந்த பாதை இரண்டாகப் பிரியவே, அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவனிடம் வழியை விசாரித்தனர். அவன் சரியான வழியை காட்டாமல் சுற்று வழியைக் காட்டிவிட்டான். இவர்கள் நீண்ட தொலைவு நடந்து வந்து குறிப்பிட்ட கிராமத்தை அடைந்தனர். பின்பு விஷயம் தெரிந்து, தங்களது வசிப்பிடமாக/உறைவிடமாகக் கொண்ட  ஆண்டவரை மகிமைப்படுத்தினர். (அபாய நேரத்தில் பாதுகாப்பு) 
 
நீங்கள் பிற மனிதர்களால் ஏமாற்றப் பட்டுவிட்டோம்/ வஞ்சிக்கப் பட்டுவிட்டோம் என நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களா? ஆண்டவர் பொல்லாப்புக்கு உங்களை விலக்கிக் காத்துக்கொண்டார் என விசுவாசியுங்கள். யோபு 5: 19, 2௦ல்,
 
"ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக் மீட்பார்".
 
ஞ்ச காலத்திலே விதவையையும், தானியேலை சிங்கத்தின் கெபியிலும், தேவனுடைய பிள்ளைகளை சூளையின் சூட்டிலிருந்தும் (மரணத்தின் பிடியிலிருந்து) பாதுகாத்த தேவன் உங்களையும் பாதுகாத்து நடத்துவார். 
 
விஷம் அல்ல, பாதுகாப்புதான் மாற்று மருந்தை உண்டாக்கும். யோசேப்பு குழியிலே விழ தள்ளப்பட்டான், எகிப்திற்கு விற்கப்பட்டான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவனுக்கு ஆண்டவருடைய பாதுகாப்பு இருந்தது. உயர்த்தப்பட்டான். எஸ்தர் தான் செத்தாலும் சாகிறேன் என்றாள். விசுவாசம் இடர்களுக்கு மத்தியில் பாதுகாப்பை உண்டாக்குகின்றது. 
 
ப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும், எடுத்துக்கொண்ட முயற்சியில் எந்த இடர்பாடுகளை நீங்கள் சந்தித்தாலும் ஆண்டவரை உன்னதமானவராக கொண்டிருக்கிற உங்களைப் பாதுகாப்பார். 
 
ண்டவரையே நம்முடைய உறைவிடமாக கொண்டிருக்கிறபடியால் வாதை (வெறுமனே வியாதி மட்டுமல்ல, குடும்பத்திலே ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொள்ளுதல், சண்டை சச்சரவு, அமைதிக்கு பங்கம், பிறர் மூலமாக குடும்பத்திலே வரக்கூடிய பிரச்சனைகள் இவைகள்)  நம்முடைய கூடாரத்தை அணுகாதபடி பாதுகாப்பார்.
 
ஜெபிப்போமா?
 
எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வருகின்றோம். இந்த வாக்குத்தத்தம் எங்களுடைய குடும்பத்திலே நிறைவேறுவதற்காய் நன்றி செலுத்துகின்றோம். எங்கள் வாழ்நாளெல்லாம் எங்களுக்கு வரும் ஒவ்வொரு இடர்பாடுகளிலும் பொல்லாப்பு எங்களை அணுகாதபடி பாதுகாப்பதற்க்காய் நன்றி செலுத்துகின்றோம். எங்கள் வீடுகளிலே எப்பொழுதும் உமது பிரசன்னம் இருக்கிறபடியால் நன்றி.... இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள்  பிதாவே. ஆமென்.